அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தள்ளிவைப்பு

புதுடெல்லி: சட்ட மேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்​ததாக நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடுபட்டன. இதையடுத்து 2 அவைகளும் நாள் முழு​வதும் தள்ளிவைக்​கப்​பட்டன. அம்பேத்கர் குறித்து அமைச்சர் அமித் ஷா பேசி​யதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்டனத்​தை தெரி​வித்தன. அரசி​யலமைப்பு உருவாக்​கப்​பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்​ததையொட்டி, மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை விவாதம் நடைபெற்​றது. விவாதத்​தின் முடி​வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, ‘அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர்’ என முழக்​கமிடுவது இப்போது ஃபேஷன் … Read more

உத்தர பிரதேசத்தில் மதக்கலவரங்களால் மூடிய கோயில்கள் மீண்டும் திறப்பு

புதுடெல்லி: உ.பி.யின் சம்பலில் ஜாமா மசூ தியை சுற்றியுள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மின்சார திருட்டு, நில ஆக்கிரமிப்பு போன்ற புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, தீபா சராய் பகுதியில் 46 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிவன் கோயில் திறக்கப்பட்டு அதில் வழிபாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹயாத் நகர் பகுதியிலும் ஒருகோயில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ராதா கிருஷ்ணா, அனுமர் சிலைகள் கொண்ட இக்கோயிலும் சுத்தம் செய்யப்பட்டு வழிபாடுகளுக்கு தயார் செய்யப்படுகிறது. … Read more

முதியவரைக் காக்க வைத்ததால் ஊழியர்களுக்கு நூதன தண்டனை அளித்த நொய்டா ஆணைய அதிகாரி

முதியவரைக் காக்க வைத்ததால் ஊழியர்களுக்கு நொய்டா ஆணைய தலைமைச் செயல் அதிகாரி நூதன தண்டனையை வழங்கிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நொய்டா மேம்பாட்டு ஆணைய (நொய்டா அத்தாரிட்டி) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஏராளமான ஊழியர்கழ் பணியாற்றி வருகின்றனர். நொய்டா மேம்பாட்டு ஆணைய தலைமைச் செயல் அதிகாரியாக டாக்டர் எம்.லோகேஷ் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அண்மையில், நொய்டாவிலுள்ள ஓக்லா தொழில்துறை வளர்ச்சி ஆணைய அலுவலகத்துக்கு முதியவர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் … Read more

ஹரியானாவில் 70 வயது தம்பதிக்கு விவாகரத்து: மனைவிக்கு ரூ.3 கோடி ஜீவனாம்சம்

ஹரியானாவில் 70 வயது தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.3 கோடியை வழங்க கணவர் ஒப்புக் கொண்டார். ஹரியானா மாநிலம், கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 70 வயதைக் கடந்த இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி பிரிந்த இந்த … Read more

2022-ல் நாடு முழுவதும் 4.61 லட்சம் சாலை விபத்துகள்; முதலிடத்தில் தமிழ்நாடு

புதுடெல்லி: 2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 64,105 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. 2021ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்த நிலையில், இது 2022ம் ஆண்டு 4,61,312 ஆக அதிகரித்துள்ளது. சாலை விபத்துக்களில் … Read more

கர்நாடக மருத்துவமனைகளில் பணத்துக்காக சிசேரியன் பிரசவங்கள் – அமைச்சர் குண்டுராவ் தகவல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணத்துக்காக அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களில் பிரசவ மரணங்கள் அதிகரித்ததால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக சட்டமேலவை உறுப்பினர் சட்டப்பேரவையில் பிரசவ மரணங்கள், அறுவை சிகிச்சை பிரசவங்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பதில் அளித்து பேசியதாவது:“மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிரசவங்களில் … Read more

அம்பேத்கருக்கு எதிராக நான் ஒருபோதும் பேசியதில்லை; எனது கருத்தை காங். திரித்துவிட்டது – அமித் ஷா

புதுடெல்லி: “அம்பேத்கருக்கு எதிராக நான் ஒருபோதும் பேசியதில்லை. எனது கருத்தை காங்கிரஸ் கட்சி திரித்துவிட்டது” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மீது அவர் இவ்வாறு தாக்குதல் தொடுத்தார். மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கள் பற்றி அமித் ஷா விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “எனது கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி பொய் செய்திகளை பரப்புகிறது. அம்பேத்கருக்கு எதிராக என்னால் ஒரு போதும் பேச … Read more

திருச்சூர் பூரம் திருவிழாவில் யானை அணிவகுப்பு கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

திருச்சூர் பூரம் திருவிழாவில் யானை அணிவகுப்புக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவின்போது ஏராளமான யானைகள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இந்த யானைகள் அணிவகுப்புக்கு கட்டுப்பாடு விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் யானைகள் அணிவகுப்பு எவ்வாறு நடைபெறவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. 2 யானைகளுக்கு இடையே … Read more

அம்பேத்கருக்கு எதிராக காங். செய்த தீங்குகள் பற்றி பட்டியல் – அமித் ஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மோடி

புதுடெல்லி: தாங்கள் இத்தனை ஆண்டுகளாக அம்பேத்கரை அவமதித்த செயல்களை தீங்கிழைக்கும் பொய்கள் மூலம் மறைக்க முடியும் என்று காங்கிரஸும் அதன் அழுகிப்போன சுற்றுச்சூழலும் நம்புமானால், அவர்கள் தவறிழைக்கிறார்கள் என்று அர்த்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பி.ஆர். அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு பிரதமர் மோடி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், … Read more

அசத்தலான ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு: அட்டகாசமான பலன்களை அளிக்கும் மத்திய அரசு திட்டங்கள்

Central Government Schemes: பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APS) ஆகியவை மத்திய அரசு நடத்தும் முக்கிய மூன்று நிதி பாதுகாப்பு திட்டங்களாகும்.