இமயமலைப்பகுதியில் 22 ஆயிரத்து 850 அடி உயரத்தில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் யோகா பயிற்சி செய்து சாதனை

உத்தரகாண்ட் மாநிலம் இமயமலைப்பகுதியில் 22 ஆயிரத்து 850 அடி உயரத்தில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 14 பேர் யோகா பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளனர். சுமார் 20 நிமிட நேரம் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச யோகா தின செய்தியாக இந்த அரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   Source link

நடத்தையில் சந்தேகம் வந்ததால் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்; உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் அடுத்த பெத்னாபூர் மின் துறையில் ரஜினி தேவி (26) என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவரது நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் ஞானதத்தா பதக், தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துவந்தார். இதனால் கோபமடைந்த ரஜினி தேவி, தனது பெற்றோர் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து, தனது மனைவியை அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டிற்கு ஞானதத்தா பதக் சென்றார். அங்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தனது மனைவியை வீட்டிற்கு … Read more

சல்மான் கான் கொலை மிரட்டல் கடிதத்தில் கொள்ளை கும்பல் குறியீடுகள்: போலீஸ் விசாரணை

மும்பை: சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தில் இருந்த கொள்ளை கும்பலின் இனிஷியல்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பாலிவுட் நடிகர் சலீம் கான் அவரது மகன் சல்மான் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவர்களின் மும்பை வீட்டின் வெளியில் ஒரு கடிதம் கிடந்தது. அந்தக் கடிதத்தில் சலீம் கான், சல்மான் கான் நீங்கள் இருவரும் சித்து மூஸ் வாலாவைப் போல் போகப் போறீர்கள் என்று எழுதியிருந்தது. மேலும் அதில் G.B., L.B. … Read more

முகமது நபிகள் குறித்து பாஜக சர்ச்சைக்குரிய கருத்து… கத்தாரில் உள்ள இந்திய துணை ஜனாதிபதி விருந்து நிகழ்ச்சி ரத்து!

டெல்லி: முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்த தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் விவகாரத்தால் கத்தாரில் உள்ள இந்திய துணை ஜனாதிபதி விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நவீன் குமார் ஜிந்தால் மற்றும் நுபுர் சர்மா ஆகியோர் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தனர். இதானால் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்திய அளவில் மட்டும் இல்லாமல், அரபு நாடுகளான சவுதி அரேபியா, குவைத், கத்தார் … Read more

கர்நாடகா: அசுத்தமான தண்ணீரைக் குடித்து 3 பேர் அடுத்தடுத்து மரணம்! பலருக்கு தீவிர சிகிச்சை

கர்நாடகாவில் அசுத்தமான தண்ணீரைக் குடித்து 3 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். குழந்தைகள் உட்பட மேலும் பலர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கழிவுநீர் கொண்டு செல்லும் குழாயுடன் குடிநீர் வழங்கும் குழாய் இணைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விசாரணைக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு … Read more

கேரளம்: போன் தர மறுத்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

போன் தர மறுத்ததால் கேரள மாநிலம் கொல்லம் அருகே கோட்டைக்ககம் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தற்கொலைசெய்துகொண்டார். ரதீஷ்-சிந்து தம்பதியரின் மகளான ஷிவானிதான் தற்கொலைசெய்துகொண்டது. நேற்று இரவு சமூக ஊடக நட்பு தொடர்பாக அம்மா-மகளுக்கு இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து போன் பார்க்க அம்மா அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷிவானி, தாங்கள் வசித்துவந்த வாடகை வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இவர் கொல்லம் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் … Read more

பல்கலைக்கழக வேந்தராகிறார் முதல்வர்… மாநில ஆளுநருக்கு செக்!

அனைத்து மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்களே பதவி வகித்து வருகின்றனர். இதன்படி மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஜெகதீப் தங்கார் பதவி வகித்து வருகிறார். இந்த பதவியை அவரிடம் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி்க்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானத்திற்கு மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து மேற்கு வங்க மாநில முதல்வரை பல்கலைக்கழங்களின் வேந்தர் ஆக்க வகை செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டு சட்டமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட … Read more

கடும் வெப்பத்தின் காரணமாக டெல்லிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்': இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: கோடையின் காரணமாக டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடும் வெப்பத்தின் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே.ஜனமணி கூறுகையில், வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.மேலும் மேகாலயா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வடமாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை எனவும் இதுகுறித்து கண்காணித்து வருவதாகவும் ஆர்.கே.ஜனமணி கூறியுள்ளார். கடும் வெப்பத்தின் காரணமாக தலைநகர் … Read more

காலாவதியாகும் நிலையில் 1000 கோடி மதிப்பிலான ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள்!

இந்தியாவில் 60 லட்சம் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கோடை காலத்தில் கொரோனா 2-வது அலையின்போது நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாக கருதப்பட்ட ரெம்டெசிவருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவரை வாங்கி சென்றனர். தேவை அதிகம் இருந்த காரணத்தால், ரெம்டெசிவர் மருந்தும் அதிக அளவு தயாரிக்கப்பட்டது. ஆனால் உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்ததால், இந்தியாவில் தற்போது 60 லட்சம் ரெம்டெசிவர் … Read more

ராஜஸ்தான் மாநிலங்களவைத் தேர்தலில் பரபரப்பு: காங்கிரஸை தொடர்ந்து  ரிசார்ட்டில் பாஜக எம்எல்ஏக்கள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 10-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் இருகட்சிகளும் தங்களது எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக பாஜக 5 வேட்பாளராக பிரபல ஊடக நிறுவன உரிமையாளர் எஸ்செல் குழுமத்தின் தலைவர் குழுமத் தலைவர் சுபாஷ் சந்திராவை களமிறக்கியுள்ளது. பாஜகவு ஆதரவுடன் அவர் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எஸ்ஸல் குழுமத்தின் தலைவரான சுபாஷ் சந்திரா ஜீ குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் தலைவராவார். … Read more