“ஆளும் கட்சி எம்.பி.க்கள் மூவர் ராகுல் காந்தியை தாக்கினர்” – மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடிதம்

புதுடெல்லி: ஆளும் கட்சியைச் சேர்ந்த 3 எம்பிக்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உடல் ரீதியாக தாக்கியதாக காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக கே.சி.வேணுகோபால், கே.சுரேஷ், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்.பி.,க்கள் எழுதியுள்ள கடிதத்தில், “அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் துவார் வரை காங்கிரஸ் எம்.பி.க்கள் அமைதியான முறையில் … Read more

உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்: காங்கிரஸ்

புதுடெல்லி: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதற்காக தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் தலைமையில், பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் கடந்த 15 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்தவித இடையூறும் ஏற்பட்டதாக எந்தச் … Read more

அம்பேத்கர் குறித்த சர்ச்சை! முடங்கிய அவை.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

Ambedkar Row In Rajya Sabha News: அம்பேத்கர் பற்றி தவறாக பேசவில்லை. காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

‘‘அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சு அதீத ஆணவம்’’ – கர்நாடக காங்கிரஸ் கண்டனம்

பெங்களூரு: டாக்டர் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அமித் ஷா பேசிய போது, அம்பேத்கரின் பெயரை உச்சரித்ததற்குப் பதிலாக கடவுளின் பெயரை கூறி இருந்தாலாவது முக்தி கிடைத்திருக்கும் என்ற பேச்சுக்கு சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெலகவலியில் உள்ள சுவர்ண விதான் சவுதா அருகே செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வரிடம் அமித் ஷா பேச்சின் பின்னணி குறித்து … Read more

தேங்காய் எண்ணெய்… குக்கிங் ஆயிலா அல்லது ஹேர் ஆயிலா… 15 வருட வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

தேங்காய் எண்ணெய் வழக்கு: தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 15 வருடங்கள் பழமையான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது.

‘பாஜகவுக்கு அடிப்படை மரியாதை இல்லை’ – காங்., போராட்ட புகைப்படம் மாற்றம்; பிரியங்கா கண்டனம்

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் மீது அடிப்படை மரியாதை இல்லை என்று பாஜகவை காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி சாடியுள்ளார். அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸின் போராட்டம் குறித்து பாஜக பகிர்ந்துள்ள படத்துக்காக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாபாசாகேப் அம்பேத்கரை அமித் ஷா அவமதித்தார், அதனைத் தொடர்ந்து இன்று காலையில் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்துள்ளனர். இது அம்பேத்கரின் சிலையை உடைப்பதற்கு சமமான … Read more

மூத்த குடிமக்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை – அதிரடி அறிவிப்பு!

National News Latest Updates: 60 வயதை தாண்டிய முதியவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

அம்பேத்கர் விவகாரம் | அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்

புதுடெல்லி: அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலங்களவை நடத்தை விதி 188-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக இதன் மூலம் நான் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கிறேன். மாநிலங்களவையில் நடத்தை விதிகள் விதி 188ன் கீழ் உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷாவுக்கு எதிராக … Read more

CGHS முக்கிய அப்டேட்: ஓய்வூதியதாரர்களின் மருத்துவ உதவித்தொகை அதிகரிக்கிறதா?

Pensioners Latest News: இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் (MoHFW), நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், CGHS வசதிகளைப் பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர மருத்துவ உதவித்தொகையை அதிகரிக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று கெள்வி எழுப்பினார். 

அமித் ஷா பேச்சு: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக, காங்கிரஸ் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி போராட்டம்

புதுடெல்லி: அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சையாக்குவதாகக் கூறி பாஜகவும் இன்று (டிச.19) காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் சலசலப்பு நிலவியது. பாஜக எம்.பி.க்கள் போராட்டம்: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திரண்ட பாஜக எம்.பி.க்கள், ‘பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு வழிகாட்டினார். ஆனால் காங்கிரஸ் தவறான பாதையில் இட்டுச்சென்றது’ என்ற பதாகைகளை ஏந்தியபடி … Read more