டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 1040 வேட்பு மனுக்கள் ஏற்பு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 1040 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 477 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடந்த 17-ம் தேதி கடைசி நாள். இந்நிலையில் நேற்று முன்தினம் அனைத்து வேட்பு மனுக்களும் பரிசீலிக்கப்பட்டன. இதில் 1040 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 477 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, … Read more

ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்வது ஆபத்து: ஐஎம்ஏ புதிய தலைவர் எச்சரிக்கை

ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்வது ஆபத்தானது என்று ஐஎம்ஏ புதிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில், ஐஎம்ஏ புதிய தலைவர் டாக்டர் திலிப் பானுஷாலி பேசியதாவது: ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயிற்சி பெற்று சிகிச்சை வழங்குபவர்கள் நவீன ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே … Read more

“இது போதாது; மரண தண்டனை தேவை” – பெண் மருத்துவர் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து மம்தா ஆதங்கம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: “ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவரின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், இன்றைய தீர்ப்பில், இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் இது உண்மையில் மரண தண்டனை … Read more

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பிளிங்க்இட் தற்காலிக கடைகள் திறப்பு

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பிளிங்க்இட் நிறுவனம் தற்காலிக கடைகளை திறந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமிருந்து தினமும் பல லட்சக் கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், உடனடி வணிக சேவை நிறுவனமான பிளிங்க்இட், கும்பமேளா நடைபெறும் பகுதியில் தற்காலிக கடைகளை திறந்துள்ளது. கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எளிதாக வாங்கிக் கொள்ள … Read more

சயீப் அலிகானை கத்தியால் குத்திய வங்கதேசத்தவருக்கு 5 நாள் காவல்: பெயரை மாற்றி சட்ட விரோதமாக வாழ்ந்து வந்தது கண்டுபிடிப்பு

மும்பை: பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை கத்தி​யால் 6 முறை குத்திய வங்கதேசத்தை சேர்ந்​தவரை போலீ​ஸார் கைது செய்​துள்ளனர். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்றம் அனுமதி அளித்​துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதி​யில் உள்ள அடுக்​கு​மாடி கட்டிடத்​தின் 11-வது தளத்​தில் உள்ள வீட்​டில் கடந்த புதன்​கிழமை அதிகாலை நுழைந்த மர்ம நபர் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை 6 முறை கத்தி​யால் குத்​தி​விட்டு தப்பி​விட்​டார். படுகாயம் அடைந்த சயீப் அலிகானை மும்பை … Read more

சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தீர்ப்பு

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. பெண் மருத்துவரின் கண்கள், உதடு, கழுத்து, … Read more

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக, கேரள அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க எந்தக் குழு ‘மிகவும் பயனுள்ளதாக’ இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று (ஜன. 20) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிப்பதில் நீதிமன்றத்தால் … Read more

கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்கு! சஞ்சய் ராய்க்கு ஆயுள் சிறை!

கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி சீல்டா நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. 

இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு

“இந்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறோம்” என்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கோட்லா சாலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசும்போது ” பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, தற்போது நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்” என்று … Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – தீர்ப்பு மதியம் 2.45-க்கு ஒத்திவைப்பு

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்-க்கான தண்டனை மதியம் 2.45 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. பெண் மருத்துவரின் கண்கள், உதடு, கழுத்து, வயிறு, தோள்பட்டை, விரல்கள், பிறப்பு … Read more