நேபாளத்தை தொடர்ந்து இந்தியா – பூடான் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டம்.!

நேபாளத்தை தொடர்ந்து இந்தியா – பூடான் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் Kokrajhar நகரில் இருந்து பூடான் சார்பாங் மாவட்டத்திற்கு இடையே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 57 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு வடகிழக்கு எல்லை ரயில்வேக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Source link

பாய்லர் வெடித்து 9 தொழிலாளி பலி

ஹபூர்: உத்தரப் பிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில் டோலானா பகுதியில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்த பாய்லர் நேற்று திடீரென வெடித்து சிதறிதீ பிடித்து எரிந்தது.தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்். தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை … Read more

பாஜகவில் இணைகிறாரா மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா?

நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பில் கடந்த மே 29-ம் தேதி கட்சி சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அந்தப் பட்டியலில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கட்சியின் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான் உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சித்தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது தெரியவந்தது. அதே நேரத்தில் கட்சியின் … Read more

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி காஷ்மீரை விட்டு வெளியேறும் பண்டிட் குடும்பங்கள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பண்டிட் ஊழியர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் மற்றும் பள்ளி ஆசிரியை சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது காஷ்மீர் பண்டிட் குடும்பங்களைிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பண்டிட் ஊழியர்கள், தங்களை, இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பகுதியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கையை அரசு தரப்பு ஏற்கவில்லை. அதனால் இந்த விஷயத்தில் ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி தலையிட்டு, அச்சத்தில் … Read more

Ration Card: உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து – இனி ரேஷன் வாங்கவே முடியாது!

ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய, உணவு மற்றும் பொது வினியோகத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உட்பட, நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம், பொது மக்களுக்கு குறைந்த விலையில், அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் ரேஷனில் பயனடைந்து வரும் நிலையில், வசதி படைத்தவர்கள் மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், முறைகேடாக, பொருட்களை பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், … Read more

பூரி கடற்கரையில் கவனத்தைக் கவரும் மணல் சிற்பங்கள்.. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி களை கட்டிய கொண்டாட்டம்..!

உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடற்கரையை சுத்தம் செய்தல், கழிவுகளை அகற்றுதல், பசுமையை பாதுகாத்தல், புதிய மரக்கன்றுகள் நடுதல் , பச்சிலையுடன் யோகா பயிற்சி என்று பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரே பூமி என்ற பெயரில் இது கடைபிடிக்கப்படுகிறது. ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பிகள் வடித்த மண் சிற்பங்கள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகின்றன. Source link

சீன விசா வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு

புதுடெல்லி: கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பத்தின் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை நேற்று முன்தினம் … Read more

பெங்களூரு விமான நிலையத்தில் கவனம் ஈர்க்கும் ‘ஸ்கை', ‘டெமி' – 'ரோபோ'க்களால் தீரும் பயணிகள் சிக்கல்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு செல்வதற்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்த‌ பயணிகளில் பெரும்பாலானோர் இணைப்பு விமானத்துக்கு செல்லும் வழி, குடிநீர் இருக்கும் இடம், கழிவறை உள்ள பகுதி, பொருட்களை வைக்கும் இடம், சோதனை செய்யும் இடம் ஆகியவை பற்றி தெரியாமல் தவிக்கின்றனர். ஆங்காங்கே தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தாலும் புதிய பயணிகளுக்கு கடும் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் விமான நிலையத்தில் 10 … Read more

உத்தரப்பிரதேசத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்புரில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெடி விபத்து நிகழ்ந்த போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. வெடிவிபத்தில் பலியான 12 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்துவருவதாகவும் பிரதமர் தமது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார் Source link

கான்பூர் கலவரம் குற்றவாளிகள் சொத்து இடித்து தள்ளப்படும்: போலீசார் அறிவிப்பு

கான்பூர்: கான்பூர் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்படும் என்று உத்தர பிரதேச போலீசார் அறிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதுபோன்ற நிலையில், கான்பூரில் உள்ள பரேட், நை சதக் மற்றும் யதீம்கானா பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில், 20 காவலர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது குறித்து ஏடிஜிபி பிரசாந்த் … Read more