போட்டோவுக்கு போஸ் கொடுக்காததால் இப்படியா செய்வது.. நடிகர் பாலகிருஷ்ணா செயலுக்கு ரசிகர்கள் திட்டி விமர்சனம்..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்.டி ராமாராவின் மகனும், அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரது படங்களில் ரயில் முன் பாய்ந்து தாண்டி செல்வது, துப்பாக்கி குண்டுகளை கடித்து துப்புவது போன்ற ஏராளமான காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் பாலகிருஷ்ணா நடித்த அகண்டா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆந்திர மாநிலம் இந்துப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான பாலகிருஷ்ணா, தனது ரசிகர் மன்ற தலைவர் வீட்டு புதுமனை புகு விழாவில் பங்கேற்றார். ரசிகர்கள் பலர் பாலகிருஷ்ணாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த … Read more

உத்தரபிரதேசத்தில் குரங்கு அம்மை அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதி

காசியாபாத்: கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய இந்த நோய் தற்போது ஜெர்மனி.இங்கிலாந்து,ஸ்பெயின்.போர்ச்சுகல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 5 வயது சிறுமி க்கு திடீரென உடல்நிலை பாதிக்கபட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்த அந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் எடுக்கப்படடு … Read more

கேரளாவில் இப்போது பரவுவது ஒமிக்ரான்தான்; சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இப்போது பரவி வருவது ஒமிக்ரான் தொற்று என்றாலும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இந்தியாவில் 3 மாத இடைவெளிக்குப் பின்னர் கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒரு சில மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரிக்கிறது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது. … Read more

கரோனா விதிகளை பின்பற்றாத பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றலாம் – டிஜிசிஏ-வுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர் அண்மையில் விமான பயணம் மேற்கொண்ட பொழுது விமானங்களில் கரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து எழுப்பிய புகார் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சாங்கி மற்றும் நீதிபதி … Read more

மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டதால் அவசர சிகிச்சைப்பிரிவில் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்..!

பீகார் மாநிலம் சசராம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மொபைல் போன் வெளிச்சத்தில் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கும் மருத்துவர் பிரிஜேஷ் குமார், நாள்தோறும் இதுபோன்ற சூழ்நிலைகளை சந்திப்பதாக தெரிவித்தார்.  Source link

தன்னை தானே திருமணம் செய்யும் பெண்- பா.ஜ.க. கடும் எதிர்ப்பு

சூரத்: குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம்பெண் வருகிற 11-ந்தேதி தனக்குதானே திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற திருமணங்களைபோல மந்திரங்கள் ஓத வழக்கமான சடங்குகளுடன் இந்த திருமணத்தை அங்குள்ள ஹரி ஹரேஷ்வர் கோவிலில் நடத்தபோவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். இந்த திருமணத்துக்கு பெற்றோர் குறுக்கே நிற்கவில்லை. அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். திருமணத்திற்காக அவர் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் … Read more

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா

புபனேஸ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை மதியம் 12 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா: ரசாயன ஆலையில் அமோனியா வாயு கசிவு – 100-க்கு மேற்பட்ட பெண்கள் மயக்கம்

ஆந்திராவில் ரசாயன ஆலையில் அமோனியம் வாயு கசிந்ததால் 100-க்கும் மேற்பட்ட பெண் ஊரியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அருகே அனகாபள்ளி பகுதியில் திடீரென 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்தனர். விதை தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரியும் 130 பெண்களும் வாந்தி எடுத்ததோடு மயக்கமடைந்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் மயக்கமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் 20-க்கும் … Read more

ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை: பள்ளி முதல் பார்ட்டி வரை – நடந்தது என்ன?

தெலங்கானா: ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைதான 5 பேரில் 3 பேர் சிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதில் பல கட்சிப் பிரமுகர்களின் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கூறி பாஜக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன. பிறந்தநாள் பார்ட்டியாக ஆரம்பித்த கொண்டாட்டம் பாலியல் வன்கொடுமையில் முடிந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை … Read more

ஒற்றைக் காலால் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்பதாகப் பிரேம் பண்டாரி அறிவிப்பு.!

ஜம்மு காஷ்மீரில் ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளிப் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு இலவசமாகச் செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்றுக்கொள்வதாக ஜெய்ப்பூர் பூட் தொண்டு நிறுவனத் தலைவர் பிரேம் பண்டாரி அறிவித்துள்ளார். ஹண்டுவாராவைச் சேர்ந்த சிறுவன் பர்வைஸ், வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு ஒற்றைக் காலில் துள்ளித் துள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதை டுவிட்டரில் பார்த்த பிரேம் பண்டாரி, அந்தச் சிறுவனின் குடும்பத்தைத் தொடர்புகொள்ளப் போவதாகவும், இலவசமாகச் செயற்கைக் கால் பொருத்த … Read more