மாகாராஷ்டிரா தேர்தலில் நூலிழையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

மும்பை: நடந்து முடிந்த மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் பல வேட்பாளர்கள் நூலிழை வித்தியாசத்தில் தங்களின் ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். மாராஷ்டிராவில் உள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு நவ.20ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளின் படி, நாசிக் மாவட்டத்தின் … Read more

ராஜ்நாத் சிங் தலைமையில் கூடியது அனைத்து கட்சி கூட்டம் – குளிர்கால கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை

புதுடெல்லி: நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் நோக்கில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மைக் குழு அறையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் … Read more

பிஹாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றி

பிஹாரில் நடைபெற்ற பேரவை இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. பிஹார் மாநிலத்தில் டராரி, ராம்கர், இமாம்கஞ்ச் மற்றும் பெலாகஞ்ச் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், டராரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட விஷால் பிரசாந்த் 78,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சிபிஐ-எம்எல் வேட்பாளர் 68,143 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். ராம்கர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அசோக் … Read more

14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி

புதுடெல்லி: நாடு முழு​வதும் 14 மாநிலங்​களில் உள்ள 48 சட்டப்​பேரவை தொகு​தி​கள், கேரளாவின் வய நாடு மற்றும் மகாராஷ்டிரா​வின் நாந்​தேடு மக்களவை தொகு​தி​களி​ல் கடந்த 13 மற்றும் 20-ம் தேதி​களில் இடைத் தேர்தல் நடைபெற்​றது. உத்தர பிரதேசத்​தில் 9, ராஜஸ்​தானில் 7, மேற்கு வங்கத்​தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சா​பில் தலா 4, கர்நாட​கா​வில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்​கிமில் தலா 2 தொகு​திகள் குஜராத், உத்த​ராகண்ட், மேகாலயா, சத்தீஸ்​கரில் தலா ஒரு சட்டப் … Read more

கர்நாடகாவில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றி: 2 முன்னாள் முதல்வர்​ மகன்கள் தோல்வி

கர்நாடகாவில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் பாஜக, மஜத கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக இருந்த சென்னப்பட்டணா, சிகாவுன், சந்தூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட நிலையில், எதிர்க்கட்சியான பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பதிவான … Read more

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சாதனை வெற்றி: 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றியது 

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றுள்ளது. புதிய முதல்வர் யார் என்பதை பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து முடிவு செய்து அறிவிக்க உள்ளன. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), … Read more

ஜார்க்கண்டில் மீண்டும் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இண்டியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 43, காங்கிரஸ் 30, ராஷ்டிரிய ஜனதா தளம் 7, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) 4 தொகுதிகளில் போட்டியிட்டன. தேசிய … Read more

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்வி

பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார். பிஹாரில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது கட்சியினர் போட்டியிட்டனர். எனினும் 4 வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். இவர்களில் 3 பேர் டெபாசிட் இழந்தனர்.தேர்தல் முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், “பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளது. இங்கு பாஜக கூட்டணி நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தாலும் இதனை முடிவுக்கு கொண்டுவரவில்லை. என்றாலும் இங்கு பாஜக … Read more

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: மோசமான தோல்வியைச் சந்தித்த சரத் பவார் கட்சி

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) மிக மோசமான தோல்வியைச் சந்தித்து உள்ளது. மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1978-ல் மகாராஷ்டிர மாநில முதல்வரானவர் சரத் பவார். இதன்மூலம் மகாராஷ்டிராவின் இளம் முதல்வர் (38 வயதில் பதவி) என்ற பெருமையை அவர் பெற்றார். அதன் பிறகு 4 முறை மகாராஷ்டிர முதல்வர் பதவியை அலங்கரித்தார். அதுமட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் பதவிகளையும் வகித்தார். 1999-ல், அப்போதைய காங்கிரஸ் … Read more

வளர்ச்சி, சிறந்த நிர்வாகத்தால் மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் சிறந்த நிர்வாகத்தால் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இங்கு வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் வென்றிருக்கிறது. ஒன்றுபட்டால், நாம் இன்னும் உயர்வோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் … Read more