டன்ஸோவை வாங்கி டோர் டெலிவரி பணியில் இறங்குகிறதா ரிலையன்ஸ் ரீடெயில்?

ரீட்டெயில் உலகில் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றுமொரு இலக்கை எட்டவிருக்கிறது. அதன்படி, இன்ஸ்டன்ட்டாக மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை ஜியோ மார்ட் எக்ஸ்பிரஸ் செயலியின் கீழும், தனியாகவும் செய்யவிருக்கிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக நேவி மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் ஜியோ மார்ட் சேவைகள் கிடைக்கும் 200 நகரங்களில் நடப்பு ஆண்டிலேயே விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம். இதன் மூலம் பிக் பாஸ்கட், ஸொமேட்டோவின் ப்ளின்கிட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், வால்மார், ஸெப்டோ போன்றவற்றுக்கு ரிலையன்ஸ் ரீட்டெயில் … Read more

Corbevax: பூஸ்டர் டோஸ் – கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!

பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்திக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பயோ லாஜிக்கல் இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசி, 5 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்ட்ர் டோஸ் தடுப்பூசியாக பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி … Read more

62 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் பெற்ற அதானி நிறுவனம்.!

மத்திய அரசின் மின்னுற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் 62 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு ஆறாயிரத்து 585 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு டெண்டர்களை அதானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அண்மையில் வழங்கப்பட்ட இந்த டெண்டர்களை எடுக்கச் சென்னையைச் சேர்ந்த செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் போட்டியிட்டன. ஏற்கெனவே மார்ச் மாதத்தில் 57 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய எட்டாயிரத்து 422 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 டெண்டர்களை அதானி நிறுவனத்துக்குத் … Read more

உ.பி மருத்துவமனையின் அலட்சியத்தால் எறும்பு கடித்து பச்சிளங்குழந்தை பலி?

மஹோபா: உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால், எறும்பு கடித்து பச்சிளங் குழந்தை இறந்ததாக புகார் எழுந்துள்ளதால் போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் முதாரி கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திர ரைக்வார் மனைவி சீமா, மாவட்ட மகளிர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மே 30ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரால் அந்த குழந்தையை பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். … Read more

காஷ்மீர் என்கவுன்ட்டர் – ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் சுட்டுக் கொலை

ஜம்மு – காஷ்மீரில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்தது முதலாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானில் இருந்து இந்த இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறையினரும், ராணுவத்தினரும் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், … Read more

எத்தனால், மெத்தனால் ஆகியவையே வருங்கால எரிபொருட்களாக இருக்கும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

எத்தனால், மெத்தனால் போன்றவையே எதிர்கால எரிபொருட்களாக இருக்குமென என குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விரைவில் மின்சார டிராக்டர், லாரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிசக்தி மற்றும் ஆற்றல் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போது ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறினார். மேலும், தேவை அதிகரிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை- துப்பாக்கிகள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆனந்தநாக் மாவட்டம் ராஜிப்புரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்றனர், அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த நிஷார் காண்டே என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் அந்த அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் … Read more

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா; நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.!

புபனேஸ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை மதியம் 12 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ள நிலையில், 20 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஒடிசா சட்டப் பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளனர். ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான … Read more

கான்பூர் வன்முறையில் ஈடுபட்டோரின் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படும் – உ.பி. காவல்துறை

கான்பூர் வன்முறையில் ஈடுபட்டோரின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா சில தினங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் முகமது நபி குறித்து அவதூறான கருத்துகளை கூறியதாக தெரிகிறது. இது முஸ்லிம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கான்பூரின் பரேட் மார்க்கெட் பகுதியில் … Read more

வெடித்து சிதறிய கொதிகலன் – 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில், ரசாயன தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில், 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று கொதிகலன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதை அடுத்து, தொழிற்சாலையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more