“மோடி ஒப்புதலுடன்தான் டெல்லியில் ‘இலவச’ வாக்குறுதிகளை வெளியிட்டதா பாஜக?” – கேஜ்ரிவால் தாக்கு

புதுடெல்லி: நாட்டுக்கு நலம் தரும் இலவசங்களை பிரதமர் நரேந்திர மோடி இப்போதாவது ஏற்க வேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா இன்று வெளியிட்ட தேர்தல் அறிககையில், பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனது கேள்வி என்னவென்றால், இதற்காக அவர் பிரதமர் மோடியின் ஒப்புதலைப் பெற்றாரா? ஏனென்றால், இலவசங்களை … Read more

பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: ஜன.31-ல் தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்!

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியான தனது எட்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த வழக்கத்துக்கு … Read more

மகா கும்பமேளாவில் நிருபரை தாக்கிய முள் பாபா – ‘முட்கள் உண்மையானதா?’ என்ற கேள்வியால் கோபம்

புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் முள் பாபா எனும் துறவி நிருபர் ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அவர், படுத்திருந்த முட்கள் உண்மையானதா? எனக் கேட்டதால் துறவி கோபமடைந்துள்ளார். உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி முதல் தொடங்கி 5 நாட்களாக மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கும்பமேளாவில் கல்பவாசம் செய்ய பல்வேறு துறவிகள் வருகை தருவது வழக்கம். இதுபோன்ற வித்தியாசமான துறவிகளில், கூலிங்கிளாஸ் பாபா, யோகா பாபா, கம்ப்யூட்டர் பாபா, சைக்கிள் பாபா எனப் பலர் … Read more

சென்னை ஐஐடி – வேலூர் சிஎம்சி இணைந்து கை மறுவாழ்வுக்கான உள்நாட்டு ரோபோ உருவாக்கம்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (சிஎம்சி வேலூர்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: ‘PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனத் தொழில்நுட்பத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) மூலம் உரிமம் வழங்கப்பட்டது. த்ரைவ் ரிஹாப் சொல்யூஷன்ஸ் மூலம் வணிகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போதைய மறுவாழ்வுச் … Read more

உ.பி. மகா கும்பமேளாவில் மலர் தூவ தாமதம்; ஹெலிகாப்டர் நிறுவனம் மீது முதல்வர் யோகி வழக்கு

புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் பக்தர்கள் மீது மலர்கள் தூவ தாமதித்த ஹெலிகாப்டர் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் தனது கடுமையான கோபத்தைக் காட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 வருடங்களுக்கு பின்பு மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதன் முக்கிய விசேஷ நாட்களில் நடைபெறும் ஆறு ராஜ நீராடல்களின்போது பக்தர்கள் மீது மலர்கள் தூவ அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தநிலையில், ஜனவரி 13 … Read more

சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கத்தியால் குத்தியவரை வளைத்து பிடித்த போலீசார்… சிக்கியது எப்படி?

Saif Ali Khan Attack Case: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்திய நபரை 30 மணிநேரத்தில் மும்பை காவல்துறையினர் கைது செய்து தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை இங்கு காணலாம்.

நடிகர் சயிப் அலிகான் கத்திக் குத்து வழக்கு: சந்தேக நபரை கைது செய்த மும்பை போலீஸ்

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை மும்பை போலீஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிவந்தவர்களின் கூற்றுப்படி, மும்பை போலீஸார் பல்வேறு சந்தேக நபர்களை பாந்த்ரா காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு அழைத்து வந்தனர். அவர்களில் ஒருவரை பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணைக்காக காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் (54) மும்பை மேற்கு … Read more

ஆசை வார்த்தைகளை கூறி மத மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்: ஜெகதீப் தன்கர்

ஆசை வார்த்தைகளை கூறி மத மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்தி உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: குரு காசிதாஸ் ஒற்றுமை மற்றும் சமத்துவ உணர்வின் உருவகமாக திகழ்ந்தார். இவரைப் போன்ற குருமார்களால்தான் இந்த பகுதியின் சமூக-கலாச்சார தன்மை மாறாமல் இருக்கிறது. மகரிஷி வால்மீகி, பகவான் … Read more

ரூ.500-க்கு காஸ் சிலிண்டர், 300 யூனிட் மின்சாரம் இலவசம் – டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்​லி​யில் ஆட்சிக்கு வந்தால் ரூ.500-க்​கு காஸ் சிலிண்​டர், வீடு​களுக்கு 300 யூனிட் இலவச மின்​சாரம் வழங்​கப்​படும் என்று காங்​கிரஸ் கட்சி தேர்தல் வாக்​குறுதி அளித்​துள்ளது. டெல்லி சட்டப்​பேர​வை​யில் 70 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்​ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்​தலில் இண்டியா கூட்​ட​ணி​யில் அங்கமாக இருக்​கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தனித்​துப் போட்​டி​யிடு​வதாக அறிவித்து​விட்​டது. அதனால் டெல்லி தேர்​தலில் ஆம் ஆத்மி … Read more

கர்நாடகாவில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ரூ.93 லட்சம் கொள்ளை; ஒருவர் உயிரிழப்பு

கர்நாடகாவில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பச் சென்ற ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு, ரூ.93 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பீதர் மாவட்டம், சிவாஜி சவுக் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் உள்ளது. அங்கு நேற்று காலை 11.30 மணிக்கு பணத்தை நிரப்புவதற்காக சிஎம்எஸ் ஏஜென்சியை சேர்ந்த கிரி வெங்கடேஷ், சிவகுமார் ஆகிய 2 ஊழியர்கள் வந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் அவர்களின் கண்களில் மிளகாய் பொடியை … Read more