‘வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: “வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.. ஆரம்பமே அதிரடி!

Parliament Winter Session Begins Today: குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. குளிரையும் மீறி அனல் பறக்கும்.. காத்திருக்கும் அரசியல் தலைவர்கள்.

உ.பி.யில் கலவரம் எதிரொலி: சம்பல் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை, இணைய சேவை துண்டிப்பு

சம்பல் (உ.பி.): உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 போலீ​ஸார் காயமடைந்​த நிலையில் அப்பகுதியில் இன்று (நவ.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிகப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள்: கலவரத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில் 24 மணி நேரத்துக்கு … Read more

முகலாயர் கால மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: உ.பி. கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு; வாகனங்களுக்கு தீவைப்பு

சம்பல் (உ.பி.): உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 போலீ​ஸார் காயமடைந்​தனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்​படு​வதற்கு முன்பாக அந்த இடத்​தில் இந்து கோயில் இருந்​த​தாக​வும், எனவே அந்த இடத்​தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதி​மன்​றத்​தில் … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: 16 மசோதாக்கள் தாக்கல் ஆகின்றன

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை … Read more

ம​காராஷ்டிரா, ஜார்க்​கண்ட் தேர்தலில் நோட்டாவுக்கு குறைவான வாக்குகள்

புதுடெல்லி: ம​காராஷ்டிரா மற்றும் ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்​த லில் நோட்​டாவுக்கு குறைவான வாக்​குகளே பதிவாகின. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்​தினம்வெளி​யானது. இதில், மகாராஷ்டிரா​வில் யாருக்​கும் வாக்​களிக்க விரும்ப​வில்லை (நோட்டா) என 0.75% வாக்​காளர்கள் தெரி​வித்​தனர். இதுபோல ஜார்க்​கண்ட் தேர்​தலில் 1.32% பேர் நோட்​டாவுக்கு வாக்​களித்​தனர். மகாராஷ்டிர தேர்தலில் 65.02% வாக்​கு​களும், ஜார்க்​கண்​டில் 2 கட்டமாக நடைபெற்ற தேர்​தலில் 66.65% வாக்​கு​களும் பதிவாகின. நோட்டா முறை கடந்த 2013-ம் ஆண்டு அறி​முகம் செய்​யப்​பட்​டது. … Read more

‘ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு’ – ஜார்க்கண்ட்டில் இண்டியா கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது எப்படி?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் இண்டியா கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தகர்த்து, இந்த மகத்தான வெற்றி சாத்தியமானதன் பின்புலம் பார்ப்போம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றன. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் இணைந்த இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே … Read more

“ஆசி பெற வருகிறேன் அம்மா” – தாயிடம் மகாராஷ்டிர துணை முதல்வர் பட்னாவிஸ் உருக்கம்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு தலைமை வகித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பட்னாவிஸை செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தேர்தல் வெற்றியின் காரணமாக அவரது செல்போன் நேற்று முழுவதும் ஒலித்து கொண்டே இருந்தது. பட்னாவிஸின் தாயார் சரிதா நாக்பூரில் வசிக்கிறார். அவர் நேற்று … Read more

“பாஜகவின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை” – ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றி குறித்து ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவை தேர்தலில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது: நான் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக என் மீது பொய் வழக்கு, ஊழல் வழக்குகளை தொடர்ந்து என்னை செயல்பட விடாமல் தடுத்தனர். ஆனால் இன்று உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களால் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தேர்தல் மிகுந்த சவாலாகவும், கடினமாகவும் இருக்கும் … Read more

மகாராஷ்டிரா தேர்தலில் கவனம் ஈர்த்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார்

மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற வழிவகுத்துள்ளனர். ஒருங்கிணைந்த சிவசேனா கட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை எம்எல்ஏ.க்களுடன் பிரிந்து கட்சியை கைப்பற்றியதோடு தே.ஜ கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தார். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரும்பான்மை எம்எல்ஏ.க்களுடன் அஜித் பவார் பிரிந்து பாஜக., தலையைிலான மகாயுதி … Read more