ஷாருக்கான், கத்ரினா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை கத்ரினா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

'ஜன் சமர்த் தளம்' – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்களை புதுதில்லியின் விக்யான் பவனில் நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, நாளை முதல் வருகிற 11-ந் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. ஜன் சமர்த் தளம் என்ற கடன் இணைக்கப்பட்ட அரசின் திட்டங்களுக்கான … Read more

ஐதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. விரிவான அறிக்கை அளிக்க ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவு..!

ஐதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டுள்ளார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  Source link

இரு பெண்களிடையே நடந்த தகராறில் 8 மாத குழந்தை பலி – கொல்கத்தாவில் நடந்த பரிதாப நிகழ்வு!

பெண்கள் இருவரிடையே நிகழ்ந்த வாக்குவாத தகராறில் எட்டு மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பலியான சோகம் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் நிகழ்ந்திருக்கிறது. கடந்த வெள்ளியன்று (ஜூன் 03) ராஜர்ஹத் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஷானாஸ் காதுன் (22) என்ற பெண்ணுக்கும் யாஸ்மினா பிபி என்ற பெண்ணுக்கும் இடையே அவர்களின் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஷானாஸ் வைத்திருந்த அவரது எட்டு மாத குழந்தையை இழுத்து பறித்த யாஸ்மினாவும் மற்ற நான்கு … Read more

ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் காஷ்மீரில் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். அனந்தநாக் மாவட்டம், கரன் வெரிநாக் பகுதியில் உள்ள கவாஸ் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருந்தனர். தகவலின் பேரில் இந்த இடத்தை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலையில் சுற்றிவளைத்தனர். இதையடுத்து இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. பல மணி நேரம் நீடித்த மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 ராணுவ வீரர்களும் கிராமவாசி ஒருவரும் … Read more

பணத்தாளில் தாகூர், கலாம் படங்கள் – ரிசர்வ் வங்கி பரிசீலனை..!

பணத்தாள்களில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை இடம்பெறச் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய்த் தாள்களிலும் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது. இனிப் புதிதாக அச்சிட உள்ள பணத்தாள்களில் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Source link

நாடு திரும்பினார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வாங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, சோனியா காந்திக்கு வரும் 8ம் தேதியும், ராகுலுக்கு கடந்த 2ம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. ஆனால், சோனியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், விசாரணைக்கு அவர் ஆஜராவதில் சந்தேகம் எழுந்துள்ளது. வெளிநாட்டில் … Read more

பாஜகவின் நன்கொடை 79% குறைந்தது

புதுடெல்லி: கடந்த 2019-20 நிதியாண்டை ஒப்பிடும் போது பாஜக பெற்ற நன்கொடை 79 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாஜகவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.762.33 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. கடந்த 2019-20-ம் நிதியாண்டில் ரூ.3,623.28 கோடியை பாஜக நன்கொடையாக பெற்றது. இதை ஒப்பிடும்போது பாஜக பெற்ற நன்கொடை 79 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 2019-20 நிதியாண்டில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் … Read more

பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு.. புதுச்சேரி, சென்னை, காரைக்காலில் பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிப்பு..!

இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரான்ஸ் அதிபர் தேர்தலைத் தொடர்ந்து வெளிநாடுவாழ் பிரஞ்ச் குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலில் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் கேரளா, தமிழகம், புதுச்சேரியில் வசிக்கும் 4 ஆயிரத்து 463 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக புதுச்சேரியில் 2 மையங்களும் சென்னை, காரைக்காலில் தலா ஒரு … Read more

ஐதராபாத்தில் காரிலேயே சுற்றி வந்து சிறுமியை கடத்தி பலாத்காரம் சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது: ஆதாரங்களை வெளியிட்ட பாஜ நிர்வாகி

திருமலை: ஐதராபாத்தில் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான ஆதாரங்களை பாஜ நிர்வாகி வெளியிட்டார். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்  ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல ‘பப்’ உள்ளது. இந்த பப்பிற்கு தனது நண்பர் ஹாடிவுடன் கடந்த மாதம் 28ம் தேதி 17 வயது சிறுமி சென்றார். பின்னர், சிறுமி அங்கிருந்து வெளியே வந்தார். பப்பில் இருந்து பின் தொடர்ந்த இளைஞர்கள் பென்ஸ் காரில் … Read more