இலவச திட்டங்களால் மாநிலங்களுக்கு நெருக்கடி ஏற்படுவதாக ரிசர்வ் வங்கி கவலை

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயம் மற்றும் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் இலவச போக்குவரத்து அறிவிப்பு என பல மாநிலங்கள் இலவச சலுகைகளை வாரி வழங்குவது பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்கட்டமைப்புக்கு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு … Read more

ஆந்திராவில் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

அனந்தபூர்: திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வேனில் வீடு திரும்பிய பக்தர்கள் 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் குடிபண்டா மற்றும் அமராபுரம் கிராமங்களை சேர்ந்த உறவினர்கள் மொத்தம் 14 பேர் ஒரு வேனில் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, சத்யசாய் மாவட்டம், மடகசிரா எனும் ஊருக்கு அருகில் வேகமாக … Read more

கார் மீது லாரி கவிழ்ந்து பெங்களுருவில் 6 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரு அருகே கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சந்திரகயப்பா கவுல் (48) நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் விஜயபுரா சென்றார். நெலமங்களா அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கர்நாடக பால் கூட்டமைப்புக்கு சொந்தமான கனரக லாரி பக்கவாட்டில் கார் மீது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்து நொறுங்கியது. இதில் காரில் பயணித்த ச‌ந்திரகயப்பா … Read more

9 ஆயிரம் நக்சல்கள் சரணடைந்தனர்: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

அகர்தலா: பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்த அமைதி உடன்படிக்கைகளால் 9 ஆயிரம் நக்சல்கள் சரணடைந்தனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் நேற்று வடகிழக்கு கவுன்சில் (என்இசி) மண்டலங்களின் 72-வது மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: வடகிழக்கிலுள்ள மாநிலங்களின் வளர்ச்சி குறித்து முந்தைய அரசுகள் அக்கறை கொள்ளாமல் இருந்தன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் அந்த … Read more

மும்பை படகு விபத்தில் காணாமல்போன 7 வயது சிறுவனின் உடல் மீட்பு

மும்பை: மும்பையின் ‘கேட் வே ஆப் இந்தியா’ பகுதியில் இருந்து பிரபல சுற்றுலா தலமான எலிபென்டா தீவு நோக்கி ‘நீல்கமல்’ என்ற சுற்றுலா படகு கடந்த புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இப்படகில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது துறைமுகப் பகுதியில் கடற்படையின் விரைவு ரோந்துப் படகு இன்ஜின் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தது. இப்படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா படகு மீது மோதியதில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது. இதையடுத்து கடற்படை, கடலோர காவல் … Read more

முதல்வர் பட்னாவிஸ் வசம் உள்துறை: ஷிண்டேவுக்கு பொதுப் பணித்துறை | மகாராஷ்டிரா அமைச்​சர்​களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சனிக்கிழமை அன்று தனது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் யாருக்கு எந்த துறை என்பதை பார்ப்போம். முக்கிய துறையான உள்துறையை தன்வசமே வைத்துக் கொண்டுள்ளார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இதோடு எரிசக்தி, சட்டம் மற்றும் நீதித்துறை, பொது நிர்வாகத் துறை, தகவல் மற்றும் விளம்பரத் துறைகளையும் அவர் கவனித்துக் கொள்வார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற … Read more

நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17% காடுகள் – புதிய வன அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

டேராடூன்: நாட்டின் மொத்த வனம் மற்றும் மர அடர்த்திப் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டராக உள்ளது என்றும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதம் என்றும் இன்று (டிச. 21) வெளியிடப்பட்ட இந்திய வன நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று (21.12.2024) டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘இந்திய வன நிலை அறிக்கை 2023-ஐ (ISFR 2023) வெளியிட்டார். ஐஎஸ்எஃப்ஆர் … Read more

குவைத்தில் பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

குவைத்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட அப்துல்லா அல் பரூன், அப்துல் லத்தீப் அல் நெசெஃப் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று (டிச.21) குவைத் சென்றடைந்தார். விமான நிலையத்தில் குவைத் அரசின் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். மேலும், குவைத்தில் உள்ள இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய … Read more

வீடியோ பதிவுகள் குறித்த தேர்தல் விதிகளில் மாற்றம்: வெளிப்படைத் தன்மை மீது சந்தேகம் எழுப்பும் காங்.

புதுடெல்லி: சிசிடிவி காட்சி மற்றும் வேட்பாளர்களின் வீடியோ கட்சிகள் போன்ற சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெறுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு என்பது தங்களின் கூற்றுக்கான நிரூபணம் என்றும், இது தேர்தல் நடைமுறைகளின் ஒருமைப்பாட்டை படிபடியாக அழித்துவிடும் என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை, பொதுமக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் … Read more

பிஎஃப் நிதி மோசடி: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரன்ட்

பெங்களூரு: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா நடத்தும் ஆடை நிறுவனத்தின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்ததாக, அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.24 லட்சம் தொகையை டிச.27-க்குள் அவர் செலுத்த தவறும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா, பெங்களூருவில் இயங்கிவரும் சென்டார்ஸ் லைஃப் ஸ்டைல் பிராண்ட் பி.லிமிட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். அவர் தனது நிறுவனத்தில் … Read more