'தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும்தான் மத சகிப்பின்மை இருக்கிறது' – சத்குரு ஜக்கி வாசுதேவ் பேட்டி

‘தொலைக்காட்சிகளில் மட்டும்தான் மத சகிப்பின்மை மிகைப்படுத்தப்படுகிறது’ என்று ஈஷா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து: “நாம் சில விஷயங்களை மிகைப்படுத்துகிறோமோ எனத் தோன்றுகிறது. சில விஷயங்கள் பற்றி தொலைக்காட்சிகளில் காரசார விவாதங்களை நடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், எந்த ஒரு தெருவிலும் அப்படியான விவாதத்தை பார்த்ததில்லை. டெல்லியிலோ இல்லை நாட்டின் எந்த ஒரு கிராமத்திலோ சென்று பாருங்கள். அங்கு சகிப்பின்மையும், வன்முறையும் இருக்காது. வன்முறையில் யாரேனும் … Read more

110ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் மீண்டும் கண்டுபிடிப்பு

அருணாசலபிரதேசத்தில் 110 ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய தாவரவியல் ஆராய்ச்சி துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாசலபிரதேச வனப்பகுதியில் பூக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது Anjaw மாவட்டத்தில் ஒரு தாவர மாதிரிகளை சேகரித்தனர். அதை ஆய்வு செய்ததில், அது இந்திய லிப்ஸ்டிக் தாவரம்தான் என்று கண்டறிந்துள்ளனர். ஈரப்பதமான, பசுமையான வனத்தில் 543 மீட்டர் முதல் ஆயிரத்து 134 மீட்டர் உயரமான பகுதிகளில் இது வளரக்கூடியது. Source link

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்

டெல்லி: கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்ததுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் இவர்கள் நேற்று குளிக்க சென்றுள்ளனர். அப்போது தடுப்பணைக்கு அருகே ஏற்பட்ட சூழல் காரணமாக இரண்டு பேர் நீரில் மூழ்க, அவர்களை காப்பாற்ற சென்ற மற்ற 5 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதில் 4 சிறுமிகள், 3 பெண்கள் என மொத்தம் 7 பேர் … Read more

இந்தியா கரோனா நிலவரம் | தொடர்ந்து 2-வது நாளாக 4000ஐ கடந்த தொற்று; 9 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாடு முழுவதும் புதிதாக 4518 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொற்று 4270 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,181,335 என்றளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவால் 9 பேர் உயிரிழந்த நிலையில் கரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 5,24,701 ஆக … Read more

அசாமில் மூங்கில் பாலம் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேர்

அசாமில் மூங்கில் பாலம் உடைந்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு தத்தளித்த 4 பேரை பொது மக்கள் பத்திரமாக மீட்டனர். சிராங் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் நங்கல் பங்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மூங்கில் பாலம் வெள்ளநீரில்  சிக்கி இரண்டாக உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தை கடக்க முயன்ற 4 பேர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கிராம மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். அசாமில் … Read more

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். நீரில் மூழ்கி இறந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் லிப்ஸ்டிக் தாவரம் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு: அதன் சிறப்பு என்ன?

நூற்றாண்டு பழமையான தாவரம் ஒன்றை இந்திய தாவரவியல் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அருணாசல பிரதேசத்தின் வனப்பகுதியில் இருந்து கண்டறிந்துள்ளனர். 1912ம் ஆண்டு பிரிட்டிஷ் தாவரவியல் வல்லுநரான ஸ்டீஃபன் ட்ராய்ட் டன் என்பவர்தான் முதலில் அருணாசல பிரதேசத்தில் இருந்து இந்தியாவின் லிப்ஸ்டிக் தாவரம் என அழைக்கப்படும் அரிய வகை தாவரத்தை கண்டறிந்தார். அதன் தாவர பெயர் Aeschynanthus monetaria Dunn ஆகும். குழாய் போன்ற சிவப்பு நிறத்தாலான இந்த ஈஸ்கினாந்தஸ் தாவர இனத்தின் கீழ் உள்ள இந்த … Read more

'இந்தியாவை ஒன்றிணைக்கும் தருணம் இது' – ஈரான், கத்தார், சவுதி கண்டனத்தை தொடர்ந்து ராகுல் கருத்து

புதுடெல்லி: இந்”தியாவை ஒன்றிணைக்கும் தருணம் இது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. கடைசியாக கண்டனத்தைப் பதிவு செய்த சவுதி அரேபியா, நூபுர் சர்மாவின் கருத்துகள் அவமரியாதையானவை. மற்ற மதத்தின் நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக-வின் … Read more

லாரியை முந்தி செல்ல முயன்ற இரு சக்கர வாகனம் மீது மோதிய கார்.. சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு..!

கேரள மாநிலம் மலப்புறத்தில் அதிவேகத்தில் சென்ற கார் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொண்டோட்டி – முறையூர் சாலையில் அதிகாலையில் ,அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சாலையோரம் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். காரின் அடியில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனம் சிறிது தூரம் சாலையில் … Read more

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,518 ஆக அதிகரிப்பு… 9 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 4,518 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,81,335 ஆக உயர்ந்தது.* புதிதாக 9 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more