மும்பை படகு விபத்தில் காணாமல்போன 7 வயது சிறுவனின் உடல் மீட்பு

மும்பை: மும்பையின் ‘கேட் வே ஆப் இந்தியா’ பகுதியில் இருந்து பிரபல சுற்றுலா தலமான எலிபென்டா தீவு நோக்கி ‘நீல்கமல்’ என்ற சுற்றுலா படகு கடந்த புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இப்படகில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது துறைமுகப் பகுதியில் கடற்படையின் விரைவு ரோந்துப் படகு இன்ஜின் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தது. இப்படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா படகு மீது மோதியதில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது. இதையடுத்து கடற்படை, கடலோர காவல் … Read more

முதல்வர் பட்னாவிஸ் வசம் உள்துறை: ஷிண்டேவுக்கு பொதுப் பணித்துறை | மகாராஷ்டிரா அமைச்​சர்​களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சனிக்கிழமை அன்று தனது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் யாருக்கு எந்த துறை என்பதை பார்ப்போம். முக்கிய துறையான உள்துறையை தன்வசமே வைத்துக் கொண்டுள்ளார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இதோடு எரிசக்தி, சட்டம் மற்றும் நீதித்துறை, பொது நிர்வாகத் துறை, தகவல் மற்றும் விளம்பரத் துறைகளையும் அவர் கவனித்துக் கொள்வார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற … Read more

நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17% காடுகள் – புதிய வன அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

டேராடூன்: நாட்டின் மொத்த வனம் மற்றும் மர அடர்த்திப் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டராக உள்ளது என்றும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதம் என்றும் இன்று (டிச. 21) வெளியிடப்பட்ட இந்திய வன நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று (21.12.2024) டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘இந்திய வன நிலை அறிக்கை 2023-ஐ (ISFR 2023) வெளியிட்டார். ஐஎஸ்எஃப்ஆர் … Read more

குவைத்தில் பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

குவைத்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட அப்துல்லா அல் பரூன், அப்துல் லத்தீப் அல் நெசெஃப் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று (டிச.21) குவைத் சென்றடைந்தார். விமான நிலையத்தில் குவைத் அரசின் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். மேலும், குவைத்தில் உள்ள இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய … Read more

வீடியோ பதிவுகள் குறித்த தேர்தல் விதிகளில் மாற்றம்: வெளிப்படைத் தன்மை மீது சந்தேகம் எழுப்பும் காங்.

புதுடெல்லி: சிசிடிவி காட்சி மற்றும் வேட்பாளர்களின் வீடியோ கட்சிகள் போன்ற சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெறுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு என்பது தங்களின் கூற்றுக்கான நிரூபணம் என்றும், இது தேர்தல் நடைமுறைகளின் ஒருமைப்பாட்டை படிபடியாக அழித்துவிடும் என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை, பொதுமக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் … Read more

பிஎஃப் நிதி மோசடி: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரன்ட்

பெங்களூரு: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா நடத்தும் ஆடை நிறுவனத்தின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்ததாக, அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.24 லட்சம் தொகையை டிச.27-க்குள் அவர் செலுத்த தவறும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா, பெங்களூருவில் இயங்கிவரும் சென்டார்ஸ் லைஃப் ஸ்டைல் பிராண்ட் பி.லிமிட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். அவர் தனது நிறுவனத்தில் … Read more

அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக நாடு தழுவிய தொடர் போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள தொடர் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் எம்பிக்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், “காங்கிரஸ் எம்பிக்களும், மத்திய செயற்குழு உறுப்பினர்களும் நாளையும் நாளை மறுநாளும் (டிச. … Read more

“டிகே சிவக்குமார், ஹெப்பல்கரால் என் உயிருக்கு ஆபத்து” – சி.டி.ரவி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பல்கர் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாஜக மேலவை உறுப்பினர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான கடந்த 19-ம் தேதி, சட்ட மேலவையில் பேசிய பாஜக உறுப்பினர் சி.டி. ரவி, மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ் அன்றைய … Read more

கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி!

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மேற்கோள் காட்டி, பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2002-ன் கீழ் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்க துறை கடிதம் எழுதியிருந்தது. அந்தக் … Read more

ஜெய்ப்பூர் சமையல் எரிவாயு டேங்கர் லாரி விபத்து பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனை ஜெய்ப்பூர் மேற்கு டிசிபி அமித் குமார் இன்று (சனிக்கிழமை) உறுதி செய்துள்ளார். ராஜஸ்​தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்​பூருக்கு சமையல் காஸ் டேங்கர் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்​டிருந்​தது. இந்த லாரி​யில் 22 டன் சமையல் காஸ் நிரப்பப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரின் … Read more