ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்களே அலர்ட்… இதற்கு கடைசி நாள் நீட்டிப்பு – உடனே செய்யுங்க

Ration Card News: ரேஷன் அட்டைத்தாரர்கள் தங்களின் e-KYC செயல்பாட்டை மேற்கொள்ள கடைசி நாள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல்

முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அப்போதைய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். … Read more

வீட்டில் மின்சாரம் திருட்டு கண்டுபிடிப்பு: சம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கு ரூ.1.91 கோடி அபராதம்

உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதி சமாஜ்வாதி எம்.பி ஜியா உர் ரகுமான் வீட்டில் மின்சாரம் திருட்டு நடந்துள்ளதை கண்டுபிடித்த மின்சாரத்துறை அதிகாரிகள் ரூ.1.91 கோடி அபராதம் விதித்து மின் இணைப்பை துண்டித்தனர். உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதியில் உள்ள ஜமா மசூதியில் கடந்த மாதம் 24-ம் தேதி ஆய்வு நடத்த சென்றபோது வன்முறை ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இதில் இத்தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜியா உர் ரகுமான் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

ஜெய்ப்பூரில் சமையல் காஸ் வெளியேறியதில் டேங்கர் லாரி வெடித்து 11 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில், அருகே நின்றிருந்த சுற்றுலா பேருந்து பயணிகள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். 14 பேரை காணாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ராஜஸ்​தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்​பூருக்கு … Read more

திருமலையில் அரசியல் பேசினால் நடவடிக்கை: அறங்காவலர் பிஆர் நாயுடு மீண்டும் எச்சரிக்கை

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் இடம் பெற்றுள்ள திருமலையில் அரசியல் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தடையை மீறி அரசியல் பேசிய தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் பிஆர் நாயுடு எச்சரித்துள்ளார். இந்துக்களின் புனித திருத்தலமான திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர். இதனால் … Read more

அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக இன்றும் அமளி – தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இன்றும் அமளி நீடித்ததை அடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் … Read more

ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்திற்கு பரேலியின் முஸ்லிம் மவுலானா ஆதரவு: கோயில் – மசூதி விவகாரத்தில் அறிக்கை

புதுடெல்லி: கோயில் – மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோஹன் பாக்வத் கருத்துக்கு பரேலியின் முஸ்லிம் மவுலானா ஆதரவளித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவரான அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சம்பல் ஜாமா மசூதி, கோயில் இடித்துக் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் பல மசூதிகள் மற்றும் அஜ்மீர் தர்கா, கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகப் புகார்கள் கிளம்பின. இதன் மீது நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா அமைப்புகள் நீதிமன்றங்களில் வழக்கு … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரை

புதுடெல்லி: நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இன்று நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைத்தார். இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதுகுறித்து மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை உறுப்பினர்கள் 27 பேர், மாநிலங்களவை உறுப்பினர் 12 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை மக்களவை … Read more

ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 41 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் கேஸ் டேங்கர் வாகனத்தோடு, பல வாகனங்கள் மோதியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்தன. விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தபோது, ​​கிட்டத்தட்ட ஒரு கி.மீ தொலைவில் இருந்து … Read more

கோயில் – மசூதி விவகாரங்களுக்கு இனி இடமில்லை: இந்துத்துவா தலைவர்களுக்கு மோகன் பாகவத் கண்டிப்பு

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இனி கோயில்-மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்பி இந்துக்களின் தலைவர்களாக முயற்சிப்பது தவறு என்றும் அவர் கண்டித்துள்ளார். உத்தரப்பிரதேசம் சம்பலின் ஜமா மசூதி வழக்கை தொடர்ந்து பல இடங்களில் கோயில்-மசூதி விவகாரங்கள் கிளம்பி வருகின்றன. ராஜஸ்தானின் அஜ்மீரிலுள்ள காஜா ஷெரீப் தர்கா உள்ளிட்ட பல முஸ்லிம் தலங்கள் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களில் கோயில்கள் இடித்துக் கட்டப்பட்டிருப்பதாக … Read more