ராணுவ அதிகாரியை திருமணம் செய்ய காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

பெற்றோர் நிச்சயித்த ராணுவ அதிகாரியை திருமணம் செய்வதற்காக 2 ஆண்டுகளாக காதலித்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண் குற்றவாளி என நெய்யான்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் … Read more

பயணிகள் வாகன உற்பத்தி சந்தையில் மூன்றாவது இடத்தில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

சர்வதேச பயணிகள் வாகன உற்பத்தி சந்தையில் பாரதம் 3-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் பாரத போக்குவரத்து கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். வரும் 22-ம் தேதி வரை பாரத் மண்டபம், யஷோபூமி, கிரேட்டர் நொய்டா, மார்ட் என டெல்லியின் பல்வேறு இடங்களில் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 100 புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் … Read more

டெல்லி தேர்தலுக்கு முன்பு மகா கும்பமேளாவுக்கு செல்லும் ராகுல், பிரியங்கா: புனித நீராடவும் திட்டம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் மகா கும்பமேளாவுக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வருகை தர உள்ளனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலுக்கம் அவர்கள் திட்டமிடுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கும்பமேளாவில் பங்கேற்று, புனித நீராட அரசியல்வாதிகளும் திட்டமிடுகின்றனர். இதன் … Read more

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா முன்னாள் தலைவர் அபுபக்கருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கர் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் கோி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜன. 17) நிராகரித்தது. இதையடுத்து, … Read more

‘காரணமில்லாமல் ஏன் மத்திய அரசை விரோதிக்க வேண்டும்?’ – உமர் அப்துல்லா

புதுடெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “அவசியமின்றி மத்திய அரசுடன் ஏன் விரோதத்தை வளர்க்க வேண்டும்?” என்று கூறியுள்ளார். ஊடகப் பேட்டியின்போது ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இதனைத் தெரிவித்தார். மத்திய அரசுடனான தனது சமீபத்திய உறவு போக்கு குறித்து விவரித்த அவர், ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுவது குறித்தும் வலியுறுத்தினார். அந்தப் பேட்டியில் உமர் அப்துல்லா, “கவனியுங்கள் ஒரு தள்ளு முள்ளு வந்தால், … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.2,500: பாஜகவின் டெல்லி தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

புதுடெல்லி: பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும் என்றும், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும் என்றும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலை முன்னிட்டு ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை … Read more

'சைஃப் அலி கான் முதலில் கேட்டது இதுதான்' ஆட்டோ ஓட்டுநர் கூறிய பரபரப்பு தகவல்கள்

Saif Ali Khan: சைஃப் அலி கானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், அன்று நடந்தது என்ன என்பது குறித்து ஊடகம் ஒன்றிடம் பேசி உள்ளார். 

“மோடி ஒப்புதலுடன்தான் டெல்லியில் ‘இலவச’ வாக்குறுதிகளை வெளியிட்டதா பாஜக?” – கேஜ்ரிவால் தாக்கு

புதுடெல்லி: நாட்டுக்கு நலம் தரும் இலவசங்களை பிரதமர் நரேந்திர மோடி இப்போதாவது ஏற்க வேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா இன்று வெளியிட்ட தேர்தல் அறிககையில், பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனது கேள்வி என்னவென்றால், இதற்காக அவர் பிரதமர் மோடியின் ஒப்புதலைப் பெற்றாரா? ஏனென்றால், இலவசங்களை … Read more

பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: ஜன.31-ல் தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்!

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியான தனது எட்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த வழக்கத்துக்கு … Read more

மகா கும்பமேளாவில் நிருபரை தாக்கிய முள் பாபா – ‘முட்கள் உண்மையானதா?’ என்ற கேள்வியால் கோபம்

புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் முள் பாபா எனும் துறவி நிருபர் ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அவர், படுத்திருந்த முட்கள் உண்மையானதா? எனக் கேட்டதால் துறவி கோபமடைந்துள்ளார். உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி முதல் தொடங்கி 5 நாட்களாக மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கும்பமேளாவில் கல்பவாசம் செய்ய பல்வேறு துறவிகள் வருகை தருவது வழக்கம். இதுபோன்ற வித்தியாசமான துறவிகளில், கூலிங்கிளாஸ் பாபா, யோகா பாபா, கம்ப்யூட்டர் பாபா, சைக்கிள் பாபா எனப் பலர் … Read more