சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் கடைசி இடம் பிடித்த இந்தியா – ஆய்வு முடிவுகள்

டெல்லி: உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (2022), இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது. 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது. கொலம்பியா மற்றும் யேல் (YALE) பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. மொத்தம் 11 பிரச்னைகளை முன்வைத்து 40 குறியீடுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை ஆய்வு எடுக்கப்பட்டது. அதன்படி இதில் முதல் இடம், டென்மார்க் பிடித்துள்ளது. டென்மார்க் 77.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அமெரிக்கா இந்தப் பட்டியலில் 43வது இடமும், இந்தியா கடைசி … Read more

பினராய் விஜயன் சூட்கேசில் துபாய்க்கு பணம் கடத்தினார்: சொப்னா பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய சம்பவம் தொடர்பாக அமீரகத்தில் துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த சொப்னா, கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல மாதங்கள் சிறையில் இருந்த சொப்னா, சிவசங்கர் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி சொப்னா கேரள … Read more

ஸ்வப்னா சுரேஷ் வாக்கு மூலம்… கேரள முதல்வருக்கு சிக்கல்!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்லிட்டோர் சிக்கினர். இந்த வழக்கை விசாரித்து வந்த என்ஐஏ, உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, ஸ்வப்னா சுரேஷை 2020 ஜூலை மாதம் பெங்களூருவில் கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 மாதத்தில் ரூ.250 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 மாதத்தில் ரூ.250 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அனுமதிக்கப்படாமல் இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததால் படிப்படியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளாக தரிசன செய்ய முடியாத பக்தர்கள் தற்போது சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். கோடை விடுமுறையால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக … Read more

ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை: 'பப்பிற்குள் இருந்தே சதித் திட்டம்' – ஓவைஸி கட்சி எம்எல்ஏ மகன் கைது

ஹைதராபாத்: 17 வயது ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ மகன் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அசாதுதீன் ஓவைசியின் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி எம்எல்ஏ மகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட, ஆறு பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு பேரில் ஒருவர் AIMIM கட்சியின் எம்எல்ஏ மகனும் ஒருவர். அவர் மைனர் என்று … Read more

மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மேகதாது அணை விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது என தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை எடுத்துக் கொள்ள கர்நாடகம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்ற உத்தரவு மீறப்படுகிறது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் பருவமழை தீவிரமடைகிறது; 6 மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது. இன்றும், நாளையும் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்தாண்டு 3 நாட்களுக்கு முன்பாகவே பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மழை குறைவாக இருந்தாலும் இன்று முதல் மழை தீவிரமடையும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் இன்று முதல் வரும் 5 நாட்களுக்கு கேரளா முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை மையம் … Read more

’நாங்கள் சாவதே மேல்’.. உயிர் நீத்த 3 சகோதரிகள்.. ராஜஸ்தானில் ஒரு ’நல்லதங்காள்’ துயரம்!

ராஜஸ்தானில் வரதட்சணை கொடுமை தாளாமல் 3 சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பெண் நாட்டார் தெய்வங்களில் கதைகள் உண்டு. தமிழகத்திலும் ஏழு கன்னிமார்கள், நல்லதங்காள் கதைகள் உள்ளன. சமுதாயத்தில் ஏதோ ஒருவிதத்தில் கொடுமை தாங்க முடியாமல் கொல்லப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்களையே பின்னாளில் தெய்வங்களாக மாற்றினார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இந்தக் கதைகளை கேட்டால் கண்ணீர் வரவழைக்கும். இன்றைக்கும் நம்மூர்களில் நல்லத்தங்காள் கதையை விடிய விடிய மக்கள் … Read more

வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு-அதிகாரப்போக்குடன் செயல்பட்ட 4 அதிகாரிகளுக்கு 4 வார சிறை தண்டனை

தெலங்கானாவில், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில் அதிகாரப்போக்குடன் செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி உள்பட 4 காவல்துறை அதிகாரிகளுக்கு, 4 வாரம் சிறை தண்டனை விதித்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள், திருமண வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த நெறிமுறைகளை மீறி அதிகாரப்போக்குடன் செயல்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர், அவரது குடும்பத்தினருடன் தாய்லாந்தில் இருப்பது தெரிந்தும், … Read more

சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: 8 பேரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு

பஞ்சாப்: பஞ்சாப் பாடகர் மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் பிரமுகரான சித்து மூஸ்வாலா சில நாட்களுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டார்.