மொஹாலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 2 பேர் உயிரிழப்பு; சிக்கியவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்
மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று (சனிக்கிழமை) மாலை 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தியோக்கைச் சேர்ந்த த்ரிஷ்டி வர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே இருந்து நேற்றிரவு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டாலும், படுகாயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. … Read more