ரவுடிகளுடன் சேர்ந்து மது அருந்திய போலீஸ் அதிகாரி சஸ்பெண்டு

திருவனந்தபுரம்: கேரளாவில் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுபற்றி சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பதிவிடப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் ரவுடிகளுடன் சேர்ந்து மது அருந்தும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இது போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இச்சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. நிஷாந்தினி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ரவுடிகளுடன் சேர்ந்து மது அருந்தியது போத்தன் … Read more

இலங்கை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு பெற்றது.!

யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில்இருந்து குறைவான பக்தர்களே வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். காலை திருப்பலி முடிந்தவுடன் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.‌ இதனை தொடர்ந்து … Read more

உ.பி.யில் எம்எல்ஏ பதவியை கைவிடுகிறாரா அகிலேஷ் யாதவ்?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ பதவியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எஸ்பி சிங் பாகெலை அகிலேஷ் 67 ஆயிரத்து 504 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்குமுன் அவர் முதல்வராக இருந்தபோதிலும் மேல்சபை உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், நேரடி தேர்தலில் முதல்முறை … Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தை பைனாகுலரில் கண்காணித்த சமாஜ்வாதி வேட்பாளர் தோல்வி

லக்னோ: உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்தத் தேர்தலில் ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக போட்டியிட்டவர் யோகேஷ் வர்மா. வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக வதந்திகள் பரவின. இதையடுத்து, ஹஸ்தினாபூர் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மையத்துக்கு யோகேஷ் வர்மா சென்றார். அந்த மையத்துக்கு வெளியே தொலைவில் இருந்தபடியே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளை … Read more

இந்தியாவில் புதிதாக 3,614 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 4 ஆயிரத்திற்குள் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 8-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 3,993 ஆக இருந்தது. இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்றைய பாதிப்பு மீண்டும் 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 87 ஆயிரத்து 875 ஆக உயர்ந்தது. கொரோனா … Read more

கொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா… தினசரி பாதிப்பு, பலி எண்ணிக்கை 3,614, 89 ஆக குறைவு!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,614 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,87,875ஆக உயர்ந்தது.* புதிதாக 89 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினரின் என்கவுண்ட்டர் – 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால், புல்வாமா மற்றும் ஹந்த்வாரா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது இது தொடர்பான தகவல்களை பகிர்ந்த காஷ்மீர் ஐஜிபி, “நேற்று இரவு நான்கு – ஐந்து இடங்களில் நாங்கள் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டோம். இந்த நடவடிக்கையில் புல்வாமாவில் ஒரு பாகிஸ்தானியர் உட்பட ஜெய்ஷ் இ-முகமது அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் ஒரு லஷ்கர் அமைப்பை சேர்ந்த  … Read more

கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி: பிரசாந்த் கிஷோருக்கு சறுக்கல்

பனாஜி: கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு மம்தா தனது தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்படி கோவா தேர்தலில் அவரது திரிணமூல் கட்சி, எம்ஜிபி உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் எம்ஜிபி 2 இடத்தில் வென்ற நிலையில் திரிணமூல் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேற்கு வங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகம் … Read more

ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமுக்கும் ரஷ்யா தடை.. ரஷ்ய அரசு செய்தி ஊடகங்களுக்கு தடை விதித்தது யூடியூப் நிறுவனம்!!

வாஷிங்டன் ; அமெரிக்க தலைமையிலான மேற்குலகுடன் மட்டுமின்றி அவற்றை மையமாக கொண்ட தொழில்நுட்ப உலகின் பெரு நிறுவனங்கள் உடனும் ரஷ்யாவின் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஷ்யர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடலாம் என்ற இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தின் அறிவிப்பு ரஷ்ய அரசை ஆத்திரமூட்டி உள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் இன்ஸ்ட்டாகிராமுக்கு தடை விதித்துள்ள அந்நாட்டின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், அதன் செயல்பாட்டை 48 மணி நேரத்தில் முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. … Read more

Paytm-க்கு ரிசரவ் வங்கி விதித்த தடை… எதற்கு?

பேடிஎம் பேமெண்ட் வங்கி புதிய வாடிக்கையாளரை இணைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தர்விட்டிருக்கிறது. என்ன காரணம் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஆனால் தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள சிக்கல் காரணமாக இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் கேஒய்சி, தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் குறைப்பாடு இருப்பதாக தெரிகிறது. இதனை களைவதற்காக ஐடி துறையில் ஆடிட் நிறுவனத்தை நியமனம் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. அந்த நிறுவனம் கொடுக்கும் அறிக்கையை வைத்துதான் புதிய வாடிக்கையாளர்களை … Read more