ராஜஸ்தான் | ஜெய்ப்பூரில் ரசாயன டேங்கர் மீது லாரி மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்த ரசாயனம் ஏற்றிவந்த டேங்கர் வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எல்பிஜி டேங்கர் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. டேங்கரில் ரசாயனம் இருந்ததால் அதன் மீது லாரி மோதிய வேகத்தில் … Read more

ஜல்ஜீவன் திட்டம் 79% நிறைவேற்றம்; குடிநீர் குழாய் இணைப்பை விரைவாக வழங்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான பிறகு நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, கிராமங்களில் சுமார் 19 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லை என தெரியவந்தது. இந்நிலையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 15 கோடி … Read more

நாட்டையே உலுக்கிய பிபின் ராவத் மரணம்… ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம் என்ன? – ஷாக் ரிப்போர்ட்

CDS General Bipin Rawat: மறைந்த ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் என்ன என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸுடன் உத்தவ் சந்திப்பு: என்டிஏ கூட்டணியில் இணைய ரகசிய பேச்சு?

புதுடெல்லி: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று உத்தவ் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) உத்தவ் மீண்டும் திரும்பும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த 2019 மகாராஷ்டிர தேர்தலில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியின் முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். … Read more

மும்பை படகு விபத்தில் காணாமல்போன 2 பேரை தேடும் பணி தீவிரம்: இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி

மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது கடற்படையின் விரைவு ரோந்துப் படகு மோதியவிபத்தில் காணாமல்போன இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்பையின் ‘கேட் வே ஆப் இந்தியா’ பகுதியில் இருந்து பிரபல சுற்றுலா தலமான எலிபென்டா தீவு நோக்கி ‘நீல்கமல்’ என்ற சுற்றுலா படகு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இப்படகில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது அப்பகுதியில் கடற்படையின் விரைவுப் படகு இன் ஜின் சோதனையில் ஈடுபட்டிருந்தது. … Read more

ராகுல் தரக்குறைவாக நடந்துகொண்டார்: நாகாலாந்து பெண் எம்.பி. புகார்

புதுடெல்லி: நாகாலாந்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஃபங்க்னான் கொன்யாக் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாடாளுமன்ற நுழைவு வாயிலில் படிக்கட்டுக்கு கீழே வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என்னை நோக்கி மிக நெருக்கமாக வந்து உரக்க கோஷமிட ஆரம்பித்தார். அவரின் இந்த செயல் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. எனது கண்ணியம் மற்றும் சுயமரியாதையை ராகுல் ஆழமாக காயப்படுத்தியுள்ளார். பழங்குடியின பெண் … Read more

காங்கிரஸ் – பாஜக எம்.பி.க்கள் மோதலால் நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம்: நடந்தது என்ன?

புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து காயமடைந்த 2 பாஜக எம்.பி.க்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திதான் அவர்களை தள்ளிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டிஉள்ளது. மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அமித் ஷாவுக்கு … Read more

நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது பாஜக எம்பிக்களால் தாக்கப்பட்டேன்: ஓம் பிர்லாவுக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது பாஜக எம்பிக்களால் தான் தாக்கப்பட்டதாகவும், எனவே இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், “கடந்த 17ம் தேதி மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அம்பேத்கர் சிலை உள்ள இடத்தில் … Read more

மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

புதுடெல்லி: மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அதனை நிராகரித்துள்ளார். இதுகுறித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், “இந்த நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை மிகுந்த குறைபாடுகளைக் கொண்டுள்ளது. மேலும் அவைத்தலைவரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் மிகவும் அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நம்பிக்கையில்லா தீர்மானம் 14 நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டிருக்க … Read more

மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்றக்கோருவதா? – காங். எம்எல்ஏவுக்கு ஆதித்ய தாக்கரே கண்டனம்

மும்பை: மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்கும் எந்த முயற்சியையும் தங்கள் கட்சி பொறுத்துக்கொள்ளாது என்று சிவசேனா (உத்தவ் அணி) வைச் சேர்ந்த ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் நிதித் தலைநகரை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று கோரிய கர்நாடக எம்எல்ஏவை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆதித்ய தாக்கரே, மும்பையை தனது தாய்நாடு என்று அழைத்துள்ளார். மும்பையின் வோர்லி தொகுதி எம்எல்ஏவான ஆதித்ய தாக்கரே, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள … Read more