நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சஸ்பெண்ட்

நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து காரணமாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து … Read more

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து.. 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி.!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளைஞர் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் நைனார் பாளையத்தை சேர்ந்த 26 வயதான புகழேந்தி என்பவர் புதுச்சேரியில் பேட்டரி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Source link

பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட 55 நடிகர், நடிகைகளுக்கு கொரோனா? பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பு

மும்பை: திரைப்பட தயாரிப்பாளரின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட 55 பிரபல நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாசிடிவ் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் … Read more

கான்பூர் வன்முறை எதிரொலி | பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபூர் சர்மா, நவீன் ஜிண்டால் சஸ்பெண்ட்

மதத் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி கான்பூர் கலவரத்துக்கு காரணமாக இருந்த செய்தி தொடர்பாளர்கள் நூபூர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை பாஜக சஸ்பெண்ட் செய்துள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு மதங்கள் தோன்றி, செழிப்பாக வளர்ந்துள்ளன. பாஜக அனைத்து மதத்தையும் மதிக்கிறது. எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் … Read more

மண்ணை காப்பாற்ற 5 முக்கிய விஷயங்கள்: பிரதமர் மோடி தகவல்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விஞ்ஞான பவனில் நடைபெற்ற “மண் காப்போம் இயக்கம்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அங்கிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘மண்ணைக் காப்போம்’ இயக்கத்தைப் பாராட்டிய பிரதமர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது, நாடு புதிய உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இத்தகைய இயக்கங்கள் புதிய முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கோணத்தில் … Read more

2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு.. சென்னை, மும்பை உள்ளிட்ட 75 இடங்களில் நடத்தப்படுகிறது..!

2022ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதிலும் இன்று நடைபெறுகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட 75 இடங்களில் இன்று தேர்வு நடைபெறும் நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, மாலை என இருவேளையும் நடைபெறும் இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். Source link

பலாத்காரம் செய்து 9 வயது சிறுமி கொலை: ராஜஸ்தானில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த அமர் காவல் நிலையப் பகுதியில் உள்ள தாதா பாரி அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் 9 வயது சிறுமியின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் சிறுமின் … Read more

'பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது; ஆனால்…' – அருண் சிங்

“பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த மதத்தினரையும் இழிவுப்படுத்துவதை பா.ஜ.க.விரும்பவில்லை” என பொதுச்செயலாளர் அருண் சிங் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தினரையும் இழிவுப்படுத்துவதை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக கண்டிக்கிறது. அதே போல் பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது … Read more

ஜம்மு காவல் நிலையத்தில் திடீர் தீ விபத்து… ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்.!

ஜம்முவில் உள்ள சட்வாரி காவல்நிலையத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் சேதமாகின. சட்வாரி காவல்நிலையத்தின் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறைந்த மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. Source link

பீகாரில் பாகிஸ்தான் உளவாளி; உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்

பாட்னா: பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பில் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாட்னா காவல்துறை அதிகாரிகள், பாகல்பூர் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், ‘பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர், இஷானிகா அஹிர் என்ற ெபயரில் பேஸ்புக் கணக்கு உருவாக்கியுள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்து பீகாரில் உள்ளவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரது மெயில் ஐடி கண்டுபிடிக்கப்பட்டு, எந்த ஐபி முகவரியில் இருந்து மெயில் ஐடி உருவாக்கப்பட்டது என்பது … Read more