சார்தாம் யாத்திரையின் போது பஸ் கவிழ்ந்து 22 பக்தர்கள் பலி

டேராடூன்: சார்தாம் யாத்திரைக்கு பக்தர்கள் சென்ற பேருந்து, மலைப்பாதையில் இருந்து உருண்டு விழுந்ததில் 22 பேர் பலியாகினர்.உத்தரகாண்டில் உள்ள யமுனோத்ரிக்கு கோயிலுக்கு நேற்று மாலை, பேருந்தில் பக்தர்கள் சென்றனர். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, கீழே உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருண்டது. இதில், 22 பக்தர்கள் உடல் நசுங்கி  பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இதில் 28 பேர் பயணம் செய்தனர். தகவல் அறிந்ததும் உத்தரகாசி மாவட்ட கலெக்டரும், மீட்பு படையினரும்  விபத்து நடந்த … Read more

ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தலில் குதிரை பேரம் 6 அதிருப்தி எம்எல்ஏ.க்களை சமாதானப்படுத்திய கெலாட்: சொகுசு விடுதிக்கு அழைத்து வந்து விருந்து

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தலுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், 6 அதிருப்தி எம்எல்ஏ.க்களையும் சமாதானப்படுத்தி அவர்களையும் சொகுசு விடுதிக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அழைத்து வந்தார்.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்பிகளுக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் 4 மாநிலங்களவை … Read more

புதுச்சேரி: குழந்தைகளை கடை வாசலில் கட்டிவைத்துவிட்டுச் சென்ற பெற்றோர்

புதுச்சேரியில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள சாலையோரக்கடை வாசலில் இரண்டு குழந்தைகளை கட்டிவைத்து விட்டு பெற்றோர்கள் சென்ற சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. புதுச்சேரியில் முக்கிய பெரிய வணிக நிறுவனங்கள் நிறைந்த மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள ஒரு கடையின் முன்பு இரண்டு குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அதில் ஒரு குழந்தையின் இடுப்பில் கயிற்றால் கட்டப்பட்டு மறுமுனை கடையில் கட்டப்பட்டிருந்தது. இதனை நேரில் பார்த்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக … Read more

மகாராஷ்ட்ராவில் தண்ணீர் பற்றாக்குறை – சேற்று நீரை வடிகட்டி பருகும் மக்கள்

மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக்கில் நிலவும் கடும் வறட்சியால் ஆழ்கிணற்றில் சேறும் சகதியுமாக உள்ள தண்ணீரை மக்கள் எடுக்கும் அவலம் நீடிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையால் கிணறு வறண்டு காணப்படுகிறது. கிணற்றின் அடியில் எஞ்சியிருக்கும் சேற்றுநீரை சேகரித்து அதை வடிகட்டி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் அலைந்து திரிகின்றனர். Source link

மண்வளம் காக்க 5 திட்டங்கள்.. மாசுபாட்டைக் குறைக்க எத்தனால் பயன்பாடு..!

மண்வளம் காக்க இந்தியா ஐந்து திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், காற்று மாசுபாடு, புவி வெப்பமாதலைக் குறைக்கப் பெட்ரோல் டீசலில் பத்து விழுக்காடு எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்குவித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி டெல்லியில் ஈசா பவுண்டேசன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மண்ணைக் காப்போம் என்கிற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, சுற்றுச்சூழலைக் காக்க இந்தியா உலக நாடுகளுடன் இணைந்து தொலைநோக்குடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பெட்ரோல் டீசலில் பத்து … Read more

பொம்மை துப்பாக்கி ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடிவிபத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு; உயர்மட்ட விசாரணைக்கு உ.பி அரசு உத்தரவு

ஹாபூர்: உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் தவுலானா ெதாழில்துறை பகுதியில் செயல்படும் ரூஹி இண்டஸ்ட்ரி ரசாயன தொழிற்சாலையில் நேற்று மாலை கொதிகலன் வெடித்த சம்பவத்தில் நேற்று வரை 11 பேர் தீயில் கருகி பலியான நிலையில், இன்று பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் டெல்லி மற்றும் மீரட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஐஜி … Read more

உ.பி: மாடு திருடிய வழக்கு! இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை நடத்திய காவலர்கள்!

உத்தரபிரதேசத்தில் மாடு திருடிய வழக்கில் கைதான இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கடுமையாக விசாரணை நடத்திய காவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் படாவுன் காவல்துறையினரால் மாடு திருடிய வழக்கு தொடர்பாக 20 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்டேஷன் இன்சார்ஜ் உட்பட 5 போலீசார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ரெஹான். மே … Read more

5 மாதங்களுக்கு முன்னதாக சாதித்த இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், எரிபொருளின் மீதான இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைத்தல், அன்னியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், இந்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை’ 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை குறிக்கும் இலக்காகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஊக்கமளிக்கும் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, … Read more

ஜூன் 7 முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும்-இந்திய வானிலை ஆய்வுத் துறை

தென்னிந்தியாவில் மழைப்பொழிவு ஜூன் 7 முதல் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் வழக்கத்தை விட முன்கூட்டி மே 29ஆம் நாள் தொடங்கியது. எட்டு நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை தென்னிந்தியாவில் அதிக மழைப் பொழிவு இல்லை என்பதால் பருவமழை வலுக் குறைந்துள்ளதாகத் தனியார் வானிலை முன்கணிப்பு முகமையான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது. Source link

ஆந்திராவில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் தப்பிய புலியை பிடிக்கும் பணி தீவிரம்.!

ஆந்திராவில், கூண்டில் சிக்காமல் தப்பிய புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புலி தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டம் சர்பவரம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக உலவி வரும் புலி ஒன்று, அப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை அடித்துக்கொன்று தின்றுள்ளது. இதனால், அப்புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். புலியை பிடிக்கும் பணியில் 120-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை பிடிக்க … Read more