சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் நடந்தது என்ன?

புதுடெல்லி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியான வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரான ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் … Read more

கடும் எதிர்ப்புக்கு இடையே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்: ஜேபிசி பரிசீலனைக்கு அனுப்ப பரிந்துரை

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பரிந்துரை செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலை … Read more

வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு சம்பந்தமான மாணவர்கள் போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. பிறகு அந்தப் போராட்டம் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலாக வடிவெடுத்தது. இந்துக்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இந்துக்கள் பொதுவெளியில் தாக்கப்பட்டனர். கலவர நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகும் கூட வங்கதேசத்தில் இந்துக்கள் மீது மதரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று … Read more

“மார்ச் 2026-க்குள் நக்சலிசத்தை ஒழிக்க வேண்டும்” – உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

ராய்ப்பூர்: 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து பாதுகாப்புப் படைகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். நக்ஸல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான சத்தீஸ்கரில் பாதுகாப்பு தொடர்பான உயர் ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கள் கிழமை) நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், துணை முதல்வர் விஜய் ஷர்மா, … Read more

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் ஜிடிபி 1.5% வரை உயர வாய்ப்பு: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நாட்டு மக்கள் அனைவரது வளர்ச்சிக்கும் ஏற்றது என்றும், இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1% முதல் 1.5% வரை உயரும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்நாத் கோவிந்த், “இந்த திட்டம் நாட்டு மக்கள் அனைவரின் முன்னேற்றத்துக்கும் ஏற்றது. மற்ற அம்சங்களிலும், இந்தத் திட்டத்தை … Read more

“பாஜகவின் சதி, தந்திரம்…” – ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு ஏன்?

புதுடெல்லி: “அரசியலமைப்பை அழிப்பதற்கான மற்றொரு சதி”, “இது, வாக்காளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கிறது,” “அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத் தேர்தல்களை நடத்துவதே உள்நோக்கம்”, “நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம்” என ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. மக்களவையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டபோது பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, “ஒரே … Read more

போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல் திட்டம் உருவாக்கம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பி எல்.வர்மா, “சிறுவர்கள் உட்பட அனைத்து குடிமக்களிடமும் மது மற்றும் போதைப் பழக்கத்தை தடுக்க சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை போதைப்பொருளுக்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டைச் சமாளிக்க, இத்துறை … Read more

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு நாடு முழுவதும் 21,500-க்கும் அதிகமானோரிடம் கருத்துகளைப் பெற்றது என்றும், இதில் 80% பேர் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வகை செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் … Read more

மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது நடத்தப்பட்ட ஆரம்ப சுற்று விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 198 எம்பிக்கள் வாக்களித்தனர். நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே காலகட்டத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தல், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல்களை ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட … Read more