உத்தரகாண்ட் : சார்தாம் யாத்திரையின் போது பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு; பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்!!

டேராடூன்:உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள டம்டா அருகே யமுனோத்ரிக்கு கோயிலுக்கு நேற்று மாலை, பேருந்தில் பக்தர்கள் சென்றனர். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, கீழே உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருண்டது. இதில், 22 பக்தர்கள் உடல் நசுங்கி  பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். இதில் 30 பேர் பயணம் செய்தனர். தகவல் அறிந்ததும் உத்தரகாசி மாவட்ட … Read more

உத்தராகண்ட் | தொலைதூரத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு 18 கி.மீ மலையேறி சென்ற தலைமை தேர்தல் ஆணையர்

டேராடூன்: நாட்டில் தேர்தல் நடைபெறும் போது கடினமான மலைப் பகுதிகள், ஆறுகள், அடர்ந்த வனப்பகுதிகளில் கூட வாக்குச் சாவடிகள்உள்ளன. குறிப்பாக பழங்குடி யினத்தவர்கள் வாழும் இடங்களுக்கு பல சிரமங்களை தாண்டி வாக்குச் சாவடி அதிகாரிகள் செல்கின்றனர். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், உத்தராகண்ட் மாநிலத்தில் தொலைதூரத்தில் உள்ள வாக்குச் சாவடியை பார்வையிட நேற்று 18 கி.மீ. தூரம் மலையேறி சென்றார். உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது துமக் கிராமம். இந்த கிராமம். இந்தப் … Read more

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறிய புதிய 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் இன்று வெளியீடு

பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறியும் வகையிலான சிறப்பு நாணய தொகுப்பை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார். மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளில் இரு அமைச்சகங்களிலும் மேற்கொண்ட பணிகள் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் மதிப்பிலான சிறப்பு நாணயங்களை பிரதமர் வெளியிடுகிறார். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் … Read more

11 பேர் நீக்கம், 10 புதிய முகங்களுடன் – ஒடிசாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் 21 பேர் அடங்கிய புதியஅமைச்சரவை நேற்று பதவியேற்றது. 13 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 8 பேர் இணையமைச்சர் களாகவும் பதவியேற்றனர். கடந்த 1997 டிசம்பர் 26-ம் தேதி ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தொடங்கப்பட்டது. அந்த கட்சியின் நிறுவனரும், தலைவருமான நவீன் பட்நாயக் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஒடிசாவின் முதல்வராக முதல்முறையாக பதவியேற்றார். அன்று முதல் இன்று வரைஅவர் ஒடிசாவின் முதல்வராக நீடிக்கிறார். அவர் முதல்வராக பதவியேற்று 22 ஆண்டுகள் … Read more

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து.. கட்சியில் இருந்து இரண்டு பேரை நீக்கியது பாஜக தலைமை..!

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கட்சியினர் 2 பேர் பாஜக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா, மற்றும் பாஜகவின் டெல்லி ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் ஜின்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதற்கு கத்தார், குவைத் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கமும், நவீன் ஜிண்டால் நீக்கமும் செய்யப்பட்டனர். எந்த மதத்தையும் அவமதிப்பு செய்வதை பாஜக ஆதரிக்காது … Read more

1 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: 12 பழைய முகங்களின் பதவியை பறித்த நவீன்: ஒடிசாவில் அதிரடி

புவனேஸ்வர்: ஒடிசாவில் புதிதாக 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர். ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களையும் ராஜினாமா செய்யும்படி  நவீன் பட்நாயக் நேற்று முன்தினம் திடீரென உத்தரவிட்டார். அதன்படி, 20 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கணேஷி லாலுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், சபாநாயகர் சூர்ஜ்ய நாராயண் பாட்ரோவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, … Read more

105 வயதிலும் தண்ணீர் குடத்துடன் மாடிப்படி ஏறும் ஆந்திர மாநில மூதாட்டி

திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கைகல் கிராமத்தை சேர்ந்தவர் அச்சம்மாள். வயது 105. இவரது கணவர் 30 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 7 மகள்கள், 4 மகன்கள். மூத்த மகள் ஞானம்மாளுக்கு 85 வயது. கடைசி மகனுக்கு 49 வயது. அச்சம்மாளுக்கு 26 பேரன், பேத்திகள், 35 கொள்ளு பேரன், பேத்திகள் உள்ளனர். 100 வயதை கடந்தாலும் அச்சம்மாள் தனது பணிகளை தானே செய்கிறார். வீட்டிற்கு தேவையான தண்ணீரையும் வெளியில் குழாயில் பிடித்து, … Read more

குமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை

புதுடெல்லி: குமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்பட உள்ள யாத்திரைக்கான ஏற்பாடு குறித்து, ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. நாடாளுமன்ற  மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்வி, உட்கட்சி பூசல், மூத்த தலைவர்கள் அதிருப்தி என பல்வேறு காரணங்களால் தள்ளாட்டம் கண்டுள்ள காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் ‘சிந்தனை அமர்வு’ மாநாடு நடந்தது. இதில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த மாநாட்டில், கட்சியை பலப்படுத்தும் வகையில்  ‘பாரத் … Read more

கான்பூர் கலவரத்தில் கைதானவருக்கு பிஎப்ஐ அமைப்புடன் தொடர்பு?

கான்பூர்: உத்தரப் பிரதேசம் கான்பூரில் உள்ள பரேடு பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் செய்தி பரப்பப்பட்டதால், கடந்த 3-ம் தேதி இரு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 12 பேர் காயம் அடைந்தனர். இந்த கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டது ஹயத் ஜாபர் ஹஸ்மி மற்றும் அவரது 3 கூட்டாளிகள்தான் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. லக்னோவில் ஹஸ்ரத்கன்ஜ் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். கான்பூர் வன்முறை தொடர்பாக 800-க்கும் மேற்பட்டோர்கள் மீது போலீசார் … Read more

அமர்நாத் யாத்திரையில் காந்த வெடிகுண்டு தாக்குதல் அபாயம்: பாதுகாப்பு படைகள் உஷார்நிலை

ஸ்ரீநகர்: ஜம்ம காஷ்மீரில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அமர்நாத் யாத்திரை, வரும் ஜூன் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில், 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. சமீபத்தில், பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவிய டிரோனை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதில், 7 காந்த வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இந்த காந்த வெடிகுண்டுகள் புதிதாக இருப்பதால், பாதுகாப்பு படையினர் உஷார் … Read more