மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: மோசமான தோல்வியைச் சந்தித்த சரத் பவார் கட்சி

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) மிக மோசமான தோல்வியைச் சந்தித்து உள்ளது. மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1978-ல் மகாராஷ்டிர மாநில முதல்வரானவர் சரத் பவார். இதன்மூலம் மகாராஷ்டிராவின் இளம் முதல்வர் (38 வயதில் பதவி) என்ற பெருமையை அவர் பெற்றார். அதன் பிறகு 4 முறை மகாராஷ்டிர முதல்வர் பதவியை அலங்கரித்தார். அதுமட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் பதவிகளையும் வகித்தார். 1999-ல், அப்போதைய காங்கிரஸ் … Read more

வளர்ச்சி, சிறந்த நிர்வாகத்தால் மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் சிறந்த நிர்வாகத்தால் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இங்கு வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் வென்றிருக்கிறது. ஒன்றுபட்டால், நாம் இன்னும் உயர்வோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் … Read more

“இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினமாக உள்ளது” – உத்தவ் தாக்கரே வருத்தம்

மும்பை: மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது என்று சிவசேனா (உத்தவ்) கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சி படுதோல்வி கண்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் மகா விகாஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 4 மாதங்களில் எப்படி சூழ்நிலை மாறியது என்று தெரியவில்லை. … Read more

“பிரியங்கா மீதான வயநாடு குடும்பத்தினரின் நம்பிக்கையால் பெருமிதம்!” – ராகுல் காந்தி நெகிழ்ச்சி

புதுடெல்லி: “வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் பிரியங்கா காந்தி மீது வைத்துள்ள நம்பிக்கையால் பெருமையடைகிறேன்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது சகோதரியும், வயநாடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தியின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அவர் இவ்வாறு நெகிழந்துள்ளார். கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் பல எதிர்பார்ப்புகளை மீறி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் சகோதரியின் வெற்றி குறித்து … Read more

மே.வ. முதல் உ.பி. வரை: பேரவை இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் ஆதிக்கம்!

புதுடெல்லி: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளில் அந்தந்த மாநில ஆளுங்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. மேற்கு வங்கத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும், கர்நாடகாவில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டன. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, … Read more

உ.பி. இடைத்தேர்தலில் பாஜக எழுச்சி, ‘சரிந்த’ சமாஜ்வாதி… காரணம் என்ன?

லக்னோ: உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில், பாஜக 6 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சமாஜ்வாதி வெறும் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, இந்த முடிவுகள் பாஜகவுக்கு எழுச்சியாகவும், சமாஜ்வாதிக்கு சரிவாகவும் கருதப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் பாஜகவுக்கு 33 மட்டுமே கிடைத்தன. இண்டியா கூட்டணியில் சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 தொகுதிகளில் வென்றன. இதனால் உ.பி.யில் ஆளும் பாஜகவுக்கு … Read more

யார் இந்த ஹேமந்த் சோரன்? பாஜகவை ஜார்க்கண்டில் அலறி ஓட விட்டவர்..

Who Is Hemant Soren : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னிலை வகித்துள்ளது.   

ராகுல் சாதனையை முறியடித்த பிரியங்கா: 4.1 லட்சம்+ வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

வயநாடு: கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்துள்ளார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 ( 4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் உள்ளார். முன்னதாக கடந்த 2019 மக்களவை தேர்தலில் வயநாட்டில் 7.06 லட்சம் வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார். 2024-ல் 6.47 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். இப்போது வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வாக்கி … Read more

Maharashtra Election Results 2024 | மோடி கூட்டணிக்கு பெரிய வெற்றியை பரிசாக அளித்த மகாராஷ்டிரா மக்கள்

Election Results 2024 Latst Updates: 2024 சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றியை மகாராஷ்டிரா மாநில மக்கள் அளித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் முக்கிய வேட்பாளர்களின் நிலை என்ன?

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களின் நிலை குறித்து தற்போது பார்ப்போம். மகாராஷ்டிராவில் கோப்ரி-பச்பாகாடி தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை வகித்து வருகிறார். இதேபோல், நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பாரமதி தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரும் முன்னிலை வகித்து வருகிறார்கள். மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலி சாகோலி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். … Read more