கான்பூர் கலவரத்தில் 1,040 பேர் மீது வழக்கு: இதுவரை 36 பேர் கைது

கான்பூர்: உத்தர பிரதேசம், கான்பூர் கலவரம் தொடர்பாக 1,040 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அண்மையில் அளித்த பேட்டியில், முகமது நபிக்கு எதிராக கருத்துகளை கூறியதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து உத்தர பிரதேசம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இதன்படி கான்பூரின் பரேட் சந்தையில் பாதியளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில் வெள்ளிக்கிழமை … Read more

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-ன் 50-வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதல்வராக இரண்டாவது முறையாக பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத்-ன் 50-வது பிறந்தநாள் இன்று அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டது வருகிறது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி யோகி ஆதித்யநாத்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதில் உத்திரபிரதேசத்தின் ஆற்றல்மிக்க முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள், அவரது திறமையான தலைமையின்கீழ் உத்திரபிரதேச மாநிலம் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டியுள்ளது.மக்களுக்கு அவர் மக்கள் … Read more

ரூ.800 கோடி மதிப்பில் ஜெகன்னாதர் கோயில் மேம்பாட்டு பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோயிலில் ரூ.800 கோடி செலவில் நடத்தப்பட்டு வந்த மேம்பாட்டுப் பணிகளை நிறுத்தக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள புரியில் புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய தலமாக மாற்றுவதற்காக ஒடிசா மாநில அரசு ரூ.800 கோடியில் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தது. இந்தப் பணிகளுக்குத் தடை கோரி அர்தேந்து குமார் தாஸ், சுமந்தா குமார் கதேய் … Read more

ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து.. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைப்பு..!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பண்டேசராவில் இயங்கிவந்த ஜவுளி ஆலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 15 முதல் 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு அதிகாரி ஃபால்குன் குமார் தெரிவித்தார்.  Source link

வங்கதேசத்தில் தனியார் கண்டெய்னர் கிடங்கில் பயங்கர தீவிபத்து: 16 பேர் பலி

டாக்கா: சிட்டகாங் பகுதியில் தனியார் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளார். சிதகுண்டா உபாசிலாவிலுள்ள தனியார் கண்டெய்னர் கிடங்கு தீவிபத்தில் 450 பேர் காயமடைந்துள்ளர்.

உக்ரைன் இந்திய மாணவர் கல்விக்கடன் ரத்து குறித்து ஆய்வு: மத்திய இணையமைச்சர் பதில்

உக்ரைன் இந்திய மாணவர் கல்விக்கடன் ரத்து பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு நிதி இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக்கோரி மார்ச் 8ம் தேதியன்று எழுதிய கடிதத்திற்கு, மத்திய நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கரத் கடந்த மாதம் 25ம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் பதில் அளித்துள்ளார். டாக்டர் பகவத் கரத் இதுதொடர்பாக எழுதியுள்ள … Read more

ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவிகள் மீண்டும் போராட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் (தலை முக்காடு) அணிய மாநில அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடந்தது. ஹிஜாப் அணிய தடை விதிககப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் தேர்வுகளைப் புறக்கணித்தனர். எனினும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று உயர் நீதிமன்றம் … Read more

சோனியா மீது குலாம் நபி ஆசாத் அதிருப்தி – கட்சிக்குள் புகைச்சல்!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீது, அக்கட்சி மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா இருவரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களது பெயர்கள் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் இருவரும், இவர்களது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். … Read more

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு.!

ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் கட்சியை வலுப்படுத்தும் வகையில், தமது அமைச்சரவையை இன்று மாற்றியமைக்கிறார். இதற்காக அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். ஒடிசாவில், வரும் 2024 ஆம் ஆண்டில் நடக்க உள்ள மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. சட்டசபை சபாநாயகர் சூர்ய நாராயண பட்ரோவும் தன் பதவியை ராஜினாமா செய்தார்.பல புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் … Read more

கான்பூரில் இருபிரிவினரிடையே நடைபெற்ற தாக்குதல்; 24 பேர் கைது: 800-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு

கான்பூர்: தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த பாரதஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் ஒரு பிரிவினர் கடையடைப்பு போராட்டத்திற்கு முன்தினம் அழைப்பு விடுத்திருந்தனர். இதில் கான்பூரில் பயங்கர வன்முறை ஏற்பட்டது.இந்த வன்முறையில் ஒரு பிரிவினர் டயர்களை கொளுத்தி, கடைகளை அடைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 20 போலீசார் உட்பட 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து கலவரம் நடந்த இடத்தில் … Read more