“பாஜகவின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை” – ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றி குறித்து ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவை தேர்தலில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது: நான் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக என் மீது பொய் வழக்கு, ஊழல் வழக்குகளை தொடர்ந்து என்னை செயல்பட விடாமல் தடுத்தனர். ஆனால் இன்று உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களால் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தேர்தல் மிகுந்த சவாலாகவும், கடினமாகவும் இருக்கும் … Read more

மகாராஷ்டிரா தேர்தலில் கவனம் ஈர்த்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார்

மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற வழிவகுத்துள்ளனர். ஒருங்கிணைந்த சிவசேனா கட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை எம்எல்ஏ.க்களுடன் பிரிந்து கட்சியை கைப்பற்றியதோடு தே.ஜ கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தார். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரும்பான்மை எம்எல்ஏ.க்களுடன் அஜித் பவார் பிரிந்து பாஜக., தலையைிலான மகாயுதி … Read more

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியின் அமோக வெற்றி சாத்தியமானது எப்படி?

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செயல்படுத்தப்பட்ட இலவச திட்டங்கள் உள்ளிட்ட 5 விஷயங்கள் அம்மாநிலத்தில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. ஐந்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில் 17-ல் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் ஹரியானா தேர்தலை தொடர்ந்து இப்போது மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி பெற்றிருப்பது இம்மாநிலங்களில் அக்கட்சி மீண்டும் எழுச்சி பெறுவதை காட்டுகிறது. மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கு பிறகு பெண்களுக்கு மாதந்தோறும் … Read more

மகாராஷ்டிர தேர்தலில் கணவர் தோல்வி: இவிஎம் மீது நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் கணவர் தோல்வி அடைந்ததால் மின்னணு வாக்கு இயந்திரம் (இவிஎம்) மீது நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அனுசக்தி நகர் தொகுதியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் கணவர் பஹத் அகமது போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சனா மாலிக் (முன்னாள் அமைச்சர் நவாப் … Read more

‘‘மகாராஷ்டிராவில் காங். பெற்ற மிக மோசமான தோல்வி இது’’ – பிரித்விராஜ் சவான் வேதனை

மும்பை: “மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பேரவைத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தோல்வி இது” என்று மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவுகான் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தோல்வி குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான், “பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் மகாயுதி அரசின் லட்கி பஹின் யோஜனா திட்டம் கிராமப்புற வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது. மகா விகாஸ் அகாடியின் துருவமுனை … Read more

யார் இந்த கல்பனா சோரன்? வெறும் 250 நாட்கள்.. ஜார்க்கண்டின் சிங்கப் பெண்ணாக மாறியது எப்படி?

Kalpana Soren Latest News: எளிமையான தோற்றத்தில் கல்பனா சோரன் மேடையில் இருந்து நமஸ்கார், ஆதாப், பிரணாம் என்று சொல்லும்போது, ​​மக்கள் அவரை தங்களில் ஒருவாராய் பார்க்கத் தொடங்கினர். கல்பனா சோரனின் அரசியல் பயணம் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

உ.பி. ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு – போலீசார் குவிப்பு

சம்பால்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு நடத்த வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் மீது சமூக விரோதிகள் சிலர் ஞாயிற்றுக் கிழமை கற்கள் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தி போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து காவல்துறை இயக்குநர் (டிஜிபி) பிரசாந்த் குமார் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவின்படி, சம்பாலில் உள்ள மசூதியில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இன்று காலையில் ஆய்வு நடத்த வந்த … Read more

சிட்டுக்குருவிகளுக்காக சென்னையில் இயங்கும் அறக்கட்டளை – ‘மனதின் குரலில்’ விவரித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: “சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த சிலர், சிட்டுக்குருவிகள் நமது அன்றாட வாழ்விலே எத்தனை மகத்துவம் வாய்ந்தவை என்பதை பள்ளிகளுக்குச் சென்று புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறு அன்றும் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். இன்றைய (நவ.24) உரையில் அவர் கூறியதாவது: நண்பர்களே, இன்று மிகவும் சிறப்பான ஒரு … Read more

மாகாராஷ்டிரா தேர்தலில் நூலிழையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

மும்பை: நடந்து முடிந்த மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் பல வேட்பாளர்கள் நூலிழை வித்தியாசத்தில் தங்களின் ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். மாராஷ்டிராவில் உள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு நவ.20ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளின் படி, நாசிக் மாவட்டத்தின் … Read more

ராஜ்நாத் சிங் தலைமையில் கூடியது அனைத்து கட்சி கூட்டம் – குளிர்கால கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை

புதுடெல்லி: நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் நோக்கில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மைக் குழு அறையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் … Read more