பெங்களூருவில் இன்ஜினீயரிடம் ரூ.11.8 கோடி சுருட்டிய டிஜிட்டல் அரெஸ்ட் கும்பல்

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள ஜிகே விகே லே அவுட்டை சேர்ந்​தவர் சாப்ட்​வேர் இன்ஜினீயர் விக்ரம் (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது). 38 வயதான இவருக்கு கடந்த நவ. 28-ல் செல்​போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், டெல்​லி​யில் உள்ள இந்தியத் தொலைத்​தொடர்பு ஒழுங்​கு​முறை ஆணையத்​தில் இருந்து பேசுவதாக கூறி​யுள்​ளார். மேலும் உங்களது எண்ணை தவறாக பயன்​படுத்தி சட்ட விரோத விளம்​பரம், பிரபலங்​களுக்கு கொலை மிரட்டல் ஆகியவை விடுக்​கப்​பட்​டுள்​ளது. உங்கள் மீது மும்பை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்ளனர் என்று கூறி​யுள்​ளார். … Read more

3 இளைஞர்களை திருமணம் செய்து ரூ.1.25 கோடி சுருட்டிய பெண் கைது

மூன்று இளைஞர்களை திருமணம் செய்து ரூ.1.25 கோடி சுருட்டிய சீமா அகர்வால் கைது செய்யப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர், திருமண வரன் தேடும் இணையத்தில் சுயவிவரங்களை பதிவு செய்திருந்தார். இந்த இணையம் வாயிலாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த சீமா அகர்வால் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் சமூக வலைதளங்கள், செல்போன் வாயிலாக காதலை வளர்த்தனர். சீமா அகர்வாலின் அழகு, அன்பான பேச்சில் மயங்கிய நகைக்கடை … Read more

தற்கொலையை தடுத்து, போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு ரூ.9.91 லட்சம் செலுத்த விவசாயிக்கு நோட்டீஸ்

ராஜஸ்தானில் விவசாயி ஒருவரின் தற்கொலையை தடுத்து, பாதுகாப்பு வழங்கியதற்காக ரூ.9.99 லட்சம் கட்டணம் செலுத்த அந்த மாநில காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டம், கோத்டா பகுதியில் சிமென்ட் ஆலை அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு அனுமதி வழங்கியது. இந்த இடத்தில் விவசாயி வித்யாகர் யாதவ் குடும்பத்துக்கு சொந்தமான பூர்விக வீடு மற்றும் வயல் அமைந்துள்ளது. வீடு, வயலுக்காக சிமென்ட் ஆலை தரப்பில் ரூ.3.5 கோடியை இழப்பீடாக வழங்க … Read more

இளைஞர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம்: 71,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதன்மூலம் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் வரை 7 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட … Read more

சகோதரர் வீட்டில் ரூ.1.2 கோடி கொள்ளையடித்த தம்பி ஹைதராபாத்தில் கைது

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தின் தோமாலகூடா பகுதியில் நகை கடை வைத்திருந்தார் இந்திரஜித். சில தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளான இவர், வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால் இவரது அண்ணனோ வேறொரு இடத்தில் நகை கடை வைத்து அதனை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். இதனால், தம்பி இந்திரஜித்துக்கு தனது அண்ணனைப் பார்த்து பொறாமை ஏற்பட்டது. எப்படியாவது அவனை நடுத்தெருவுக்கு கொண்டு வரவேண்டும் என திட்டம் தீட்டினார். இதன்படி, கொள்ளை அடிக்கும் கும்பல் உதவியுடன் அண்ணன் … Read more

திரிபுரா புரு பழங்குடியினருடன் அமைச்சர் அமித் ஷா சந்திப்பு: அரசு திட்டங்கள் குறித்து விசாரித்தார்

திரிபுராவில் புலம் பெயர்ந்து வசிக்கும் புரு பழங்குடியின மக்களை சந்தித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கிறதா என கேட்டறிந்தார். மத்திய உள் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா திரிபுரா கடந்த 21-ம் தேதி சென்றிருந்தார். தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 72-வது கருத்தரங்கில் பங்கேற்றார். இதையடுத்து, 22-ம் தேதி தலாய் மாவட்டத்தில் புருஹ பாரா கிராமத்துக்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் புரு பழங்குடியின மக்களை சந்தித்துப் … Read more

வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வயநாடு மக்களவைத் தொகுதி … Read more

பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிக்க புதிய சங்கம் தொடக்கம்

பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிப்பதற்காக புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தை வாரியம் கட்டுப்படுத்துகிறது. அதேநேரம் பரஸ்பர நிதி திட்டங்களை ஊக்குவிக்க பரஸ்பர நிதி சங்கம் (ஆம்பி) செயல்படுகிறது. இதுபோல, தேசிய ஓய்வூதிய நிதியை (என்பிஎஸ்) நிர்வகிக்கும் நிறுவனங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) கட்டுப்படுத்துகிறது. இந்நிலையில், மும்பையில் ‘ஒய்வூதியத்துடன் எதிர்காலத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கில், தேசிய … Read more

புனே, பெங்களூரு, ஹைதராபாத்துக்கு மக்கள் குடிபெயரும் அபாயம் உள்ளது: இன்போசிஸ் நாராயணமூர்த்தி எச்சரிக்கை

புதுடெல்லி: உல​கள​வில் பருவ நிலை மாற்றம் மிகப்​பெரிய பிரச்​சினை​யாகி வருகிறது என்று ஏற்கெனவே இன்போசிஸ் நிறு​வனர் நாராயண​மூர்த்தி கவலை தெரி​வித்து வருகிறார். இந்நிலை​யில் மகாராஷ்டிர மாநிலம் புனே​வில் கடந்த வெள்​ளிக்​கிழமை நடைபெற்ற ஒரு கூட்​டத்​தில் நாராயண​மூர்த்தி கூறிய​தாவது: பருவ நிலை மாற்றம் குறித்த பிரச்​சினைக்கு குறிப்​பிட்ட காலத்​துக்​குள் தீர்வு காணா​விட்​டால், எதிர்​காலத்​தில் வாழ தகுதி​யற்ற சிறு நகரங்​களில் இருந்து ஏராளமான மக்கள் புனே, பெங்​களூரு, ஹைதரா​பாத் போன்ற நகரங்​களுக்கு குடிபெயரும் அபாயம் உள்ளது. அதுவும் அவ்வளவு எளிதல்ல. … Read more

யுபிஎஸ்சி மோசடி வழக்கு: பூஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்ட பூஜா கேத்கருக்கு, எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில். டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மகாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர் போலிச் சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சலுகைகளை பெற உடலில் குறைபாடு உள்ளவர் என போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஓபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழுந்தன. … Read more