சிவலிங்க வழிபாடு நடத்த ஞானவாபி மசூதி வளாகத்திற்கு செல்ல முயன்ற சாமியார் தடுத்து நிறுத்தம்

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் உள்ளது. இங்கு பக்தர்களுடன் சென்று இன்று பூஜைகள் செய்யபோவதாக சுவாமி அவி முக்தேஷ்வரானந்த் என்ற சாமியார் அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அவர் பக்தர்களுடன் ஊர்வலமாக சென்றார். உடனே போலீசார் அவர்களை வித்யா மத் பகுதியில் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

ரசாயன கேஸ் கசிந்து 200 பெண்கள் மயக்கம்; ஆஸ்பத்திரியில் அட்மிட்

திருமலை: தொழிற்சாலையில் ரசாயன கேஸ் கசிந்து 200 பெண்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், அச்சுதாபுரத்தில் உள்ள போரஸ் நிறுவனத்தில் நேற்று பகலில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது. இதனால் அங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு மயக்கம், மூச்சுதிணறல் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டனர். பலர் வாந்தி எடுத்து மயங்கினர்.அவர்கள் அனைவரையும் மீட்டு … Read more

பூஸ்டர் டோஸாக 'கோர்பேவேக்ஸ்' பயன்பாட்டுக்கு அனுமதி

கோர்பேவேக்ஸ் (Corbevax) கோவிட் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்கள் மூன்றாவது டோஸாக கோர்பேவேக்ஸ் பயன்படுத்தலாம். இதற்கான அனுமதியை மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அளித்திருப்பதாக கோர்பேவேக்ஸ் தயாரிப்பாளரான பயாலஜிகல்-ஈ நிறுவனம் தெரிவித்துள்ளது. மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் (DGCI) ஒப்புதல் கிடைத்து உள்ளதாக பயாலஜிகல்-ஈ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகிமா தட்லா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கோர்பேவேக்ஸ் விலை சமீபத்தில் 250 ரூபாயாக குறைக்கப்பட்டது … Read more

பொது இடங்களில் 'மாஸ்க்' கட்டாயம் – மகாராஷ்டிர அரசு உத்தரவு!

மகாராஷ்டிர மாநிலத்தில், பொது இடங்களில், முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, மேற்கண்ட மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில், பொது இடங்களில், முகக்கவசம் அணிவது மீண்டும் … Read more

ரசாயன தொழிற்சாலை பாய்லரில் வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு.. 15 பேர் படுகாயம்.!

உத்தரபிரதேசம் மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 15 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள ஹாபூர் ஐ.ஜி பிரவீன் குமார், விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.   Source link

உ.பி தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து- 8 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதசே மாநிலம் ஹாபூரில் மின்னணு பொருட்கள் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் ஏற்பட்ட தீயில் தடுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் படியுங்கள்.. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை- துப்பாக்கிகள் பறிமுதல்

வேனில் கடத்த முயன்ற 648 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

திருமலை: ஆந்திராவில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் வேனில் கடத்த முயன்ற 648 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆமைகளை கடத்திய வேன் டிரைவரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் சிந்தூர் பகுதியில் வனப்பகுதிக்கு உட்பட்ட துளசிபாக்கா வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராஜமுந்திரியில் இருந்து சிந்தூர் நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 36 பைகளில் 648 நட்சத்திர ஆமைகள் இருந்தது. வேனை … Read more

மாநிலங்களவை தேர்தலுக்கும் தாவிய கூவத்தூர் ஸ்டைல்!

மாநில சட்டப்பேரவைகளில் பெரும்பான்மை கோரும்போது கட்சி மாறி வாக்களிப்பதை தடுக்க கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாநிலங்களவை தேர்தலுக்கும் தொற்றிக் கொண்டுள்ளன. சட்டப்பேரவைகளில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது ஒவ்வொரு வாக்கும் முக்கியம். இதற்காக கட்சிகள் கையாளும் முறைதான்… எம்எல்ஏக்களை நாடு கடத்தும், மன்னிக்கவும்… மாநிலம் கடத்தும் நடைமுறை. இதில் நட்சத்திர ஹோட்டல்கள் பாடு கொண்டாட்டம்.. எம்எல்ஏக்களுக்கும்தான். வாக்கெடுப்பு நாள் அறிவிக்கப்பட்டதும் எம்எல்ஏக்கள் மூட்டை முடிச்சுகள் ஏதுமின்றி வீடு, மனைவி, மக்கள், அதாவது தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் என அனைத்தையும் … Read more

பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விளம்பரம்: எதிர்ப்புகளால் பாய்ந்தது நடவடிக்கை

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை செய்வதை பகடியாக்கி, அதை இளைஞர்களை பேசவைத்து, நடிக்கவைத்து எடுக்கப்பட்ட வாசனை திரவிய விளம்பரம் துர்நாற்றம் மிகுந்ததாக இருப்பதாக மக்கள் எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவில் ஒரு நாளில் சராசரியாக 88 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின் புள்ளிவிவரம் இது. அண்மையில் ஹைதராபாத்தில் பள்ளிச் சிறுமி கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்முறைகளை தாண்டி கூட்டு … Read more

பாஜகவில் இருந்து அழைப்பு… கட்சி மாறும் நக்மா?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக உள்ள 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மேலிடம் அண்மையில் வெளியிட்டது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரிலிருந்து இருவரும், ஹரியாணா, கா்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாததால் நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச் … Read more