கான்பூர் கலவரம் | உ.பி.யில் 500 பேர் மீது வழக்குப் பதிவு; 36 பேர் கைது – பின்புலம் என்ன?

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 500 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. கான்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அங்கிருந்த கடைகளை மூடச் சொல்லி ஒரு பிரிவினர் நிர்பந்தித்தனர். அதற்குக் காரணம், பாஜக செய்தி தொடர்பாளர் நூபூர் சர்மா அண்மையில் கியான்வாபி மசூதி பற்றி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது என்று கூறப்படுகிறது. இதற்கு … Read more

அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா: புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு!

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது முறையாக ஒடிசா மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பிஜு ஜனதா தளம் கட்சி கடந்த மாதம் 29ஆம் தேயுடன் தனது ஐந்தாவது பதவிக்காலத்தின் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது. இதையடுத்து, அம்மாநில அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒடிசா மாநிலத்தில் அமைச்சர்கள் 20 பேரும் ராஜினாமா செய்துள்ளனர், அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அம்மாநில … Read more

17 வயதுச் சிறுமியைக் கடத்தி பென்ஸ் காரில் பலாத்காரம்… 6 பேர் மீது வழக்குப் பதிவு..!

ஐதராபாத்தில் பப்புக்குச் சென்ற 17 வயதுச் சிறுமியை பென்ஸ் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அரசியல் செல்வாக்குள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர் மூவரைக் கைது செய்துள்ளனர்.  மே 28ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பப்புக்குத் தனது தோழியுடன் சென்ற 17 வயது மாணவி, தோழி சென்ற பின்னரும் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அவரைக் காரில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிவிடுவதாக மாணவர்கள் தெரிவித்ததாகவும் … Read more

மண் காப்போம் இயக்கத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்- ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம், ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2-வது இந்திய மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது. இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அவர்களை சத்குரு நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜஸ்தான் முதல்வர், “மண் நம்முடைய தாய். மண்ணை நாம் எப்போதுமே அன்பாகவும், மரியாதையாகவும் … Read more

டெல்லி மெட்ரோ நிலையத்தில் பல்கலைக்கழக முகவரியை கேட்பது போல் சட்டக் கல்லூரி மாணவியிடம் ‘பிறப்புறுப்பை’ காட்டியவன் யார்?.. சிஐஎஸ்எப் போலீஸ் அலட்சியம்

* தேசிய மகளிர் ஆணையம் காட்டம்புதுடெல்லி: டெல்லி மெட்ரோ நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவியிடம் பல்கலைக் கழக முகவரியை கேட்பது போல், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது ‘பிறப்புறுப்பை’ காட்டிய விவகாரத்தில், சிஐஎஸ்எப் போலீஸ் அலட்சியமாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தலைநகர் டெல்லியின் ஹூடா சிட்டி சென்டர் நிலையத்தின் மெட்ரோ ரயிலில் குர்கிராமை சேர்ந்த 21 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் பயணித்தார். அந்த ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், … Read more

“ரசகுல்லா”வால் நின்ற ரயில்- ஸ்தம்பித்த பீகார் போக்குவரத்து

இந்தியாவின் பெரும்பாலான மக்களின் விருப்ப இனிப்பான ரசகுல்லாவால், பீகாரில் ரயில் சேவையே பாதித்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? பீகாரில் உள்ள லக்கிசாராய் (Lakhisarai) பகுதி ரசகுல்லாவுக்கு பெயர் பெற்றது. லக்கிசாராய் அருகே, பாரகியா (Barahiya) ரயில் நிலையம் உள்ளது. எனினும் இங்கு பெரும்பாலான ரயில்கள் நின்று செல்வதில்லை. இதனால் தங்களது ரசகுல்லா விற்பனை பாதிக்கப்படுவதாகக்கூறி, ரசகுல்லாக்களை உற்பத்தி செய்யும் 200 கடைகளைச் சேர்ந்தவர்கள் பாரகியா ரயில் நிலைய தண்டவாளத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்து போராட்டம் நடத்தினர். இதன் … Read more

போட்டோவுக்கு போஸ் கொடுக்காததால் இப்படியா செய்வது.. நடிகர் பாலகிருஷ்ணா செயலுக்கு ரசிகர்கள் திட்டி விமர்சனம்..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்.டி ராமாராவின் மகனும், அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரது படங்களில் ரயில் முன் பாய்ந்து தாண்டி செல்வது, துப்பாக்கி குண்டுகளை கடித்து துப்புவது போன்ற ஏராளமான காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் பாலகிருஷ்ணா நடித்த அகண்டா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆந்திர மாநிலம் இந்துப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான பாலகிருஷ்ணா, தனது ரசிகர் மன்ற தலைவர் வீட்டு புதுமனை புகு விழாவில் பங்கேற்றார். ரசிகர்கள் பலர் பாலகிருஷ்ணாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த … Read more

உத்தரபிரதேசத்தில் குரங்கு அம்மை அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதி

காசியாபாத்: கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய இந்த நோய் தற்போது ஜெர்மனி.இங்கிலாந்து,ஸ்பெயின்.போர்ச்சுகல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 5 வயது சிறுமி க்கு திடீரென உடல்நிலை பாதிக்கபட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்த அந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் எடுக்கப்படடு … Read more

கேரளாவில் இப்போது பரவுவது ஒமிக்ரான்தான்; சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இப்போது பரவி வருவது ஒமிக்ரான் தொற்று என்றாலும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இந்தியாவில் 3 மாத இடைவெளிக்குப் பின்னர் கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒரு சில மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரிக்கிறது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது. … Read more

கரோனா விதிகளை பின்பற்றாத பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றலாம் – டிஜிசிஏ-வுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர் அண்மையில் விமான பயணம் மேற்கொண்ட பொழுது விமானங்களில் கரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து எழுப்பிய புகார் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சாங்கி மற்றும் நீதிபதி … Read more