கோயில் திருவிழாவில் வித்தியாசமான அசைவுகளை வெளிப்படுத்தி உற்சாக நடமாடிய 72 வயது காங்கிரஸ் எம்.எல்.ஏ..!
கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் 72 வயதான சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கோயில் திருவிழாவில் தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோலார் மாவட்டம் சீனிவாசபுராவில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார், தெலுங்கு பாடல் ஒன்றுக்கு உற்சாகமாக நடனமாடினார். திருவிழாவில் நடனமாடிய ரமேஷ் குமார், சபாநாயகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Source link