'குறுகிய மனப்பான்மை கொண்ட விமர்சனம்' – இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: முகமது நபி தொடர்பான சர்ச்சைக் கருத்து விவகாரத்தில் கத்தார், ஓமன், சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் குறுகிய மனப்பான்மை கொண்ட விமர்சனத்தை முன்வைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளார் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரிந்தம் … Read more

இஸ்லாமிய கூட்டமைப்புக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் விவாதம் நடைபெற்றது. அதில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா பங்கேற்றார். அப்போது அவர், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், முகமது நபி … Read more

பைக்கர் குழுவுடன் வாக்குவாதம்…பைக் மீது காரை மோதிவிட்டு வேகமாக சென்ற நபர்…பதறவைக்கும் காட்சி

டெல்லியில் சாலையில் சென்ற பைக்கர் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரில் சென்ற நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்றவரை காரால் இடித்து கீழே தள்ளிவிட்டு வேகமாக செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அர்ஜன் கார்  மெட்ரோ ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஜிட்டல் கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: நிதியமைச்சகத்தின் 8 ஆண்டுகால பயணத்தை எடுத்துரைக்கும் வகையில், டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்.

"உங்கள் குறுகிய எண்ணத்தை எதிர்க்கிறோம்" – இஸ்லாமிய கூட்டமைப்புகளுக்கு இந்தியா கண்டனம்

இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும் என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை இகழும் வகையில் பேசி இருந்தார். இந்த விவகாரம் தேசியளவில் விவாதப்பொருளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. இருவரதும் பேச்சுக்கு … Read more

மதக் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம்: பாஜக விளக்கம்

புதுடெல்லி: முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா கட்சியில்இருந்து தற்காலிகமாக நீக்கப்பட் டுள்ளார். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் விவாதம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா பங்கேற்றார். அப்போது அவர், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக முஸ்லிம்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நூபுர் சர்மாவை கண்டித்து உத்தர பிரதேசத்தின் கான்பூரில் … Read more

Covid 4th Wave: தொடங்கியதா 4ம் அலை? – இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

இந்தியாவில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது, நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி, மேற்கண்ட மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், … Read more

புதிய நாணயங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி!

பார்வை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், விடுதலையின் 75ஆம் ஆண்டு விழா முத்திரையுடன் கூடிய புதிய நாணயங்களை மக்களின் பயன்பாட்டுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் நிதியமைச்சகம், நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது விடுதலையின் 75ஆம் ஆண்டு விழா முத்திரையுடன் கூடிய புதிய நாணயங்களை மக்களின் பயன்பாட்டுக்காக வெளியிட்டார். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், … Read more

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மராட்டிய அரசு அதிகரித்தது. தினமும் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு விட்டு சல்மான் கான் அமரும் பெஞ்சில் மிரட்டல் கடிதம் இருந்தது. மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து சல்மான் கான் மற்றும் அவரது தந்தையிடம் மும்பை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

சர்வதேச அளவில் எதிரொலித்த நபிகள் நாயகம் சர்ச்சை – இதுவரை நடந்தது என்ன?

நபிகள் நாயகம் குறித்ததான சர்ச்சை கருத்து, இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் எதிரொலித்துள்ள நிலையில் அதன் பின்னணியை விரிவாக பார்ப்போம். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை இகழும் வகையில் பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டலும் நபிகள் நாயகத்துக்கு எதிராக ட்வீட் செய்தார். அது அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் அந்த ட்வீட்டை அழித்து விட்டார். இருவரதும் பேச்சுக்கு … Read more