எத்தனால், மெத்தனால் ஆகியவையே வருங்கால எரிபொருட்களாக இருக்கும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

எத்தனால், மெத்தனால் போன்றவையே எதிர்கால எரிபொருட்களாக இருக்குமென என குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விரைவில் மின்சார டிராக்டர், லாரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிசக்தி மற்றும் ஆற்றல் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போது ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறினார். மேலும், தேவை அதிகரிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை- துப்பாக்கிகள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆனந்தநாக் மாவட்டம் ராஜிப்புரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்றனர், அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த நிஷார் காண்டே என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் அந்த அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் … Read more

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா; நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.!

புபனேஸ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை மதியம் 12 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ள நிலையில், 20 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஒடிசா சட்டப் பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளனர். ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான … Read more

கான்பூர் வன்முறையில் ஈடுபட்டோரின் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படும் – உ.பி. காவல்துறை

கான்பூர் வன்முறையில் ஈடுபட்டோரின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா சில தினங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் முகமது நபி குறித்து அவதூறான கருத்துகளை கூறியதாக தெரிகிறது. இது முஸ்லிம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கான்பூரின் பரேட் மார்க்கெட் பகுதியில் … Read more

வெடித்து சிதறிய கொதிகலன் – 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில், ரசாயன தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில், 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று கொதிகலன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதை அடுத்து, தொழிற்சாலையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more

வடமேற்கு, மத்திய இந்தியப் பகுதிகளில் அடுத்த 3 நாளுக்கு அனல்காற்று வீசும் – வானிலை ஆய்வுத்துறை தகவல்!

நாட்டின் வடமேற்குப் பகுதியிலும் நடுப்பகுதியிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, டெல்லி, உட்புற ஒடிசா, சத்தீஸ்கர், தெற்கு உத்தரப் பிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல்காற்று வீசக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  Source link

சிவலிங்க வழிபாடு நடத்த ஞானவாபி மசூதி வளாகத்திற்கு செல்ல முயன்ற சாமியார் தடுத்து நிறுத்தம்

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் உள்ளது. இங்கு பக்தர்களுடன் சென்று இன்று பூஜைகள் செய்யபோவதாக சுவாமி அவி முக்தேஷ்வரானந்த் என்ற சாமியார் அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அவர் பக்தர்களுடன் ஊர்வலமாக சென்றார். உடனே போலீசார் அவர்களை வித்யா மத் பகுதியில் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

ரசாயன கேஸ் கசிந்து 200 பெண்கள் மயக்கம்; ஆஸ்பத்திரியில் அட்மிட்

திருமலை: தொழிற்சாலையில் ரசாயன கேஸ் கசிந்து 200 பெண்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், அச்சுதாபுரத்தில் உள்ள போரஸ் நிறுவனத்தில் நேற்று பகலில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது. இதனால் அங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு மயக்கம், மூச்சுதிணறல் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டனர். பலர் வாந்தி எடுத்து மயங்கினர்.அவர்கள் அனைவரையும் மீட்டு … Read more

பூஸ்டர் டோஸாக 'கோர்பேவேக்ஸ்' பயன்பாட்டுக்கு அனுமதி

கோர்பேவேக்ஸ் (Corbevax) கோவிட் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்கள் மூன்றாவது டோஸாக கோர்பேவேக்ஸ் பயன்படுத்தலாம். இதற்கான அனுமதியை மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அளித்திருப்பதாக கோர்பேவேக்ஸ் தயாரிப்பாளரான பயாலஜிகல்-ஈ நிறுவனம் தெரிவித்துள்ளது. மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் (DGCI) ஒப்புதல் கிடைத்து உள்ளதாக பயாலஜிகல்-ஈ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகிமா தட்லா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கோர்பேவேக்ஸ் விலை சமீபத்தில் 250 ரூபாயாக குறைக்கப்பட்டது … Read more

பொது இடங்களில் 'மாஸ்க்' கட்டாயம் – மகாராஷ்டிர அரசு உத்தரவு!

மகாராஷ்டிர மாநிலத்தில், பொது இடங்களில், முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, மேற்கண்ட மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில், பொது இடங்களில், முகக்கவசம் அணிவது மீண்டும் … Read more