ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்க ஒன்றிய அரசு முடிவு!: 6 மாத கால ஒப்பந்தத்திற்கு தயாராவதாக தகவல்..!!

டெல்லி: ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை இரட்டிப்பாக்க இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்குலக நாடுகள், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய முன்வந்த ரஷ்யா, இனி அமெரிக்க டாலரில் வர்த்தகம் கிடையாது என அறிவித்துள்ளது. ரஷ்யாவின் வர்த்தக நடவடிக்கை நேர்மறையான திசையில் செல்லும் … Read more

‘திவாலாகிவிட்டது’ – மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதார நிலை சீர்கேடு அடைந்துள்ளது. இந்தியர்களின் தனிநபர் வருமானம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கு பாஜகவிடம் பதில் இல்லை. அரசாங்கம் கொள்கை ரீதியாக திவால் நிலையில் உள்ளது. தனிநபர் வருமானம் ரூ.94,270 ஆக இருந்த நிலையில் இப்போது ரூ.91,481 ஆக குறைந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் இந்திய பொருளாதார நிலையை மோசமாக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். … Read more

எவரெஸ்ட் மலைச்சிகரம் உள்ளிட்ட 4 மலைகளில் இருந்து சுமார் 34 டன் அளவிலான கழிவுகள் அகற்றம்

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச்சிகரம் உள்ளிட்ட 4 மலைகளில் இருந்து சுமார் 34 டன் அளவிலான கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. நேபாள ராணுவத்தைச் சேர்ந்த குழுவினர் மலைச் சிகரங்களில் தூய்மைப் பணியை ஏப்ரல் மாதம் 5-ந்தேதி தொடங்கிய நிலையில், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ஆம் தேதி நிறைவடைந்தது. எவரெஸ்ட், லோட்ஸே, கஞ்சென்ஜங்கா, மனாஸ்லு ஆகிய மலைகளிலிருந்து கழிவுகள் அகற்றப்பட்டன. 30 ராணுவத்தினர், மலையேற்ற வழிகாட்டிகள் 48 பேர், 4 மருத்துவர்கள் உள்ளிட்டோர் … Read more

வெப்ப அலை ஓய்ந்தது!: ஆந்திராவில் பெருவாரியாக கொட்டித் தீர்த்த கனமழை..10 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கும் எச்சரிக்கை..!!

ஹைதராபாத்: ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக வெயில் தகித்து வந்த நிலையில், மாநிலத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. ராய்லிசீமா மாவட்டத்தில் கடும் மழை திடீரென்று கொட்டித் தீர்த்தது. கர்னூர் மாவட்டத்தில் ஹாலஹார்னி மண்டல் பகுதியில் சில மணி நேரத்தில் 4 செ.மீ. அளவுக்கு கனமழை பெய்ததால் … Read more

நூபுர் சர்மா பேச்சால் நீளும் பிரச்சினை: தொடரும் இஸ்லாமிய நாடுகளின் கண்டனம்

புதுடெல்லி: நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் கூட இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய நாடுகளின் பட்டியல் நீள்வது நின்றபாடில்லை. நேற்று (திங்கள் கிழமை) பஹ்ரைன், பாகிஸ்தான், தாலிபான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜிசிசி நாடுகளான குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், … Read more

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்த அரக்கன்..! அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றதால் ஆத்திரம்

காதல் மனைவியை , துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்து வைத்து விட்டு தப்பிச்சென்ற கணவனை போலீசார் தேடிவருகின்றனர் தெலங்கானா மாநிலம் மகபூப்நகரை சேர்ந்தவர் அனில் குமார், கடந்த 2020 ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத் எஸ்பிஆர் ஹில்ஸ் பகுதியில் குடித்தனம் நடத்தி வந்தார். திருமணமான சில மாதங்களிலேயே அனிலுக்கும், சரோஜாவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் சரோஜா கோபித்துக் கொண்டு பெற்றோர் … Read more

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இமாச்சல பிரதேசத்தில் 3 நாட்களுக்கு மேலாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு!

சிம்லா : நாடு முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் வரும் நிலையில், குளிர்பிரதேசமான ஹிமாச்சல பிரதேசத்தில் 37 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி இருப்பது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான மலைப் பகுதியான தர்மசாலாவில் நேற்றைய வெப்பநிலை 37.5 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி உள்ளது. கடைசியாக 2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அங்கு … Read more

' தங்கக் கடத்தலில் தொடர்புடையவர்களை தோலுரித்துக் காட்டுவேன்' – ஸ்வப்னா சுரேஷ்

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவரின் பெயரையும் வெளியிடுவேன் என்று ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி, ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த … Read more

24 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் யோகா பயிற்சி

டேராடூன்: இந்தோ-திபெத் எல்லைப்படை போலீஸார் (ஐடிபிபி) 24 ஆயிரம் அடி உயர சிகரத்தில் ஏறி யோகா பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளனர். ஐடிபிபி சார்பில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஐடிபிபியின் மலையேற்றத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் குழு, கடல் மட்டத்திலிருந்து 22,850 அடி உயரத்தில் உள்ள மலை மீது யோகா பயிற்சி பற்றி செயல் விளக்கம் அளிக்கின்றனர். வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, மைனஸ் டிகிரி செல்சியஸ் … Read more

இந்தியா அனுப்பிய மருந்துப் பொருட்கள் இலங்கையில் விநியோகம்

தமிழகத்தில் இருந்து அனுப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் பொருட்கள் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டன. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 25 டன் மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பியது. உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஹம்பந்தோடா , யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து அனுப்பட்ட அரிசி, பால் பவுடர் … Read more