உ.பி.,யில் என்கவுன்ட்டர்: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

லக்னோ: உ.பி.,யில் இன்று (டிச.26) நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் போலீஸ், உ.பி. அதிரடி காவல்படையினர் கூட்டாக இணைந்து இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட மூவரும் குருதாஸ்பூரில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது. இது குறித்து பஞ்சாப் மாநில காவல்துறை டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், “பிலிபித்தின் புரான்பூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த … Read more

புனே: நடைமேடையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி – 3 பேர் பலி; 6 பேருக்கு காயம்

புனே: புனேவில் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இன்று (டிச.23) அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில், “புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் ஒரு நடைமேடையில் தொழிலாளர்கள் சிலர் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிகாலையில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைமேடையில் ஏறியுள்ளது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் … Read more

ஹைதராபாத்தில் என்டிஆருக்கு 100 அடி சிலை: தெலங்கானா முதல்வர் ஒப்புதல்

ஹைதராபாத்: மறைந்த நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு நிறைவு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் என்டிஆருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார். இந்நிலையில் என்.டி.ராமாராவின் மகன் மோகனகிருஷ்ணா, என்டிஆர் இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் ஜனார்தன், உறுப்பினர் மதுசூதனராஜு ஆகியோர் ஹைதராபாத்தில் தெலங்கானா அமைச்சர் நாகேஸ்வர ராவ், முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேசினர். அப்போது, … Read more

அல்லு அர்ஜுனுக்கு எதிரான ஆதாரம்… டிச. 4இல் நடந்தது என்ன? வீடியோவை வெளியிட்ட போலீஸ்!

Allu Arjun vs Hyderabad Police: புஷ்பா – 2 சிறப்பு காட்சி திரையிடலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், அல்லு அர்ஜுன் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

உ.பி.யின் சம்பலில் 150 ஆண்டுகள் பழமையான படிகிணறு கண்டுபிடிப்பு

உ.பி.யின் சம்பலில் 150 ஆண்டுகள் பழமையான 400 சதுர மீட்டர் பரப்பளவிலான படிகிணறு இருப்பது தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரின் சந்தவுசி பகுதியில் உள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம் களஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. கள ஆய்வின்போது வன்முறை வெடித்தது. இதனிடையே, இந்த மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் திருடப்படுவதாகவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான சோதனையின்போது, தீபா சராய் … Read more

வங்கதேசத்தினர் ஊடுருவல்: டெல்லி போலீஸ் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் 170 பேர் சிக்கினர்

டெல்லியில் போலீஸார் நடத்திய சோதனையில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 170 பேர் சிக்கினர். இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. டெல்லியின் பல பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்த பலர் எந்த ஆவணமும் இன்றி தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து போலீஸார், வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி போலீஸார் மற்றும் வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு டெல்லியில் பல … Read more

பிரதமர் மோடிக்கு குவைத் அரசின் உயரிய விருது: 2 நாள் பயணத்தில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

குவைத் சிட்டி: கு​வைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்​கப்​பட்​டது. இந்தியா, குவைத் இடையே 4 ஒப்பந்​தங்​களும் கையெழுத்​தாகின. குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்​தினம் அந்த நாட்டுக்கு சென்​றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்​டி​யில் இந்திய வம்சாவளி​யினரை அவர் சந்தித்​து பேசினார். இந்திய தொழிலா​ளர்​களுக்கு அவர் விருந்து அளித்​தார். அவர்​களோடு … Read more

குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது

குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 2012-13-ம் ஆண்டில் அசாமில் குழந்தை திருமணம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அந்த மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில் சுமார் 35 சதவீதம் குழந்தை திருமணம் என்பது தெரியவந்தது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையை முதல்வர் ஹிமந்த பிஸ்வா … Read more

காஷ்மீர் மக்களின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கும் திட்டம்: குமரியில் இருந்து கடைக்கோடி வரை ரயிலில் பயணிக்கும் காலம் கனிந்தது 

இமயமலையில் அமைந்துள்ள குன்றுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 272 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவற்றில், மீதமுள்ள 17 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதன்மூலம்,காஷ்மீர் மக்களுக்கு விரைவில் தடையின்றி நேரடி ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாதையில், செனாப் ரயில் பாலம் மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக அமைந்துள்ளது. நாட்டின் வடகோடியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் லடாக் … Read more

பாஜக கூட்டணியில் இணைய மாட்டோம் – தேசிய மாநாட்டுக் கட்சி திட்டவட்டம்

ஸ்ரீநகர்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி சேரப் போவதாக வெளியான செய்தியை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி ஆதாரமற்றது என்று அக்கட்சி கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை மாநிலமாக மாற்ற பாஜக கூட்டணியில் இணைய தேசிய மாநாட்டுக் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக முதல்வர் உமர் அப்துல்லா பாஜக உயர்மட்டத் தலைமையை சந்தித்துள்ளதாகவும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியது. இந்நிலையில், இந்த செய்தியை தேசிய … Read more