“பாஜகவின் சதி, தந்திரம்…” – ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு ஏன்?

புதுடெல்லி: “அரசியலமைப்பை அழிப்பதற்கான மற்றொரு சதி”, “இது, வாக்காளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கிறது,” “அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத் தேர்தல்களை நடத்துவதே உள்நோக்கம்”, “நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம்” என ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. மக்களவையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டபோது பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, “ஒரே … Read more

போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல் திட்டம் உருவாக்கம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பி எல்.வர்மா, “சிறுவர்கள் உட்பட அனைத்து குடிமக்களிடமும் மது மற்றும் போதைப் பழக்கத்தை தடுக்க சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை போதைப்பொருளுக்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டைச் சமாளிக்க, இத்துறை … Read more

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு நாடு முழுவதும் 21,500-க்கும் அதிகமானோரிடம் கருத்துகளைப் பெற்றது என்றும், இதில் 80% பேர் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வகை செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் … Read more

மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது நடத்தப்பட்ட ஆரம்ப சுற்று விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 198 எம்பிக்கள் வாக்களித்தனர். நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே காலகட்டத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தல், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல்களை ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட … Read more

One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகள்!

One Nation One Election Bill Latest News: ஒரே நாடு-ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆதரவாக 269 வாக்குகள் பதிவு.

“மார்ச் 2026-க்குள் நக்சலிசத்தை ஒழிக்க வேண்டும்” – உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

ராய்ப்பூர்: 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து பாதுகாப்புப் படைகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். நக்ஸல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான சத்தீஸ்கரில் பாதுகாப்பு தொடர்பான உயர் ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கள் கிழமை) நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், துணை முதல்வர் விஜய் ஷர்மா, … Read more

எட்வினா மவுன்ட்பேட்டனுக்கு நேரு எழுதிய கடிதங்களை ஒப்படையுங்கள்: ராகுல் காந்திக்கு பிரதமரின் அருங்காட்சியகம் கடிதம்

எட்வினா மவுன்ட்பேட்டனுக்கு நேரு எழுதிய கடிதத்தை ஒப்படையுங்கள் என ராகுல் காந்திக்கு பிரதமரின் அருங்காட்சியகம் கடிதம் எழுதி உள்ளது. டெல்லியில் உள்ள பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் உறுப்பினர் ரிஸ்வான் காத்ரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தோம். அதில், இந்த அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு 51 அட்டைப் பெட்டிகளில் எடுத்துச் சென்ற, நேரு எழுதிய … Read more

திரிணமூல் கட்சியும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஆதரவு

புதுடெல்லி: ம​காராஷ்டிர தேர்​தலில் காங்​கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி தோல்வி அடைந்​தது. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்​திரங்​களில் (இவிஎம்) முறை​கேடு நடந்​துள்ளதாக தெரி​வித்​தது. ஆனால் எதிர்க்​கட்​சிகளின் இண்டியா கூட்​ட​ணி​யில் இடம்​பெற்றுள்ள தேசிய மாநாடு கட்சி​ தலைவரும் காஷ்மீர் முதல்​வருமான உமர் அப்துல்லா இவிஎம் இயந்திரங்​களுக்கு ஆதரவாக கருத்து தெரி​வி்​தார். இந்நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் பொதுச் செயலா​ள​ரும் எம்.பி.​யுமான அபிஷேக் பானர்ஜி நேற்று கூறும்​போது, “இவிஎம்​மில் முறை​கேடு செய்ய முடி​யும் என்ற குற்​றச்​சாட்​டில் உண்மை … Read more

ஆந்திராவில் இறந்துபோன தந்தையின் அரசுப் பணிக்காக சகோதரர்களை கொன்ற பெண் கைது

இறந்துபோன தந்தையின் அரசுப் பணியை பெறுவதற்காக உடன்பிறந்த 2 சகோதரர்களை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியை சேர்ந்தவர் போலராஜு. மாநில வருவாய்த் துறையில் பணியாற்றி வந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு வழங்கப்படும் அரசுப் பணியை பெறுவதற்கு அவரது 2 மகன்கள் கோபி, ராமகிருஷ்ணா மற்றும் மகள் கிருஷ்ணவேணி … Read more