திருப்பதி மலைப் பாதையில் தொடர் விபத்தால் பக்தர்கள் அச்சம்

திருப்பதி மலைப்பாதையில் தொடரும் விபத்துகளால் பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல அலிபிரியில் இருந்து ஒரு பாதையும், அங்கிருந்து திருப்பதிக்கு வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1944-ம் ஆண்டு முதல் பாதை அமைக்கப்பட்டது. இது 19 கி.மீ தூரம் கொண்டதாகும். இது திருமலையில் இருந்து திருப்பதிக்கு வர தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது மலைப்பாதை கடந்த 1974-ல் அலிபிரி அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு அமைக்கப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 3200 அடி உயரத்தில் திருமலை … Read more

தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: கேரளாவில் 57 பேர் கைது

கேரளாவில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேரில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமி ஒருவர் அங்குள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது நடத்தையில் மாற்றம் காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு குழந்தைகள் நல குழுவினர் கவுன்சிலிங் அளித்தனர். அப்போது தனது 13 வயது முதல் தன்னை 62 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறி அச்சிறுமி … Read more

Budget 2025 | வரி செலுத்துவோருக்கு 2 முக்கிய அறிவிப்புகள்.. இறுதி முடிவை எடுக்கும் பிரதமர் மோடி?

Budget 2025 News In Tamil: வருமான வரி குறித்து நல்ல செய்தி. 2025 பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு வருமான வரி தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிடலாம்.

பெண் மருத்துவர் கொலை குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: வழக்கின் முழு பின்னணி

பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சாகும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி காலை சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக மேற்குவங்க காவல் துறையில் … Read more

ஹைதராபாத் இளைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

ஹைதராபாத்: அமெரிக்​கா​வில் நிகழ்ந்த துப்​பாக்​கிச்​சூட்​டில் ஹைதரா​பாத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்​துள்ளார். ஹைதரா​பாத் ஆர்கே புரம் கிரீன்ஹில்ஸ் காலனியைச் சேர்ந்த சந்திரமவுளி​யின் மகன் ரவிதேஜா (28). பொறி​யியல் பட்ட​தா​ரியான இவர், கடந்த 2022-ம் ஆண்டு மேற்​படிப்​புக்காக அமெரிக்கா​வுக்கு சென்​றார். மேற்​படிப்பு முடிவடைந்த நிலை​யில், அங்கேயே வேலை தேடி வந்துள்ளார். இந்நிலை​யில், வாஷிங்​டனில் நேற்று முன்​தினம் மர்ம நபர்கள் திடீரென துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். இதில் ரவிதேஜா சம்பவ இடத்​திலேயே உயிரிழந்​தார். ரவிதேஜா இறந்த செய்தி, ஹைதரா​பாத்​தில் உள்ள … Read more

என் மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் பரவாயில்லை: சஞ்சய் ராயின் தாய் மலாட்டி தகவல்

என் மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை என சஞ்சய் ராய் தாய் தெரிவித்துள்ளார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொல்கத்தாவில் உள்ள … Read more

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 1040 வேட்பு மனுக்கள் ஏற்பு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 1040 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 477 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடந்த 17-ம் தேதி கடைசி நாள். இந்நிலையில் நேற்று முன்தினம் அனைத்து வேட்பு மனுக்களும் பரிசீலிக்கப்பட்டன. இதில் 1040 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 477 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, … Read more

ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்வது ஆபத்து: ஐஎம்ஏ புதிய தலைவர் எச்சரிக்கை

ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்வது ஆபத்தானது என்று ஐஎம்ஏ புதிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில், ஐஎம்ஏ புதிய தலைவர் டாக்டர் திலிப் பானுஷாலி பேசியதாவது: ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயிற்சி பெற்று சிகிச்சை வழங்குபவர்கள் நவீன ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே … Read more

“இது போதாது; மரண தண்டனை தேவை” – பெண் மருத்துவர் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து மம்தா ஆதங்கம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: “ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவரின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், இன்றைய தீர்ப்பில், இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் இது உண்மையில் மரண தண்டனை … Read more

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பிளிங்க்இட் தற்காலிக கடைகள் திறப்பு

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பிளிங்க்இட் நிறுவனம் தற்காலிக கடைகளை திறந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமிருந்து தினமும் பல லட்சக் கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், உடனடி வணிக சேவை நிறுவனமான பிளிங்க்இட், கும்பமேளா நடைபெறும் பகுதியில் தற்காலிக கடைகளை திறந்துள்ளது. கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எளிதாக வாங்கிக் கொள்ள … Read more