மும்பை, குவகாத்தி உள்பட 14 நகரங்களில் மீட்கப்பட்ட 42,000 கிலோ போதைப்பொருட்களை அழிக்க முடிவு..!

இந்தியாவின் 14 இடங்களில், சுமார் 42 ஆயிரம் கிலோ போதைபொருட்கள் நாளை அழிக்கப்பட உள்ளது. குவகாத்தி, லக்னோ, மும்பை உள்ளிட்ட 14 முக்கிய நகரங்களில், இதுவரை கைப்பற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள், அதிகாரிகள் முன்னிலையில் நாளை அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை காணொலிக்காட்சி வாயிலாக காணும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரிகள் மத்தியில் உரையாற்ற உள்ளதாகவும் மத்திய சுங்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது Source link

2021-22ம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு குறியீட்டை வெளியிட்டார் அமைச்சர் மன்சூக் மாண்டவியா

டெல்லி: 2021-22ம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு குறியீட்டை ஒன்றிய அமைச்சர் மன்சூக் மாண்டவியா வெளியிட்டார். அதில்; பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம், குஜராத் 2வது இடம், மகாராஷ்டிரா 3வது இடத்தை பிடித்துள்ளது. சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடம், மணிப்பூர் 2வது இடம், சிக்கிம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

காஷ்மீரில் இரட்டை என்கவுன்ட்டர் – 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் நடந்த இரட்டை என்கவுன்ட்டர் சம்பவங்களில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கண்டி பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார், சிஆர்பிஎஃப் வீரர்கள், ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு கண்டி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் தங்களை நெருங்குவதை உணர்ந்த தீவிரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் … Read more

உயிருக்கு ஆபத்து என புகார்: நூபுர் சர்மாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக போலீஸில் புகார் கூறிய நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நூபுர் சர்மா கொடுத்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. என்ன பேசினார்? பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நூபுர் … Read more

Prophet Muhammad: 15 நாடுகளிடம் 'குட்டு' – வாண்ட்டா வண்டியேறிய பாஜக!

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த பாஜக தலைவர்களுக்கு, இதுவரை, 15 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. தோஹா, முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள், … Read more

கேதார்நாத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கிய ஹெலிகாப்டர்

கேதார்நாத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மக்கள் கூட்டம் நிறைந்திருந்தபோது ஹெலிகாப்டர் தடுமாறி தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், தனியார் விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளதுடன், அனுபவம் வாய்ந்த பைலட்டுகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. Source link

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில் திடீர் தீ விபத்து.: 5 தீயணைப்பு வாகனங்களின் போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் வந்தது

டெல்லி: டெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் இன்று காலை 9.20 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உச்சநீதிமன்ற வளாகம் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more

'இறந்த கணவர் பாம்பாக வந்துள்ளார்' – வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் வாழும் பெண்

வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்புடன், மூதாட்டி ஒருவர் 4 நாட்களாக  தங்கியிருக்கும் சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி – பனகட்டி தாலுகா குல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மானஷா. இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மானஷாவின் வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்துள்ளது. பாம்பை பார்த்தால் படை நடுங்கும் என்பார்கள். ஆனால், மானஷா, இறந்துபோன கணவர் … Read more

ரூ.76,390 கோடி மதிப்பில் இந்தியாவில் தயாரித்த தளவாடங்கள் வாங்க ஒப்புதல்

புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ரூ.76,390 கோடிக்கு ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் சுயசார்பு கொள்கையின்படி (ஆத்ம நிர்பார் பாரத்) முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ராணுவத்துக்கு தேவையான பாதுகாப்பு கருவிகளை வாங்க ஆய்வு செய்யப்பட்டது. மலைப் பகுதிகளிலும் செயல்படும் போர்க் லிப்ட், பாலம் கட்டும் டேங்குகள், சக்கரங்கள் … Read more

சாலைக்கு கோட்சே பெயர்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் போலோ கிராமம். இந்த கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் புதிதாக சாலை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற குற்றவாளி நதுராம் கோட்சேவின் பெயர் கொண்ட பலகையை அந்த சாலைக்கு மர்ம நபர்கல் சிலர் வைத்துள்ளனர். கர்நாடக எரிசக்தி அமைச்சர் சுனில் குமாரின் தொகுதியில் உள்ள போலோ கிராம பஞ்சாயத்தில் சாலையோரத்தில் இந்த பெயர் பலகையில், மாநிலம் முழுவதும் உள்ள ஜில்லா பஞ்சாயத்துகளால் பொதுவாக பயன்படுத்தப்படும் அதே வண்ணங்கள் மற்றும் … Read more