மத்திய பிரதேசத்தில் ஓய்வுபெற்ற காவலரின் ரூ.8 கோடி சொத்துகள் பறிமுதல்

மத்திய பிரதேசத்தில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில், ஓய்வுபெற்ற காவலருக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான அசையும் சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவராக பணியாற்றிய ஆர்.கே.சர்மா, 2015-ல் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் சவுரப் சர்மாவுக்கு கருணை அடிப்படையில் மாநில போக்குவரத்து துறையில் காவலர் பணி வழங்கப்பட்டது. அவர் கடந்த 2023-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இவர் பணியில் இருந்தபோது ஊழல் செய்ததாகவும் இதன்மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, தாய், … Read more

கோயில்-மசூதி பிரச்சினையில் ஒதுங்கியிருக்க வேண்டும்: மோகன் பாகவத் கருத்துக்கு மடாதிபதிகள், துறவிகள் எதிர்ப்பு

கோயில் – மசூதி மோதல்களுக்கு முடிவுகட்டுமாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்துக்கு சங்கராச்சாரியர்கள், மடாதிபதிகள் மற்றும் துறவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் கடந்த வாரம் புனே நகரில் பேசும்போது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு கோயில் – மசூதி தொடர்பாக புதிய பிரச்சினைகளுக்கு இனி இடமில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்பி சிலர் இந்துக்களின் தலைவர்களாக முயற்சிப்பதை ஏற்க முடியாது” என்றார். ஆர்எஸ்எஸ் தலைவரின் இக்கருத்துக்கு … Read more

ஆந்திராவில் ஜெகன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட 410 ஊழியர்கள் பணிநீக்கம்

ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாக கூறி 410 ஊழியர்களை மாநில அரசின் ஃபைபர்நெட் நிறுவனம் நிரந்தர பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து ஆந்திரபிரதேச ஃபைர்நெட் நிறுவனத்தின் (ஏபிஎப்சி) தலைவர் ஜி.வி.ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முந்தைய ஜெகன் அரசு எவ்வித தகுதியும் இல்லாத 410 ஊழியர்களை இந்த ஃபைபர் நெட் நிறுவனத்தில் சட்டவிரோதமாக நியமனம் செய்துள்ளது. இவர்கள் இங்கு பணி நியமனம் பெற்று, ஜெகன் கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்கள் வீடுகளில் பணி செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இங்கிருந்து … Read more

ஜெய்ப்பூர் விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி ஓட்டுநர் உயிருடன் உள்ளார்: சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை

ஜெய்ப்பூர் விபத்துக்கு காரணமான எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுநர் உயிர் தப்பியிருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் எல்பிஜி டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதியது. இதில் டேங்கர் லாரியின் மூடி திறந்து காற்றில் எல்பிஜி காஸ் பரவியது. இதனால் சாலையின் இருபுறமும் சுமார் 40 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கர்னி சிங் … Read more

விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகள்: நெரிசல் வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின்போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் போலீஸார் நேற்று மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. 4-ம் தேதி இரவே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்ட … Read more

2 நாள் பயணமாக அமித் ஷா டிச.27-ல் தமிழகம் வருகை

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, நாளை மறுநாள் (டிச.27) தமிழகம் வர உள்ளார். திருவண்ணாமலை, கோவை, ராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கவுள்ள அவர், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனமும் செய்ய உள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, நாளை மறுநாள் (டிச.27) தமிழகம் வர உள்ளார். மறுநாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். அங்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து … Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சிகிச்சை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டெல்லி நிகால் விஹார் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை, பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா எம் சிங், அமித் சர்மா விசாரித்து அண்மையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி கல்வியை தொடரவும் அவரது எதிர்காலத்துக்காகவும் டெல்லி அரசு ரூ.13 லட்சம் … Read more

மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூர் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். ஆளுநர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒடிசா மாநில ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில் மிசோரம் மாநில ஆளுநர் ஹரி பாபு … Read more

“தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக நினைக்கிறார் ரேவந்த் ரெட்டி” – அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு!

சென்னை: தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (டிச.24) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய … Read more

ஆம் ஆத்மி Vs பாஜக: ஏஐ கன்டென்ட் மூலம் டெல்லி அரசியல் யுத்தம்!

புதுடெல்லி: கடந்த வாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி இருந்தன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தரப்பில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலை அம்பேத்கர் ஆசிர்வதிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரைப் பற்றி தவறாகப் பேசியவர்களை எதிர்த்துப் போராட கேஜ்ரிவால் … Read more