தன்னை தானே திருமணம் செய்யும் பெண்- பா.ஜ.க. கடும் எதிர்ப்பு

சூரத்: குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம்பெண் வருகிற 11-ந்தேதி தனக்குதானே திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற திருமணங்களைபோல மந்திரங்கள் ஓத வழக்கமான சடங்குகளுடன் இந்த திருமணத்தை அங்குள்ள ஹரி ஹரேஷ்வர் கோவிலில் நடத்தபோவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். இந்த திருமணத்துக்கு பெற்றோர் குறுக்கே நிற்கவில்லை. அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். திருமணத்திற்காக அவர் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் … Read more

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா

புபனேஸ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை மதியம் 12 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா: ரசாயன ஆலையில் அமோனியா வாயு கசிவு – 100-க்கு மேற்பட்ட பெண்கள் மயக்கம்

ஆந்திராவில் ரசாயன ஆலையில் அமோனியம் வாயு கசிந்ததால் 100-க்கும் மேற்பட்ட பெண் ஊரியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அருகே அனகாபள்ளி பகுதியில் திடீரென 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்தனர். விதை தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரியும் 130 பெண்களும் வாந்தி எடுத்ததோடு மயக்கமடைந்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் மயக்கமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் 20-க்கும் … Read more

ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை: பள்ளி முதல் பார்ட்டி வரை – நடந்தது என்ன?

தெலங்கானா: ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைதான 5 பேரில் 3 பேர் சிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதில் பல கட்சிப் பிரமுகர்களின் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கூறி பாஜக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன. பிறந்தநாள் பார்ட்டியாக ஆரம்பித்த கொண்டாட்டம் பாலியல் வன்கொடுமையில் முடிந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை … Read more

ஒற்றைக் காலால் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்பதாகப் பிரேம் பண்டாரி அறிவிப்பு.!

ஜம்மு காஷ்மீரில் ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளிப் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு இலவசமாகச் செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்றுக்கொள்வதாக ஜெய்ப்பூர் பூட் தொண்டு நிறுவனத் தலைவர் பிரேம் பண்டாரி அறிவித்துள்ளார். ஹண்டுவாராவைச் சேர்ந்த சிறுவன் பர்வைஸ், வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு ஒற்றைக் காலில் துள்ளித் துள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதை டுவிட்டரில் பார்த்த பிரேம் பண்டாரி, அந்தச் சிறுவனின் குடும்பத்தைத் தொடர்புகொள்ளப் போவதாகவும், இலவசமாகச் செயற்கைக் கால் பொருத்த … Read more

நாட்டில் சிதைக்கப்படும் கூட்டாட்சி தத்துவம்: சித்தராமையா ஆதங்கம்

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியால் வளர்ச்சியில் நாடு 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. நாடு அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. இதைஅரசின் ஆவணங்களே கூறுகின்றன. நாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடன் சுழலில் சிக்கியுள்ளது. இந்திய நாணய மதிப்பு சரிந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் உயர்ந்து வருகின்றன. பணவீக்கம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வேலையின்மை பிரச்சினை விண்ணை தொட்டுள்ளது. … Read more

காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி; பாஜகவில் சேருகிறார் நடிகை நக்மா?

புதுடெல்லி: மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்காத அதிருப்தியில் நடிகை நக்மா பாஜகவில் சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயர் பட்டியல் கடந்த 29ம் தேதி வௌியிடப்பட்டது. இந்த முறை மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நினைத்திருந்தார். ஆனால், அவரது பெயரை காங்கிரஸ் தலைமை … Read more

காஷ்மீரில் தொடரும் பதற்றம்: 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்ட 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக பண்டிட் சமூகத்தினரை மீள்குடியேற்றம்  செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினர் 6,000 பேர் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பண்டிட்டுகளை குறிவைத்து அடுத்தடுத்து படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவர் அல்லாத பொதுமக்களையும் பயங்கரவாதிகள் … Read more

'காஷ்மீர் படுகொலைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்' – அமித் ஷாவிடம் உளவுத் துறை தகவல்

காஷ்மீரில் நடைபெறும் படுகொலைகளுக்குப் பின்னால் பாகிஸ்தானின் தூண்டுதல் உள்ளது என்று மத்திய உளவு அமைப்புகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துரைத்துள்ளன. காஷ்மீரில் ஒரே வாரத்தில் இந்துக்கள் உட்பட 8 பேர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்தும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (வெள்ளிக்கிழமை) அவசர … Read more

ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை என மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி ஆண் குழந்தையை பெற்றுத் தராததால் அவரை அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில் பெண் கெஞ்சுகிறார். இருப்பினும் கணவரும், அவரது குடும்பத்தினரும் பெண்ணை உதைத்து தள்ளுகின்றனர். அவரை சராமரியாக குத்துகின்றனர். அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அவர்கள் விடுவதாக இல்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது.  … Read more