மாநிலங்களவை தேர்தலுக்கும் தாவிய கூவத்தூர் ஸ்டைல்!

மாநில சட்டப்பேரவைகளில் பெரும்பான்மை கோரும்போது கட்சி மாறி வாக்களிப்பதை தடுக்க கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாநிலங்களவை தேர்தலுக்கும் தொற்றிக் கொண்டுள்ளன. சட்டப்பேரவைகளில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது ஒவ்வொரு வாக்கும் முக்கியம். இதற்காக கட்சிகள் கையாளும் முறைதான்… எம்எல்ஏக்களை நாடு கடத்தும், மன்னிக்கவும்… மாநிலம் கடத்தும் நடைமுறை. இதில் நட்சத்திர ஹோட்டல்கள் பாடு கொண்டாட்டம்.. எம்எல்ஏக்களுக்கும்தான். வாக்கெடுப்பு நாள் அறிவிக்கப்பட்டதும் எம்எல்ஏக்கள் மூட்டை முடிச்சுகள் ஏதுமின்றி வீடு, மனைவி, மக்கள், அதாவது தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் என அனைத்தையும் … Read more

பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விளம்பரம்: எதிர்ப்புகளால் பாய்ந்தது நடவடிக்கை

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை செய்வதை பகடியாக்கி, அதை இளைஞர்களை பேசவைத்து, நடிக்கவைத்து எடுக்கப்பட்ட வாசனை திரவிய விளம்பரம் துர்நாற்றம் மிகுந்ததாக இருப்பதாக மக்கள் எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவில் ஒரு நாளில் சராசரியாக 88 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின் புள்ளிவிவரம் இது. அண்மையில் ஹைதராபாத்தில் பள்ளிச் சிறுமி கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்முறைகளை தாண்டி கூட்டு … Read more

பாஜகவில் இருந்து அழைப்பு… கட்சி மாறும் நக்மா?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக உள்ள 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மேலிடம் அண்மையில் வெளியிட்டது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரிலிருந்து இருவரும், ஹரியாணா, கா்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாததால் நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச் … Read more

கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்மாற்றில் தலைக்குப்புற சொருகிய பைக்.. சிறு காயங்களுடன் உயிர்த் தப்பிய இளைஞர்..!

கேரளாவின் வெள்ளியாங்குழி பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் இருசக்கர வாகனம் ஒன்று தலைக்குப்புற சொருகி இருந்ததை கண்டு பொதுமக்கள் குழப்பமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்ததில் இளைஞர் ஒருவர், அதிவேகமாக பைக்கில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டதும், பைக் பல முறை சுழன்று சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் சொருகியதும் தெரியவந்தது. தகவலறிந்து வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியில் இருந்த பைக்கை அகற்றிய … Read more

சோனியா கொடுத்த பதவியை குலாம்நபி ஆசாத் ஏற்க மறுப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரை மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் தலைமையில் பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் குலாம்நபி ஆசாத் உள்பட அதிருப்தியாளர்கள் யாருக்கும் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் மேலிடம் வழங்கவில்லை. இதனால் சோனியா-ராகுல் மீது அதிருப்தியாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். அதிருப்தியாளர்களில் சிலர் பா.ஜனதாவுக்கு தாவ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து குலாம்நபி … Read more

மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த கள்ளக்காதலன் சுட்டுக் கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

லக்னோ: தனது மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த கள்ளக்காதலனை, உத்தரபிரதேசத்தை சேர்ந்த கணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த மலிஹாபாத் கிராமத்தை சேர்ந்த சேனு (35) என்பவர் இங்குள்ள வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராக்கா என்ற விம்லேஷ், குளிக்க சென்ற சானுவை வழிமறுத்தார். பின்னர் அவரை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டார். சம்பவ இடத்திலேயே சேனு ரத்த வெள்ளத்தில் பலியானார். சானுவை சுட்டுக் … Read more

கர்நாடகா மசூதி முன்பு அனுமன் மந்திரத்தை ஒலிக்கவிட போவதாக அறிவிப்பு – ஊரடங்கு அமல்

கர்நாடகா மசூதி முன்பு அனுமன் மந்திரத்தை ஒலிக்கவிட போவதாக விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) அறிவித்ததை அடுத்து அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் ஜாமியா மஸ்ஜித் மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த மசூதியானது அனுமன் கோயிலை இடித்து கட்டப்பட்டிருப்பதாக அண்மைக்காலமாக விஹெச்பி அமைப்பினர் கூறி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட மசூதியில் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு மசூதி நிர்வாகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் … Read more

கான்பூர் கலவரம் | உ.பி.யில் 500 பேர் மீது வழக்குப் பதிவு; 36 பேர் கைது – பின்புலம் என்ன?

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 500 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. கான்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அங்கிருந்த கடைகளை மூடச் சொல்லி ஒரு பிரிவினர் நிர்பந்தித்தனர். அதற்குக் காரணம், பாஜக செய்தி தொடர்பாளர் நூபூர் சர்மா அண்மையில் கியான்வாபி மசூதி பற்றி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது என்று கூறப்படுகிறது. இதற்கு … Read more

அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா: புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு!

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது முறையாக ஒடிசா மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பிஜு ஜனதா தளம் கட்சி கடந்த மாதம் 29ஆம் தேயுடன் தனது ஐந்தாவது பதவிக்காலத்தின் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது. இதையடுத்து, அம்மாநில அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒடிசா மாநிலத்தில் அமைச்சர்கள் 20 பேரும் ராஜினாமா செய்துள்ளனர், அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அம்மாநில … Read more

17 வயதுச் சிறுமியைக் கடத்தி பென்ஸ் காரில் பலாத்காரம்… 6 பேர் மீது வழக்குப் பதிவு..!

ஐதராபாத்தில் பப்புக்குச் சென்ற 17 வயதுச் சிறுமியை பென்ஸ் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அரசியல் செல்வாக்குள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர் மூவரைக் கைது செய்துள்ளனர்.  மே 28ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பப்புக்குத் தனது தோழியுடன் சென்ற 17 வயது மாணவி, தோழி சென்ற பின்னரும் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அவரைக் காரில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிவிடுவதாக மாணவர்கள் தெரிவித்ததாகவும் … Read more