தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை ரத்து செய்யப்படும்: திருப்பதியில் அண்ணாமலை திட்டவட்டம்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பதியில் நடைபெற்று வரும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவித்தார். திருப்பதி ஆஷா அரங்கில் ‘டெம்பிள் கனெக்ட்’ நிறுவனம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் … Read more

கோயங்கா கோயிலுக்குச் சென்ற இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார்!

Goenka Temple: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் கடந்த திங்கட்கிழமை கோயங்கா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மேலும் செவ்வாய் கிரகப் பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் மோடி, கத்தார் மன்னர் ஷேக் தமீம் சந்திப்பு: முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

கத்தார் மன்னரும், நாட்டின் அதிபருமான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, மத்திய அமைச்சர்கள் அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்பது வாடிக்கை. ஆனால் கத்தார் மன்னரை, பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றுள்ளார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய கத்தார் மன்னருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. … Read more

அமெரிக்காவில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்த நிலையில் இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் டெஸ்லா

புதுடெல்லி: அமெரிக்கா சென்​றிருந்த பிரதமர் மோடியை தொழில​திபர் எலான் மஸ்க் சந்தித்து பேசிய நிலை​யில், டெஸ்லா நிறு​வனம் இந்தியா​வில் வேலைக்கு ஆள் எடுப்​ப​தற்கான விளம்​பரத்தை வெளி​யிட்​டுள்​ளது. அமெரிக்​கா​வின் முன்னணி கார் தயாரிப்பு நிறு​வனமான டெஸ்லா இந்தியா​வில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சு​வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், அதிக இறக்​குமதி வரி உள்ளிட்ட காரணங்​களால் டெஸ்லா தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலை​யில், 40 ஆயிரம் டாலர்​களுக்கு மேல் விலை கொண்ட அதிநவீன சொகுசு கார்​களுக்கான … Read more

அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் வேலையின்மை 6.4% ஆக குறைவு

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 சதவீதமாக குறைந்துளளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது: நகர்ப்புற பகுதிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டின் இதே டிசம்பர் காலாண்டில் இ்ந்த விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது. இருப்பினும், முந்தைய செப்டம்பர் … Read more

கோயில்களில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கோயில் பராமரிப்பு, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். டெம்பிள் கனெக்ட் நிறுவனம் சார்பில் திருப்பதி ஆஷா அரங்கில் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. 19ம் தேதி வரை 3 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில், 58 நாடுகளில் இருந்து இந்து, பவுத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்த 1,581 கோயில்கள் … Read more

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி!

ஜாம்நகர்: குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் கடந்த ஜன.16 அன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2023-ம் ஆண்டு குஜராத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் தேர்தல் இது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக 68 நகராட்சிகளில் 60-ஐ கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது. … Read more

நாளை (பிப்ரவரி 19) வங்கிகளுக்கு விடுமுறையா? இதோ ஆர்பிஐ விடுமுறை பட்டியல்!

Bank Holidays News In Tamil: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 19, 2025 அன்று மகாராஷ்டிராவின் சில நகரங்களில் வங்கிகள் செயல்படாது. வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை பார்ப்போம்.

“மகா கும்பமேளா குறித்து மம்தா பானர்ஜி கூறியது அரசியல் கருத்து” – வெங்கய்ய நாயுடு

பிரயாக்ராஜ்: “மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் மக்கள் தாங்களாகவே ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சியை நான் பாராட்டுகிறேன்” என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் மகா கும்பமேளா தொடங்கியது. வரும் 26-ம் தேதியுடன் இந்த நிகழ்வு நிறைவு பெறுகிறது. இந்நிலையில், இது குறித்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியது: “மக்கள் தாங்களாகவே … Read more

“மகா கும்பமேளா அல்ல… ‘மரண கும்பமேளா’ இது!” – மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்

கொல்கத்தா: பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளா குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மகா கும்பமேளா இப்போது மிருத்யு கும்பமேளா (மரண கும்பமேளா) ஆக மாறிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட கும்பமேளா கூட்ட நெரிசல் மரணங்களை சுட்டிக்காட்டி பேசிய மம்தா, விஐபிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படும் நிலையில், எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் … Read more