குஜராத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் வீடியோ வைரல்; ஆடம்பர பங்களாவில் இளம்பெண்ணுடன் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிக்கினார்.!

காந்தி நகர்: குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பரத்சிங் சோலங்கி ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாதவ்சிங் சோலங்கி நான்கு முறை மாநில முதல்வராக இருந்தார். இவரது மகன் பரத்சிங் சோலங்கி முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். இரண்டு முறை குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார். குஜராத் காங்கிரஸ் மூத்த … Read more

செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்த டாக்டர்கள்: பீகாரில் அதிர்ச்சி

பீகாரில் மருத்துவமனை ஒன்றில் மின்சாரம் இல்லாததால், மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். சசாராம் (Sasaram) மாவட்டத்தில் சதார் (Sadar) மருத்துவமனையில் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் அடிக்கடி மின்விநியோகம் தடைப்படுவதாகவும், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ये सासाराम सदर अस्पताल का ट्रॉमा सेंटर है जहां मोबाइल फोन की रोशनी में इलाज हो रहा है. … Read more

கர்நாடகாவில் ஹெலிகாப்டரில் இலசவமாக சுற்றிப்பார்த்த விவசாயிகள்.!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹெலி டூரிசம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணம் செய்தனர். ஒசதுர்காவில் நேற்றும் இன்றும் சுமார் 200 பேர் அப்பகுதியை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்தனர். அதேபோல் வாணி விலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. Source link

கார்பிவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக் கொள்ள இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல்

டெல்லி: கார்பிவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக் கொள்ள இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு என 2 தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டவர்கள் கார்பிவாக்ஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாசத்தை தூண்டும் "லேயர் சாட்" விளம்பரத்தை ஒளிபரப்ப தடை!

இந்தியாவில் ஆபாசத்தை தூண்டும் வகையில் ஒளிபரப்பப்பட்ட “லேயர் சாட்” எனப்படும் வாசனை திரவிய விளம்பரத்திற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் சர்ச்சைக்குரிய அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. “லேயர் சாட்” எனப்படும் வாசனை திரவியம் தயாரிப்பு நிறுவனம் ஆபாசத்துடன் இரட்டை அர்த்த வார்த்தைகளுடன் விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் பதிவானது. மேலும் விளம்பரத்திற்கு தடைவிதிக்க … Read more

பாடகர் சித்து மூசேவாலாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

பஞ்சாபில் சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலாவின் பெற்றோரைச் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார். காவல்துறைப் பாதுகாப்புத் திரும்பப் பெறப்பட்டதும், அதை வெளிப்படையாக அறிவித்ததும் சித்து மூசேவாலா கொலைக்குக் காரணம் எனப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மூசேவாலாவின் பெற்றோர் சண்டிகரில் அமித் ஷாவைச் சந்தித்துத் தங்கள் மகனின் கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.   Source link

ஐதராபாத்தில் மைனர் பெண்ணை கடத்தி காரிலேயே கூட்டு பலாத்காரம்: வாரியத் தலைவர் மகன் உள்பட 3 பேர் கைது

திருமலை: ஐதராபாத்தில் பப்பில் மது விருந்தில் பங்கேற்ற மைனர் பெண் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாரியத்தலைவர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபான ‘பப்’ உள்ளது. இங்கு கடந்த 28ம் தேதி 17 வயது மைனர் பெண், நண்பர் ஒருவரின் விருந்துக்கு சென்றுள்ளார். விருந்து முடிந்து வெளியே வந்தபோது விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள் … Read more

உ.பி ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில் டோலானா என்ற இடத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அவர்கள் தீயை அணைத்து, தீயில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், இதுவரை எட்டு தொழிலாளர்கள் இந்த தீ விபத்தில் உயிரிழந்து இருக்கக்கூடிய நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் … Read more

25 ஏக்கரில் ரூ.10 கோடி செலவில் உருவான ‘என் ஊரு’ – கேரளாவின் முதல் பழங்குடி பாரம்பரிய கிராமம் திறப்பு

வயநாடு: கேரளாவில் பழங்குடி சமூக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முயற்சியாக முதல் பழங்குடியின பாரம்பரிய கிராமமான ‘என் ஊரு’ சனிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள பூக்கோடு மலைச்சரிவில், 25 ஏக்கர் பரப்பளவில் ‘என் ஊரு’ என்ற முதல் பழங்குடியின பாரம்பரிய கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘என் ஊரு’ அறக்கட்டளையின் தலைவரும் வயநாடு துணை ஆட்சியருமான ஸ்ரீ லக்ஷ்மி கூறும்போது, “விரிவான பழங்குடி சமூக மக்களின் மேம்பாட்டு திட்டம், பழங்குடிசமூக மக்களின் பாரம்பரிய அறிவு, … Read more

முகக்கவசம் கட்டாயமில்லை.. அபராதம் விதிக்கப்படாது – அமைச்சர் ராஜேஷ் தோபே

மகாராஷ்டிரத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என மாநில நலவாழ்வுத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் முகக்கவசம் அணியச் சொன்னது வேண்டுகோள் தான் என்றும், கட்டாயம் இல்லை என்பதால் அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.   Source link