பிரதமர் மோடியின் ஆட்சியில் உலகின் ஆதிக்க சக்தியாக இந்தியா உதயம் – ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் உலகின் ஆதிக்க சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் சிறந்த தலைமை பண்பு காரணமாக இந்தியர்களிடையே நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள், நலிவுற்றோர் வாழ்வின் முன்னேற்றத்துக்காக பிரதமர் அயராது பாடுபட்டு வருகிறார். மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை வரையறுத்து செயல்படுத்துகிறார். அவரது தொலைநோக்கு பார்வைதிட்டங்களில் 135 … Read more

கேரளாவில் கால்பந்தாட்டத்தின்போது கேலரி உடைந்து 10 பேர் காயம்

கேரளாவில் கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர். மலப்புரம் மாவட்டம் பூக்கொட்டும்படாம் அரசு பள்ளியில் நடந்த கால்பந்து ஆட்டத்தில் மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு நான்கு அடுக்கிலான தற்காலிக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. பாரம் தாங்காமல் கேலரி உடைந்து விழுந்ததில் பார்வையாளர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். பார்வையாளர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்ட நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

வளைகுடா நாடுகளுடனான நல்லுறவு தொடரும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை

கொச்சி: நூபுர் சர்மா அரசு அதிகாரி அல்ல என்பதால், அவரது சர்ச்சை கருத்து மத்திய அரசின் நிர்வாகத்தில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், வளைகுடா நாடுகளுடனான நல்லுறவு தொடரும் எனவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பா.ஜ செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வளைகுடா நாடுகள் பல, தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்த … Read more

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே கோஷ்டி மோதல்

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதலில் குச்சி மற்றும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பு மாணவர்கள் எழுப்பிய கோஷத்தால் மற்றொரு தரப்பு மாணவர்கள் கோபமடைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குச்சிகள் மற்றும் கற்களை வீசி மாணவர்கள் தாக்கிக் கொண்டனர். போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், 10 நிமிடங்களுக்கும் மேலாக மோதிக் கொண்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். Source link

மாநிலங்களவை தேர்தலில் காங்.கின் 4 ஓட்டு எனக்கே: பாஜ ஆதரவு வேட்பாளர் பரபரப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தானில் 4 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடக்க உள்ளது. இதில் 108 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் 2 இடங்களிலும், பாஜ ஒரு இடத்திலும் வெல்வது உறுதியாகி உள்ளது. 4வது இடத்தை கைப்பற்றி காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்கிறது. இதற்கு பிற கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவு தேவை. இதனால், குதிரை பேரத்தை தவிர்க்க, காங்கிரஸ், பாஜ இரு கட்சிகளும் தங்களின் எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளன. இதற்கிடையே, பாஜ ஆதரவுடன் சுயேச்சையாக … Read more

அதிமுகவுடன் இணைகிறதா அமமுக..?: டி.டி.வி.தினகரன் சொல்வதென்ன..?

நீலகிரி மாவட்டம் குன்னூரில், அமமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது: “ஓராண்டு திமுக ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார். குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். அதை மறந்து விட்டார். சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 4 … Read more

ஜெய்பீம் சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை. எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன். அதனால் மற்றவர்களை விட என்னை … Read more

முதுகு தண்டுவட நோய் பாதிப்புடன் சி.ஏ. முடித்து சாதித்த கேரள பெண் மரணம்

கொச்சி: முதுகு தண்டுவடத்தில் அரியவகை மரபணு நோய் பாதிப்புடன் போராடி சி.ஏ. முடித்து, அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து சாதனை படைத்தவர், திடீரென இறந்தது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஈரூர் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்து( 28). இவரது தந்தை ஜெயபிரகாஷ், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். ப்ரீத்துக்கு பிறவியிலேயே அவரது முதுகு தண்டுவடத்தில் அரியவகை மரபணு நோய் பாதிப்பு (ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (எஸ்எம்ஏ) ஏற்பட்டது. இதனால் அவர் சிறுவயது முதல் சக்கர நாற்காலியில்தான் … Read more

மும்பை, டெல்லி, உள்ளிட்ட நகரங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா மிரட்டல்

இந்தியாவின் மும்பை, டெல்லி, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. பாஜக தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதையடுத்து பல்வேறு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து நூபுர் சர்மா, நவீன் ஜின்டால் ஆகியோரை பாஜக தலைமை நீக்கியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கருத்துகள், இந்திய அரசின் கருத்துகள் அல்ல என்றும் சில தனிப்பட்ட குழுவின் கருத்துகள் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. … Read more

பஞ்சாப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட மூசேவாலா குடும்பத்தினரை சந்தித்து ராகுல் ஆறுதல்: சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக குற்றச்சாட்டு

மான்சா: பஞ்சாப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் மூசேவாலாவின் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பஞ்சாப் மாநிலம் மூசா கிராமத்தை சேர்ந்த பாடகர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் சித்து மூசேவாலா. இவர், கடந்த மாதம் 29ம் தேதி மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், கொல்லப்பட்ட மூசேவாலாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சண்டிகர் வந்தார் ராகுல். பின்னர், அங்கிருந்து காரில் மூசேவாலாவின் வீட்டிற்கு சென்றார். … Read more