மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூர் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். ஆளுநர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒடிசா மாநில ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில் மிசோரம் மாநில ஆளுநர் ஹரி பாபு … Read more

“தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக நினைக்கிறார் ரேவந்த் ரெட்டி” – அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு!

சென்னை: தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (டிச.24) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய … Read more

ஆம் ஆத்மி Vs பாஜக: ஏஐ கன்டென்ட் மூலம் டெல்லி அரசியல் யுத்தம்!

புதுடெல்லி: கடந்த வாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி இருந்தன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தரப்பில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலை அம்பேத்கர் ஆசிர்வதிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரைப் பற்றி தவறாகப் பேசியவர்களை எதிர்த்துப் போராட கேஜ்ரிவால் … Read more

மகாராஷ்டிர வாக்காளர் பட்டியல் விவகாரம்: காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த மகாராஷ்டிராவில் வாக்காளர்கள் தன்னிச்சையாக சேர்க்கப்படவுமில்லை, நீக்கப்படவுமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. மேலும், “மாலை 5 மணி வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் இறுதி வாக்குப்பதிவு தரவுகளை ஒப்பிடுவது சரியாக இருக்காது. மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு நிலவரத்துக்கும் இரவு 11.45 மணிக்கு … Read more

முதலாவது நதிகள் இணைப்புத் திட்டம்: கென்-பேட்வா நதிகளை இணைக்க நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் கென்-பேட்வா நதிகள் இணைப்புக்கான தேசிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை(டிச. 25) அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12:30 மணியளவில், கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு … Read more

அல்லு அர்ஜுனுக்கு தொடரும் நெருக்கடி! 20 கோடி கொடுக்க வலியுறுத்தல்!

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 20 கோடி ரூபாய் வழங்குமாறு அல்லு அர்ஜூனுக்கு தெலங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் மத்திய அரசு சமீபத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. இந்த திருத்தங்களுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்று காங்கிரஸ் … Read more

திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள்: முன்பதிவு செய்வது எப்படி?

திருப்பதி வைகுண்ட ஏகாதசி 2025 டிக்கெட்டுகள் தொடர்பான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. உங்கள் டிக்கெட்டுகளை எப்படி பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​படவில்லை. விதி​கள்படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடர்வார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலை​யில், நேற்று முன்தினம் ஆளுநர் ரவி டெல்லி புறப்​பட்டுச் சென்​றார். அவருடன் ஆளுநரின் செயலர், பாதுகாப்பு அலுவலர்கள் சென்​றுள்​ளனர். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், … Read more

Video: தண்டவாளத்தில் சென்ற முதியவர்… டக்கென அருகில் வந்த ரயில் – அப்புறம் நடந்ததை பாருங்க

Kerala Kannur Viral Video: கேரளாவில் அதிவேகமாக ரயில் சென்றுகொண்டிருக்க தண்டவாளத்தின் நடுவே ஒரு நபர் படுத்திருக்கும் வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் அச்சம்பவத்தை விவரித்துள்ளார்.