தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி: ஒரே நாடு, தேசியக் கட்சி?

யதேச்சாதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரே வழி எதிரிலிருப்பவர்களை முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்து பலவீனப்படுத்துவதுதான். கூடவே, நமக்கு எதிரே நிற்பவர்கள் யார் எவர் என்பதைத் தீர்மானிக்கும் ஆற்றலும் கிடைத்தால் எப்படியிருக்கும்? சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அப்படியொரு ஆற்றலுடன் யதேச்சாதிகாரத்தை எட்டுவதை நோக்கி பாஜக சென்றுகொண்டிருப்பதையே காட்டுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், தேசியக் கட்சி எனும் தகுதியைத் தனக்கு மட்டுமேயானதாக்கி இதர கட்சிகளில் பலவற்றை எதிர்ப்புறம் ஒரே அணியாகக் கட்ட முயல்கிறது. இந்த ஆட்டத்தில் பலவீனப்பட்டு … Read more

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். புல்வாமாவின் ஷுவாக்லன் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் … Read more

உக்ரைனில் மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர்

டெல்லி: உக்ரைனில் மீட்கப்பட்ட 53 தமிழக மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 1,860 மாணவ, மாணவிகளும் மீட்கப்பட்டதற்காக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வென்றுள்ள நிலையில் முதலமைச்சர் தேர்வில் அக்கட்சி தற்போது தீவிரம்காட்டி வருகிறது. 70 இடங்களைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில் 47 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஆனால் காட்டிமா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இந்நிலையில் தாமிக்கே மீண்டும் வாய்ப்பு தரலாமா அல்லது வேறு மூத்த தலைவர்களில் ஒருவரை முதல்வர் நாற்காலியில் அமரவைக்கலாமா என பாஜக ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக மத்திய … Read more

இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானிகள் பயிற்சி விமானம்: ஹன்சா-என்.ஜி.யின் கடல் மட்ட சோதனை வெற்றி

விமானிகள் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஹன்சா-என்.ஜி நவீன பயிற்சி விமானத்தின் கடல் மட்ட சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) ஆய்வுக்கூடங்களில் ஒன்று பெங்களூருவிலுள்ள தேசிய விமானவியல் ஆய்வகம் (என்ஏஎல்). இந்த ஆய்வகம், விமானி பயிற்சிக்காக ஹன்சா என்ற இரு நபர் விமானத்தை 1993-ல் உருவாக்கியது. மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டபுதிய தலைமுறை ஹன்சா – என்.ஜி (New Generation) என்ற அடையாளத்தோடு செப்.2021-ல் முதன்முதலாக பறக்க விடப்பட்டது. … Read more

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சரிந்தது: 4,194 புதிய பாதிப்பு 255 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு, பலி விவரங்கள் பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:* நேற்று ஒரே நாளில் புதிதாக 4,194 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,84,261 ஆக உள்ளது.* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 255 … Read more

பெண் ஊழியர்களுக்கான இடமாற்றக் கொள்கையை கருணை அடிப்படையில் உருவாக்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: பெண் ஊழியர்களுக்கான இடமாற்றக் கொள்கைகளை கருணை அடிப்படையில் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட ஆணையங்களுக்கு இடையேயான இடமாற்றங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில்தலையிட … Read more

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று பகலிரவு ஆட்டம்.!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.  இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியினை இந்தியா டிரா செய்தாலே தொடரை  கைப்பற்றி விடும். இருந்தாலும் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும் முயற்சியில் இந்திய அணியினர் … Read more

தாமரை சின்னத்துடன் பாஜக வடிவமைத்துள்ள காவி நிற தொப்பி- தொண்டர்கள் உற்சாகம்

அகமதாபாத்: தமது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து தொடங்கி சாலை வழியே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திறந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.  அப்போது சாலைகளில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, புதிதாக வடிவமைக்கப்பட்ட காவி வண்ண தொப்பியை அணிந்திருந்தார்.   குஜராத்தில் பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அம்மாநில பாஜக நிர்வாகிகளும் இந்த தொப்பியை அணிந்திருந்தனர்.இது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. குஜராத் பாஜக இந்த தொப்பியை … Read more

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

புதுடெல்லி: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விலகியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி நடிகர் ஏழுமலை,  பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்தார். மேலும், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரையில் அரசு நியமித்த தனி அதிகாரியே சங்க நிர்வாகத்தை  தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் … Read more