ரூ.500-க்கு காஸ் சிலிண்டர், 300 யூனிட் மின்சாரம் இலவசம் – டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்​லி​யில் ஆட்சிக்கு வந்தால் ரூ.500-க்​கு காஸ் சிலிண்​டர், வீடு​களுக்கு 300 யூனிட் இலவச மின்​சாரம் வழங்​கப்​படும் என்று காங்​கிரஸ் கட்சி தேர்தல் வாக்​குறுதி அளித்​துள்ளது. டெல்லி சட்டப்​பேர​வை​யில் 70 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்​ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்​தலில் இண்டியா கூட்​ட​ணி​யில் அங்கமாக இருக்​கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தனித்​துப் போட்​டி​யிடு​வதாக அறிவித்து​விட்​டது. அதனால் டெல்லி தேர்​தலில் ஆம் ஆத்மி … Read more

கர்நாடகாவில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ரூ.93 லட்சம் கொள்ளை; ஒருவர் உயிரிழப்பு

கர்நாடகாவில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பச் சென்ற ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு, ரூ.93 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பீதர் மாவட்டம், சிவாஜி சவுக் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் உள்ளது. அங்கு நேற்று காலை 11.30 மணிக்கு பணத்தை நிரப்புவதற்காக சிஎம்எஸ் ஏஜென்சியை சேர்ந்த கிரி வெங்கடேஷ், சிவகுமார் ஆகிய 2 ஊழியர்கள் வந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் அவர்களின் கண்களில் மிளகாய் பொடியை … Read more

பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கிறது பாஜக அரசு

புதுடெல்லி: உ.பி.​யின் பிரயாக்​ராஜில் நாட்​டின் பல்வேறு மொழிகளை இணைக்​கும் பாலமாக பாஷா சங்கம் செயல்​படு​கிறது. இதன் சார்​பில் திரு​வள்​ளுவர், பாரதி​யார், பாரதி​தாசன் என பல தமிழ் கவிகளுக்கு விழா எடுக்​கப்​பட்​டுள்​ளது. பாஷா சங்கத்​தின் நிறு​வனரும் மறைந்த பொதுச் செயலா​ள​ருமான கிருஷ்ணசந்த் கவுடு, தமிழ் கற்ற​தால் அவருக்கு திரு​வள்​ளுவர் மீது அதிக ஈடுபாடு வந்தது. இவர்​தான், முதன்​முதலில் 1990-ல் திரிவேணி சங்கமத்​தின் தென்கரை சாலைக்கு திரு​வள்​ளுவர் பெயரை சூட்டி, அங்கு அவருக்கு சிலை வைக்க கோரினார். 2009-ல் தமிழர் … Read more

8-வது ஊதிய குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய, 8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள், சலுகைகளை தீர்மானிக்க 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.7,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகபட்ச … Read more

மகா கும்​பமேளா​வில் பங்கேற்க வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பவ்லின் 20 நாள் முகாம் திடீர் ரத்து

புதுடெல்லி: ஆப்பிள் நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் ஸ்டீவ் ஜாப்​ஸின் மனைவி லாரன் பவ்லின் 20 நாள் முகாம் திடீர் என ரத்தானது. உடல்​நலக் குறைவு காரணமாக மகா கும்​பமேளா​வில் இருந்து 3 நாட்​களில் பூடான் சென்​றார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்​ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்​பமேளா தொடங்​கியது. இதில் பங்கேற்க ஸ்டீவ் ஜாப்​ஸின் மனைவி லாரன் பவ்லின் அமெரிக்​கா​வில் இருந்து உ.பி. வந்தார். தனது குரு மகரிஷி வைஸானந்த் கிரி​யுடன் அவர் வந்திருந்​தார். மகா … Read more

இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்​டும்: ஐஏஎம்ஏஐ

இந்தியாவில் நடப்பு ஆண்டில் இணையதள பயனாளர் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கம் (ஐஏஎம்ஏஐ) மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கன்டர் சார்பில் ‘இந்தியாவில் இணையதளம் 2024’ என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 2024-ம் ஆண்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 88.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8% அதிகம். இந்த எண்ணிக்கை 2025-ல் 90 கோடியைத் … Read more

ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம்: டெல்லிக்கு காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு ரூ.500-க்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்று காங்ரஸ் கட்சி இன்று தெரிவித்துள்ளது. டெல்லிக்கான காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களை தெரிவிக்கும் விதமாக பணவீக்கம் இல்லாத திட்டத்தினை கட்சி இன்று அறிமுகப்படுத்தியது. அதனை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிமுகம் செய்துவைத்தார். அப்போது டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் … Read more

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் அடையாளம் தெரிந்தது: போலீஸ் தகவல்

மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவரை கைது செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மண்டலம் 9-ன் துணை காவல் ஆணையர் (DCP) தீட்சித் கெடம், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் படிக்கட்டுக்கள் வழியாக வீட்டிற்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இது ஒரு கொள்ளை முயற்சி என்று தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் அடையாளம் … Read more

‘தேச விரோத கருத்து’ – ராகுல் காந்தி மன்னிப்புக் கோர ம.பி முதல்வர் வலியுறுத்தல்

போபால்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் “இந்திய அரசுக்கு எதிராகப் போராடுதல்” என்ற கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ராகுல் காந்தி தனது தேச விரோத கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், “ராகுல் காந்தி தனது தேச விரோத கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசின் கொள்கைகள் குறித்து ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆனால், நாட்டுக்கே எதிராக … Read more

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தை நாடியது காங்கிரஸ்!

புதுடெல்லி: 1991-ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதில் தளங்களை இணைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15, 1947 நிலவரப்படி வழிபாட்டுத் தலங்கள் பராமரிக்கப்பட வேண்டும். அயோத்தி ராமர் கோயில் இடம் தொடர்பான வழக்கைத் தவிர வேறு யாரும், பிற வழிபாட்டுத் தலங்களின் இடங்களுக்கு உரிமை கோரக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் கடந்த 1991-ம் … Read more