வாகனங்களை தொடர்ந்து விவசாயம், கட்டுமான துறையிலும் எத்தனால்: ஒன்றிய அரசு திட்டம்

புனே: விவசாயம், கட்டுமானத்திலும் எத்தனாலை பயன்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், பெட்ரோல், டீசலின் தேவையும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒன்றிய அரசு பல லட்சம் கோடியை செலவிட்டு வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதால், வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்துகிறது. 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு … Read more

உ.பி. சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 11 பேர் உயிரிழப்பு – 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து நேரிட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் மாவட்டம் டெல்லியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஹாபூர் மாவட்டத்தின் தவுலானா பகுதியில் ஏராளமான ஆலைகள் செயல்படுகின்றன. அங்குள்ள ஓர் ஆலையில் நேற்று பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து நேரிட்டது. இதன் காரணமாக ஆலை முழுவதும் தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த விபத்தில் 11 … Read more

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் கூடுதல் லட்டு வழங்க தடை

திருமலை: திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதல் லட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்களுக்கு தலா ஒரு இலவச லட்டு  வழங்கப்படுவது வழக்கம். கோயிலுக்கு வெளியே உள்ள கவுண்டரில் ரூ.50க்கு, பக்தர்கள் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம்.இந்நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாகி விட்டதால், தற்போது கூடுதல் … Read more

முதல் பிறந்தநாளை பார்க்கும் முன்பாகவே 36 குழந்தைகளில் ஒன்று சாவை தழுவும் அவலம்: இந்தியாவில் பரிதாபம்

புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு 36 குழந்தைகளிலும் ஒரு குழந்தையானது ஒரு வயதுக்குள் இறப்பதாக இந்திய பதிவாளர் ஜெனரலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது, ஒரு நாடு  அல்லது ஒரு பிராந்தியத்தின் ஒட்டு மொத்த சுகாதார சூழ்நிலையை சுட்டிக்காட்டும் முக்கிய அளவுகோலாக கருதப்படுகிறது. இதன்படி, இந்தியாவில் காணப்படும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறித்த புள்ளி விவரத்தை இந்திய பதிவாளர் ஜெனரல் குழு வெளியிட்டுள்ளது. … Read more

சொகுசு பங்களாவில் இளம்பெண்ணுடன் ஜாலி குஜராத்தில் மாஜி அமைச்சரை அடித்து நொறுக்கிய மனைவி: வைரலாகும் வீடியோ

காந்தி நகர்: குஜராத் முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் அமைச்சருமான பரத்சிங் சோலங்கி, சொகுசு பங்காளாவில் இளம்பெண்ணுடன் இருக்கும்போது, அவரது மனைவி கையும் களவுமாக பிடித்து அடித்து உதைக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைவதற்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இக்கட்சியை சேர்ந்த மாதவ்சிங் சோலங்கி 4 முறை முதல்வராக இருந்தார். இவரது மகன் பரத்சிங் சோலங்கி, முன்னாள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். 2 … Read more

பீகார் சிறுமிக்கு குரங்கம்மையா? உத்தர பிரதேசத்தில் பரபரப்பு

நொய்டா: உலகளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வந்த பீதி இப்போது தான் சிறிது அடங்கி இருக்கிறது. அதற்குள், குரங்கம்மை பரவி வருகிறது. தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 500க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள இது, வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் இதுவரையில் யாருக்கும் தொற்றவில்லை. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுமிக்கு இந்த நோய் பரவி இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த ஒருவர், உத்தர பிரதேசத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். … Read more

உலக சுற்றுச்சூழல் தினம் | "மண் காப்போம் இயக்கம்" குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

புதுடெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள “மண் காப்போம் இயக்கம்” குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று விஞ்ஞான் பவனில் நடைபெறும் “மண் காப்போம் இயக்கம்” குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ‘மண் காப்போம்‘ என்பது, பாழ்பட்டு வரும் மண் வளம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வு இயக்கம். அது மண்ணை மேம்படுத்த … Read more

ஒடிசாவில் அனைத்து அமைச்சர்களும், சபாநாயகரும் ராஜினாமா: புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு நடந்து வருகிறது. 3 ஆண்டுகளை இந்த அரசு நிறைவு செய்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்று சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அங்குள்ள பிரஜராஜ்நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்ததால், தேர்தல் பணி பாதிக்கக் கூடாது என கருதி அமைச்சரவை … Read more

வெள்ளி மாலையில் இரு பிரிவினரிடையே கல்வீசித் தாக்குதல்.. வன்முறை தொடர்பாக 36 பேர் கைது..!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 36 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கான்பூரில் வெள்ளி மாலையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறையினர் 13 பேரும், இரு பிரிவுகளையும் சார்ந்த 30 பேரும் காயமடைந்தனர். கூடுதல் காவல்படையினர் வந்ததும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தனர். bமோதல் தொடர்பாகப் பதிவான வீடியோவில் வன்முறையில் ஈடுபட்டோரை அடையாளம் கண்ட காவல்துறையினர் இதுவரை 36 பேரைக் கைது செய்துள்ளனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்கக் … Read more

குஜராத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் வீடியோ வைரல்; ஆடம்பர பங்களாவில் இளம்பெண்ணுடன் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிக்கினார்.!

காந்தி நகர்: குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பரத்சிங் சோலங்கி ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாதவ்சிங் சோலங்கி நான்கு முறை மாநில முதல்வராக இருந்தார். இவரது மகன் பரத்சிங் சோலங்கி முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். இரண்டு முறை குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார். குஜராத் காங்கிரஸ் மூத்த … Read more