மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வியூகம்: மகாராஷ்டிராவில் கடும் போட்டி கொடுக்கும் சிவசேனா

மும்பை: மகாராஷ்டிராவில் மாநிலங்களவைத் தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் 22 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுயேச்சைகளின் ஆதரவுடன் கூடுதலாக ஓரிடத்தை பெறுவதற்கு பாஜகவும், சிவசேனாவும் தீவிர போட்டியில் இறங்கியுள்ளன. மொத்தம் 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 100 ஆக உள்ளது. மாநிலங்களவையில் இப்போது பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும், முப்பது வருடங்களில் நூறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 1990-ம் ஆண்டில்தான், காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 … Read more

விவசாயிகளுக்கு மானிய விலையில் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்களை வழங்கிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.!

ஆந்திர மாநிலம் குண்டூரில், விவசாயிகளுக்கு மானிய விலையில் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்களை வழங்கிய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அவற்றின் செயல்பாட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒய்.எஸ்.ஆர் இயந்திர சேவா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சுமார் 3 ஆயிரத்து 800 டிராக்டர்கள் மற்றும் 380 அறுவடை இயந்திரங்கள்  வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, விவசாயிகளுக்காக மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 750 இடங்களில் இயந்திர சேவை மையங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த மையங்களை அணுகி … Read more

நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட 42,000 போதைப்பொருட்களை அழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை

டெல்லி: நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட 42,000 போதைப்பொருட்களை அழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. லக்னோ, மும்பை உள்ளிட்ட 14 நகரங்களில் ஒரே நேரத்தில் அழிப்பு நடவடிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேற்று சாதிக்காரருடன் திருமணம்! மாப்பிள்ளையைச் சுட்டுக் கொன்ற மாமனார்

பீகார் மாநிலத்தில் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக மகள் வேற்று சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், ஆத்திரமடைந்த தந்தை பட்டப்பகலில் சலூனில் மாப்பிள்ளையை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள தும்ராவ்ன் கிராமத்தில் வசித்து வருபவர் சுனில் பதக். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரது மகள் அதே ஊரைச் சேர்ந்த உள்ளூர் நகராட்சி கவுன்சிலர் சோனு ராயின் சகோதரர் மோனு ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து … Read more

இனி இந்த மருந்துகளுக்கு மருந்துச் சீட்டு தேவை இல்லை- ஒன்றிய அரசு 

இருமல், சளி, வலி, தோல் பிரச்சினைகள் போன்றவற்றுக்கான மருந்துகளை விற்பதில் தளர்வுகளைக் கொண்டுவர ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி 1945இல் கொண்டுவரப்பட்ட மருந்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஒன்றிய சுகாதாரத் துறை பருந்துரைத்துள்ளது. இதற்காக 16 மருந்துகள் அடங்கிய K பட்டியல் ஒன்றைப் பரிந்துரைத்திருக்கிறார்கள். பரிந்துரைக்கப்படும் மருந்துகளை நேரடியாக மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அதற்கு மருத்துவரின் மருந்துச் சீட்டு அவசியம் இல்லை. கிருமி நாசினியான போவிடோன் அயோடின், பல் ஈறு அழற்சிக்கான குளோரெக்சிடின், க்ளோட்ரிமாசோல், பாராசெட்டமால் … Read more

கேதார்நாத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கிய ஹெலிகாப்டர்..!

கேதார்நாத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மக்கள் கூட்டம் நிறைந்திருந்தபோது ஹெலிகாப்டர் தடுமாறி தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், தனியார் விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளதுடன், அனுபவம் வாய்ந்த பைலட்டுகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. Source link

ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிப்பு

டெல்லி: அமிர்தப் பெருவிழா வாரத்தின் ஒருபகுதியாக, ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், போதைப்பொருள் அழிப்புப் பணியை காணொலி வாயிலாக பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், அதிகாரிகளுடன் உரையாற்றவுள்ளார்.

காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைக்கும் புதிய தீவிரவாத அமைப்பு: திடுக்கிடும் தகவல்

காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற பல படுகொலைகள் “காஷ்மீர் சுதந்திர போராளிகள்” என்கிற புதிய அமைப்பால் அரங்கேற்றப்பட்டவை என காஷ்மீர் போலீஸ் தகவல் அளித்துள்ளது. லஸ்கர், ஜெய்ஷ் போல அல்லாமல், ‘காஷ்மீர் சுதந்திர போராளிகள்’ அமைப்பின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருப்பதால், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலை படைகளை போல இல்லாமல், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சிறிய ரக பிஸ்டல் துப்பாக்கிகளை பயன்படுத்தி மிகவும் அருகிலிருந்து சுட்டு பலர் … Read more

கேரளம்: தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வருக்குப் பங்கு –  ஸ்வப்னா  ரகசிய வாக்குமூலம் 

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வருக்கும் அவரது மனைவிக்கும் மகளுக்கும் தொடர்பு இருப்பதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார் இரண்டாண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழி கடத்தப்படவிருந்த 14 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள தங்கம் ஒன்றிய சுங்கத் துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரித்குமார் என்பவரும் ஸ்வப்னா சுரேஷும் கைதுசெய்யப்பட்டனர். கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், முன்னாள் … Read more

Pani Puri: பானி பூரி சாப்பிட்ட சிறுமி பலி – 18 பேருக்கு உடல்நலக் குறைவு!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில், பானி பூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள, பில்ஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவ்கிராரி கிராமத்தில் உள்ள கிராமச் சந்தையில் உள்ள கடை ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சிறுவர்கள் பானிப் பூரி சாப்பிட்டனர். இதை அடுத்து அடுத்த நாள், பானி பூரி சாப்பிட்ட பலருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதில் … Read more