அம்பேத்கருக்கு எதிராக காங். செய்த தீங்குகள் பற்றி பட்டியல் – அமித் ஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மோடி

புதுடெல்லி: தாங்கள் இத்தனை ஆண்டுகளாக அம்பேத்கரை அவமதித்த செயல்களை தீங்கிழைக்கும் பொய்கள் மூலம் மறைக்க முடியும் என்று காங்கிரஸும் அதன் அழுகிப்போன சுற்றுச்சூழலும் நம்புமானால், அவர்கள் தவறிழைக்கிறார்கள் என்று அர்த்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பி.ஆர். அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு பிரதமர் மோடி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், … Read more

அசத்தலான ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு: அட்டகாசமான பலன்களை அளிக்கும் மத்திய அரசு திட்டங்கள்

Central Government Schemes: பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APS) ஆகியவை மத்திய அரசு நடத்தும் முக்கிய மூன்று நிதி பாதுகாப்பு திட்டங்களாகும்.

சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளில் சுத்தம் செய்வோரில் 67% பேர் பட்டியல் சாதியினர் – மத்திய அரசு தகவல்

நாட்டில் சாக்கடை மாற்றும் செப்டிக் டேங்க் எனப்படும் கழிவு நீர் (எஸ்எஸ்டபிள்யு) அகற்றும் பணியாளர்களில் 67 சதவீதம் பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில்: இயந்திரமயமாக்கப்பட்ட “துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை” (நமஸ்தே) திட்டத்தின் கீழ் சரிபார்க்கப்பட்ட தரவுகளின்படி சாக்கடை மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளில் 54,574 பேர் … Read more

அம்பேத்கரை அவமதித்தாரா அமித் ஷா? பதவி விலக கோரிக்கை… அப்படி என்ன பேசினார் அவர்…?

Amit Shah Ambedkar Row: அம்பேத்கரை மாநிலளங்களவை உரையின்போது மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்து பேசியதாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடியும் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித் ஷா மன்னிப்பு கோர வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சிற்பியை அமித் ஷா அவமதித்துவிட்டதாகவும் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் … Read more

சம்பலில் 46 வருடங்களுக்கு முன்பு நடந்த மதக்கலவரம் தொடர்பாக விசாரணை: உ.பி. பேரவையில் யோகியின் உரைக்கு பின் நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் உள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டியதாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அம்மசூதியில் களஆய்வு நடத்தப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் திருடப்படுவதாகவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான சோதனையின்போது, தீபா சராய் பகுதியில் 46 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஒரு சிவன் கோயில் … Read more

பாகிஸ்தான் சரணடைந்த புகைப்படம் உரிய இடத்தில் உள்ளது: இடம் மாற்றப்பட்டது தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம்

கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த வரைபடம், மானெக்ஷா மையத்தில் வைக்கப்பட்டுள்ளது மிகச் பொருத்தமான இடம் என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்றதால் வங்கதேசம் உருவானது. இதை வெற்றி தினமாக ராணுவம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்தாண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு, 1971-ம் ஆண்டு போரில் பாகிஸ்தான் ராணுவம் … Read more

குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஹைதராபாத் வருகை

குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள மாளிகைக்கு நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று வந்தடைந்தார். அவரை தெலங்கானா ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ஹைதராபாத் அருகே உள்ள செகந்திராபாத் மாவட்டம், பொல்லாரத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ஓய்வெடுப்பது குடியரசுத் தலைவர்களுக்கு வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார். முன்னதாக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் … Read more

பெங்களூருவில் டிச. 20-ம் தேதி த‌மிழ் புத்தக திருவிழா

பெங்களூரு: தமிழ்ப் புத்​தகத் திரு​விழா தலைவர் வணங்​கா​முடி நேற்று பெங்​களூரு​வில் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்நாடகத் தமிழ்ப் பத்திரி​கை​யாளர் சங்கத்​தின் சார்பாக கடந்த 2 ஆண்டு​களாக பெங்​களூரு​வில் தமிழ்ப் புத்​தகத் திரு​விழா நடத்​தப்​பட்​டது. இதற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்​தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும், புத்​தகத் திரு​விழாவுக்கு ஏற்பாடு செய்​யப்​பட்டுள் ​ளது. டிசம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சிவாஜி நகர் அருகிலுள்ள‌ இன்ஸ்​டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்​தில் இந்த புத்​தகத் திரு​விழாவை இஸ்ரோ … Read more

சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் நடந்தது என்ன?

புதுடெல்லி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியான வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரான ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் … Read more